Parigaarangal
பரிகாரம் என்றால் என்ன என்று அறிவதற்கு முன், தோசம் பற்றி அறிந்து கொள்வோம். பெரும்பாலும் ஜோதிடத்தில் சம்ஸ்கிருத வார்த்தைகளே பயன்படுத்தபடுகிறது. தோசம் (அ) தோசா என்ற சொல் கூட சமஸ்கிருத பின்னணி கொண்டது தான். தோசம் என்றால் குறைபாடு அல்லது ஒவ்வாமை என்று பொருள். கிரக தோசம் என்றால் அந்த கிரகத்தின் பண்புகள் (காரகத்துவம்) குறைவாகவோ அல்லது அளவுக்கு அதிகமாகவோ கிடைப்பது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப, அளவுக்கு அதிகமாக கிடைக்கும் அசுப மற்றும் சுப கிரக பண்புகள் எதோ ஒருவிதத்தில் மனித உடலை அல்லது மனதை பாதிக்கிறது.
பரிகாரம் பற்றிய விளக்கம்
==========================
பரிகாரம் என்பதை பரி + காரம் என்று பிரித்து பொருள் காணவேண்டும். ஏற்கெனவே சொல்லிது போல் பரிகாரம் என்பது சமஸ்கிருத வார்த்தையே. பரி – இணையான, காரம் அல்லது காரகம் – செயல் அல்லது வினை. இதன் முழு பொருள் இணையான செயல்.
கிரக பண்புகளால் பாதிக்கப்படும் மனிதனின் உடலை பாதுகாக்கவே இந்த பரிகாரங்கள். பரிகாரம் என்பதன் சரியான அர்த்தம் இணையான செயல் இதனை மாற்று செயல் என்றும் கூறலாம். ஒரு வினையை சமன்படுத்தும் அதற்கு எதிரான இன்னொரு வினை அல்லது செயல். இதுவே பரிகாரம் என்பதன் எளிய அர்த்தம்.
கிரகங்கள் மிக பெரியவை அவற்றின் இயக்கத்தை யாராலும் கட்டுபடுத்த முடியாது என்பது நிதர்ச உண்மை. ஆனால் அவற்றின் பண்புகள் பூமியில் பிரதிபலிக்கும், அந்த பிரதிபலிப்பால் உண்டாகும் பாதிப்புகளை போக்க அதற்கு இணையான செயல்களால் செய்து மாற்றலாம்.
The post Parigaarangal By Jothida ratna Dr.Sri Kumar – 18/10/2016 appeared first on Swasthiktv.