கீழே உள்ள அங்காளம்மன் ஸ்லோகத்தை தினமும் சொல்லி உங்களின் பொருளாதார கடன் சம்பந்தமான பிரச்சனைகளை போக்குமாறு அம்மனை மனதார வழிபட வேண்டும்.
அங்காளம்மன்ஓங்கார உருவினளே ஓம் சக்தி ஆனவளே
ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே
பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே
அருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே
அனைவருக்கும் அனைத்தையும் வழங்குபவள் ஸ்ரீ அங்காளம்மன். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் குளித்து முடித்ததும், இந்த அம்மனின் படம் உங்கள் பூஜையறையில் இருந்தாலோ அல்லது அருகில் அங்காளம்மன் கோவில் இருந்தாலோ அங்கு சென்று ஒரு நெய்தீபம் ஏற்றி, இந்த அங்காளம்மன் சுலோகத்தை 27 முறை அல்லது 108 முறை உரு ஜெபித்து, உங்களின் பொருளாதார கடன் சம்பந்தமான பிரச்சனைகளை போக்குமாறு அம்மனை மனதார வழிபட வேண்டும். இப்படி சில வாரங்கள் செய்து வர உங்களின் அனைத்து கஷ்டத்தையும் போக்கி அருள்புரிவாள் அங்காளம்மன்.
The post கடன் பிரச்சனை தீர்க்கும் அங்காளம்மன் ஸ்லோகம் appeared first on SwasthikTv.