தோசை, இட்லி, சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் வாழைப்பூ குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
வாழைப்பூ குருமா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
வாழைப்பூ (பொடியாக நறுக்கியது) – 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 1
மிளகாய் வற்றல் – 4
சோம்பு – 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை – 4 டீஸ்பூன்
பச்சைப் பட்டாணி – 1 கப்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
தனியா – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
கடுகு – 1 டீஸ்பூன்
முந்திரி – 4
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
செய்முறை :
பட்டாணியையும் வாழைப்பூவையும் வேகவைத்து எடுங்கள்.
கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகாய் வற்றல், சோம்பு, பொட்டுக்கடலை, தனியா, முந்திரி ஆகியவற்றை ஊறவைத்து அவற்றுடன் தேங்காய் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்குங்கள்.
தக்காளி குழைய வெந்ததும் வேகவைத்த வாழைப்பூவையும் பட்டாணியையும் சேர்த்துக் கிளறுங்கள்.
அடுத்து அதில் அரைத்த விழுதை ஊற்றி, கரம் மசாலா துள், மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.
குழம்பு திக்கான பதம் வந்ததும் கடுகு தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி இறக்குங்கள்.
சூப்பரான வாழைப்பூ குருமா ரெடி.
The post சூப்பரான வாழைப்பூ குருமா ரெடி appeared first on SwasthikTv.