Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

மறுவாழ்வு தரும் சோளசிம்மபுரம் யோக நரசிம்மர்

$
0
0

  வேலூர் மாவட்டத்தை அடுத்துள்ள சோளிங்கரில் (திருக்கடிகை சோளசிம்மபுரம்) 500 அடி உயரம் உள்ள கடிகாசலம் என்ற பெரிய மலையின் உள்ளது.

 இங்கு தாயார் அமிர்த வள்ளியுடன் யோக நரசிம்மர் (அக்காரக்கனி) என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இவரை புத்தி சுவாதினம் இல்லதவர்களும், பில்லி சூன்யம் ஏவலால் பாதிக்கப்பட்டவர்களும், குழந்தை இல்லாத தம்பதிகளும், நீண்ட நாள் திருமணம் ஆகாதவர்களும் இவரை தரிசித்தால் பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

  பிராத்தனைகள் நிறைவேறியதும் கல்கண்டு, வெல்லம், வாழைப்பழம் படைத்தல், வேட்டி சேலை படைத்து அபிஷேகம் ஆராதனை செய்து இங்கு முக்கிய நேர்த்தி கடனாக பக்தர்கள் கடைப்பிடிக்கிறார்கள்.

 பெருமாளின் மங்களா சாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 65-வது திவ்ய தேசம் ஆகும். இத்தலத்தில் நரசிம்மரும் ஆஞ்சநோயரும் யோகசனத்தில் அமர்ந்து இருப்பது இக்கோவிலின் சிறப்பு.

 சிம்ஹா கோஷ்டாக்ருதி விமானத்தின் கீழ் இங்கு அருள்பாலிக்கிறார், மலைக்கோவிலின் நீளம் 200 அடி அகலம் 150 அடி ஏறத்தாழ 1 ஏக்கர் பரப்பில் 750 அடி உயரத்தில் 1305 படிகட்டுகளோடு மலை மீது அமைந்துள்ள வனப்புமிக்க தலம்.

 பொதுவாக பெருமாள் கோயில்களில் மூலவரின் கருவறையிலேயே, உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வர். ஆனால் சோளிங்கரில் மட்டும் யோக நரசிம்மர், மூலவர் மட்டுமே கிழக்கு நோக்கியபடி, சிம்ம சோஷ்டாக்ருதி விமானத்துடன் கூடிய கருவறையில் சேவை சாதிக்கிறார். மூலவர் யோக நரசிம்மசுவாமி சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களுடன், இருகால்களையும் யோகாசனத்தில் மடித்து அமர்ந்தபடி யோகப்பட்டையுடன் காட்சி தருகிறார்.

 விசுவாமித்திரர், ஒரு கடிகை நேரம் இம்மலையில் இருந்து இத்தலத்து இறைவனை வழிபட்டு பிரம்மரிஷி பட்டமும் பெற்றதாக வரலாறு உள்ளது. பக்தன் பிரகலாதனுக்கு காட்சி தந்த நரசிம்ம அவதார திருக்கோலத்தை தாங்களும் கண்டு ஆனந்திக்க வேண்டுமென வசிஷ்டர், காசியபர், அத்ரி, ஜமதக்னி, கவுதமர், பாரத்துவாஜர் ஆகிய முனிசிரேஷ்டர்களோடு, விசுவாமித்திரர் இத்திருத்தலத்தில் தவமிருந்தார்.

  கடிகாசலத்தில் தவம் மேற்கொண்டிருந்த சப்தரிஷிகளுக்கு காலன், கேயன் எனும் இரு அரக்கர்கள் தொல்லை கொடுத்து வந்தனர். அவர்களை வதம் செய்வதற்காக ஆஞ்சநேயர், எம்பெருமானின் சங்கு சக்கரங்களை வேண்டிப் பெற்று அவற்றின் துணையோடு, அரக்கர்களை அழித்தார். மகரிஷிகள் எழுவரின் தவத்தினை  திருமாலும், திருக்கடிகைக்கு எழுந்தருளி நரசிம்ம மூர்த்தியாகக் காட்சியளித்தார். ஆஞ்சநேயரும் நரசிம்ம அவதாரக் காட்சியைக் கண்டு ஆனந்தத்தோடு, சங்கு சக்கரத்தோடு பெரியமலைக்கு எதிரில் யோக ஆஞ்சநேயராக அமர்ந்துவிட்டார்.

 இம்மலையின் அருகே எதிர்திசையில் சிறிய மலையின் மீது ஆஞ்சநேயர் தியான நிலையில் அமர்ந்தபடி பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார். ஆண்டு முழுவதும் கண் மூடிய நிலையில் தியானத்தில் இருக்கும் யோக நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பதாகவும்  ஐதீகம்.

 உற்சவர் பக்தோசித பெருமாள், சுதாவல்லி, அமிர்தவல்லி எனும் தனது இருதேவியருடன், மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் தனிக்கோயில் கொண்டுள்ளார். அங்கு அமிர்தவல்லித் தாயார் தனித்தனி சன்னதி கொண்டுள்ளார். பில்லி, சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பிரம்மதீர்த்தத்தில் நீராடி மலைமீது அமர்ந்து அருள்பாலிக்கும் யோகநரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் வணங்கினால் நோய்கள் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை.

தொடர்புக்கு:

      91-4172-260255

அமைவிடம்:

   சென்னையில் இருந்து 95 கி.மி தூரத்திலும் வேலூரில் இருந்து 60 கி.மி. தூரத்தில் அமைந்துள்ளது.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post மறுவாழ்வு தரும் சோளசிம்மபுரம் யோக நரசிம்மர் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>