Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

ஆபத்தை நீக்கி வெற்றியை தரும் ஒப்பிலாமணீஸ்வரர்

$
0
0

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ள அறகண்டநல்லூரில் மூன்றாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளது.

இங்கு தாயார் சவுந்தர்ய கணகாம்பிகையுடன் ஒப்பிலா மணீஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார்.

அரசாட்சி செய்பவர்களின் ஆபத்துக்களை நீக்கி வெற்றிக்கு வழிக்காட்டும் தலமாக இத்தலம் விளங்குகிறது.

பல்லவர் கால விநாயகர் :

 நீலகண்ட முனிவர் என்பவரே, முதன் முதலில் இத்தலத்தில் வழிபட்டு பூஜைகள் செய்துள்ளார். அதன்பிறகே இங்கு கோவில் எழுப்பப்பட்டது என தலவரலாறு கூறுகிறது. பல்லவர் கால விநாயகர், பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கிறார். இவரின் கண்கள் இரண்டும் வலது, இடது என நாம் எந்த இடத்தில் நின்று நோக்கினாலும், அவர் நம்மை மட்டுமே பார்ப்பதாகக் காட்சி தருவது அதிசயமான நிகழ்வாகும். இந்த விநாயகர் பத்மாசனத்தில், மேல் இரு கரங்களில் ஒன்றில் யோக தண்டம் ஏந்தியும், மற்றொன்றில் ஜெப மாலை, கீழ் இரு கரங்களில் ஒன்றில் ஓலைச்சுவடியும், மற்றொன்றில் கரும்பும் ஏந்தி காட்சி தருகிறார். இவரின் பார்வை அதிசயத்தை இன்றும் கண்டு வியந்து செல்கின்றனர்.

எவருக்கும் ஒப்பு இல்லாத இறைவன் :

 thirukovilur-veeratteswarar-temple-4இத்தலத்து இறைவன் பெயர் ஒப்பிலாமணீஸ்வரர் என்பதாகும். எவருக்கும் ஒப்பு இல்லாத இறைவன் என்பதும், இந்தத் திருப்பெயரில் வீற்றிருப்பவர் இவர் ஒருவரே என்பதும் தனிச் சிறப்பாகும். வடக்கு நோக்கிய முருகப்பெருமான், ஆறு கரங்களுடன் ஒரு முகமாக காட்சி தருவதும், தெற்குநோக்கிய எழிலான துர்க்கையும் குறிப்பிடத்தக்கவை. திருவண்ணாமலையில் லிங்கங்களாகவே இருக்கும் என்பதைக் குறிப்பால் உணர்ந்த திருஞானசம்பந்தர், இப்பாறை மீது நின்று, திருவண்ணாமலைப் பதிகம் பாடினார் என்பது வரலாறு. இவரின் கல்திருமேனி கருவறை வெளிப்புறம் அமைந்துள்ளது. சனி பகவான் காகத்தின் மீது, ஒரு காலை ஊன்றி காட்சி தருகின்றார். இது ஒரு அபூர்வக் கோலமாகும்.

 தென்பெண்ணையாற்றின் வடகரையோரம், எழிலான பாறையின் மீது தெற்கு நோக்கிய ஏழுநிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது. sவெளியே தென்புறம் ஐந்து குடைவரை அறைகள் அமைந்துள்ளன. இது சமணர்கள் குகை என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். என்றாலும், இதனை பஞ்சபாண்டவர் குகை என்று இந்தப் பகுதியில் அழைக்கின்றனர். இங்குள்ள சுனை ‘பீமன் சுனை’ என்று அழைக்கப்படுகிறது.

இது மூன்றாம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்டதாகும் :

 60998111அதன் அருகே திருஞானசம்பந்தரின் திருப்பாதங்கள் பீடத்தின் மீது பதிந்து திருவண்ணாமலையை நோக்கியவாறு அமைந்துள்ளது. மேற்கு நோக்கிய சன்னிதியில் நந்திதேவர் கிழக்கு பார்க்க, இறைவன் ஒப்பிலாமணீஸ்வரர் மேற்கு முகமாய்க் காட்சி தருகிறார். இவருக்கு அதுல்யநாதேஸ்வரர், அறையணிநாதர் என்ற பெயர் களும் உள்ளன. அம்மன் சன்னிதி தனியே கிழக்கு முகமாய் இருக் கிறது. இது மூன்றாம் ராஜேந்திர சோழனால்  உருவாக்கப்பட்டதாகும். அன்னை எழிலாக நின்ற கோலத்தில், எளிய வடிவில் அருள் வழங்குகின்றாள். அன்னை அழகிய பொன்னம்மை, அருள்நாயகி, சவுந்தர்ய கனகாம்பிகை என பலவாறு அழைக்கப்படுகிறாள். இத்தலம் அரசாங்கத்தில் ஏற்படும் குழப்பங்களைத் தீர்க்க வழிகாட்டும் தலமாகவும், அரசாள்வோர் ஆபத்துக்களை நீக்கி வெற்றிக்கு வழிகாட்டும் பரிகாரத் தலமாகவும் அமைந்துள்ளது.

 இதே போல, இத்தலம் தொழுவோரின் கர்ம வினைகள் அனைத்தையும் நீக்கும் என்பதை, ‘பரவுவார் பழி நீங்கிடப் பறையுந்தாஞ் செய்த பாவமே’ என்ற வரிகளும், ‘வாரமாய் நினைப்பார் கடம் வல்வினை அவை மாயுமே’ என்ற வரிகளும் உறுதிப்படுத்துகின்றன. இந்தத் திருத்தலத்திற்கு அறைகண்ட நல்லூர் என்பது தொன்மைப் பெயராகும். அறை என்பதற்கு ‘பாறை’ என்று பொருள் வழங்கப்படுகிறது. அறையணிநல்லூர் என்ற பெயரும் உண்டு. மேலும், இந்தப் பகுதியை ஆட்சி செய்த தெய்வீகமன்னன் என்பவன், தனது திருமணத்தின் போது, பல அறங்களைச் செய்தான். எனவே இத்தலம் அறங்கண்ட நல்லூர் என்று பெயர்பெற்றது என்றும் கூறுவர். அறங்கண்ட நல்லூரே மருவி, அரகண்டநல்லூராக அழைக்கப்படுகிறது.

தொடர்புக்கு:  9944238917

அமைவிடம்:

  திருவண்ணாமலையில் இருந்து 40 கி.மி. தூரத்திலும் விழுப்புரத்தில் இருந்து 35 கி.மி. தூரத்தில் உள்ளது.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post ஆபத்தை நீக்கி வெற்றியை தரும் ஒப்பிலாமணீஸ்வரர் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Latest Images

Trending Articles


சாலை விபத்துகளும், அவற்றைத் தடுப்பதற்கான சட்டத் தேவைகளும்..!


சித்தன் அருள் - 768 - தாமிரபரணி புஷ்கரம், அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர்!


விருப்பங்கள் நிறைவேற காமாட்சி தேவி மந்திரம்


சென்ற வார பாக்யா ஜனவரி 20-26 இதழில் என் ஜோக்ஸ்!


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


என்னிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட சீரியல் குழு அதிகாரி: நடிகை திவ்யா!


சோழர் பாசன திட்டம் என்றால் என்ன? அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை-பின்னணி...


வெண்முரசு- குருபூர்ணிமா சிறப்புச் சலுகை


தொ.மு.சியின் புதுமைப்பித்தன் -கிருஷ்ணன் சங்கரன்


தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>