- இன்றைய ராசி பலன் 17-12-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
- பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன?
- மேஷம்,
ரிஷபம்,
மிதுனம்,
கடகம்,
சிம்மம்,
கன்னி,
துலாம்,
விருச்சிகம்,
தனுசு,
மகரம்,
கும்பம்,
மீனம். - ராசி அதிபதிகளின் பெயர் என்ன?
- மேஷம் – செவ்வாய்
ரிஷபம் – சுக்கிரன்
மிதுனம் – புதன்
கடகம் – சந்திரன்
சிம்மம் – சூரியன்
கன்னி – புதன்
துலாம் – சுக்கிரன்
விருச்சிகம் – செவ்வாய்
தனுசு – குரு
மகரம் – சனி
கும்பம் – சனி
மீனம் – குரு - லக்கினம் என்பது என்ன?
- ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை வானத்தில் எந்த ராசியைப் பார்த்தவாறு ஜனித்திருக்கிறதோ அதுதான் அந்தக் குழந்தையின் பிறந்த லக்கினம் உதாரணம். சித்திரை மாதம் முதல் தேதியன்று (That is on April 14th) காலை 6 மணி முதல் 8 மணி வரை மேஷ லக்கினம்.ஆவணி மாதம் (August 17th or 18th) அதே காலை நேரத்தில் உதய லக்கினம் சிம்மம் இப்படி. அதையடுத்து ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் அடுத்தடுத்த லக்கினம் வரிசைப்படி மாறிக்கொண்டிருக்கும்.
- லக்கினத்தை வைத்து ஒவ்வொருவீட்டையும் எண்ணிப்பார்க்கும் முறை என்ன?
- லக்னம் இருக்கும் ராசி முதல் வீடு. அதில் இருந்து கடிகார சுற்றுப்படி
- வந்தால் ஒவ்வொரு ராசியும் 2,3,4,5,6,7,8,9,10,11, 12 என்று வரிசைப்படி வரும்.
- சந்திர ராசி என்றால் என்ன? அது எதை ஆதாரமாகக் கொண்டது?
- ஒரு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசி, சந்திர ராசி எனப்படும்.அது ஜாதகன் பிறந்த நட்சத்திரத்தை ஆதாரமாகக் கொண்டது.
- லக்கினம் எதற்குப் பயன்படும்? சந்திர ராசி எதற்குப் பயன்படும்?
- பிறந்த ஜாதகம் (Birth Chart) என்பது வாகனம்
- கோச்சாரம் (கோள் சாரம் – Transit of planets) என்பது என்ன?
- ஒவ்வொரு கோளும் வானவெளியில் சுழன்று ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியில் இடம் பெயர்ந்து அமருவதே கோள்சாரம் எனப்படும்.
- தசா / புத்தி என்பது என்ன? அதன் பயன் என்ன?
- ஜாதகன் பிறந்த நட்சத்திரத்திற்கு அதிபதியான கிரகம் எதுவோ அதற்குரிய தசாதான் ஜாதகனின் ஆரம்ப தசா, அதை அடுத்து ஒவ்வொரு தசாவாக மாறிக் கொண்டே வரும் மொத்த தசா காலம் 120
- ஆண்டுகள். ஒவ்வொரு தசாவையும் மற்ற கோள்கள் பங்குபோட்டுக் கொள்ளும். அதற்கு புத்தி என்று பெயர் (Sub period). ஒவ்வொருகிரகமும் அதன் தசாவில் அல்லது புத்தியில்தான் தனக்குரிய நல்ல அல்லது தீய பலன்களைக் கொடுக்கும்
- தசா புத்திகள் எதை வைத்து ஆரம்பிக்கின்றன?
- ஒரு ஜாதகரின் பிறந்த நட்சத்திரத்தின் அதிபதியின் தசைதான் துவக்க தசை.
- தசா புத்திகளின் கால அளவு, மற்றும் வரிசை என்ன?
- சூரிய தசை – 6 ஆண்டுகள்
சந்திர தசை – 10 ஆண்டுகள்
செவ்வாய் தசை – 7 ஆண்டுகள்
ராகு தசை – 18 ஆண்டுகள்
குரு தசை – 16 ஆண்டுகள்
சனி தசை – 19 ஆண்டுகள்
புதன் தசை – 17 ஆண்டுகள்
கேது தசை – 7 ஆண்டுகள்
சுக்கிர தசை – 20 ஆண்டுகள்
The post இன்றைய ராசி பலன் 17-12-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.