இன்றைய ராசி பலன் 17-01-2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன?
மேஷம்,
ரிஷபம்,
மிதுனம்,
கடகம்,
சிம்மம்,
கன்னி,
துலாம்,
விருச்சிகம்,
தனுசு,
மகரம்,
கும்பம்,
மீனம்.
ராசி அதிபதிகளின் பெயர் என்ன?
மேஷம் – செவ்வாய்
ரிஷபம் – சுக்கிரன்
மிதுனம் – புதன்
கடகம் – சந்திரன்
சிம்மம் – சூரியன்
கன்னி – புதன்
துலாம் – சுக்கிரன்
விருச்சிகம் – செவ்வாய்
தனுசு – குரு
மகரம் – சனி
கும்பம் – சனி
மீனம் – குரு
லக்கினம் என்பது என்ன?
ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை வானத்தில் எந்த ராசியைப் பார்த்தவாறு ஜனித்திருக்கிறதோ அதுதான் அந்தக் குழந்தையின் பிறந்த லக்கினம் உதாரணம். சித்திரை மாதம் முதல் தேதியன்று (That is on April 14th) காலை 6 மணி முதல் 8 மணி வரை மேஷ லக்கினம்.ஆவணி மாதம் (August 17th or 18th) அதே காலை நேரத்தில் உதய லக்கினம் சிம்மம் இப்படி. அதையடுத்து ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் அடுத்தடுத்த லக்கினம் வரிசைப்படி மாறிக்கொண்டிருக்கும்.
லக்கினத்தை வைத்து ஒவ்வொருவீட்டையும் எண்ணிப்பார்க்கும் முறை என்ன?
லக்னம் இருக்கும் ராசி முதல் வீடு. அதில் இருந்து கடிகார சுற்றுப்படி
வந்தால் ஒவ்வொரு ராசியும் 2,3,4,5,6,7,8,9,10,11, 12 என்று வரிசைப்படி வரும்.
சந்திர ராசி என்றால் என்ன? அது எதை ஆதாரமாகக் கொண்டது?
ஒரு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசி, சந்திர ராசி எனப்படும்.அது ஜாதகன் பிறந்த நட்சத்திரத்தை ஆதாரமாகக் கொண்டது.
லக்கினம் எதற்குப் பயன்படும்? சந்திர ராசி எதற்குப் பயன்படும்?
பிறந்த ஜாதகம் (Birth Chart) என்பது வாகனம்
கோச்சாரம் (கோள் சாரம் – Transit of planets) என்பது என்ன?
ஒவ்வொரு கோளும் வானவெளியில் சுழன்று ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியில் இடம் பெயர்ந்து அமருவதே கோள்சாரம் எனப்படும்.
தசா / புத்தி என்பது என்ன? அதன் பயன் என்ன?
ஜாதகன் பிறந்த நட்சத்திரத்திற்கு அதிபதியான கிரகம் எதுவோ அதற்குரிய தசாதான் ஜாதகனின் ஆரம்ப தசா, அதை அடுத்து ஒவ்வொரு தசாவாக மாறிக் கொண்டே வரும் மொத்த தசா காலம் 120
ஆண்டுகள். ஒவ்வொரு தசாவையும் மற்ற கோள்கள் பங்குபோட்டுக் கொள்ளும். அதற்கு புத்தி என்று பெயர் (Sub period). ஒவ்வொருகிரகமும் அதன் தசாவில் அல்லது புத்தியில்தான் தனக்குரிய நல்ல அல்லது தீய பலன்களைக் கொடுக்கும்
தசா புத்திகள் எதை வைத்து ஆரம்பிக்கின்றன?
ஒரு ஜாதகரின் பிறந்த நட்சத்திரத்தின் அதிபதியின் தசைதான் துவக்க தசை.
தசா புத்திகளின் கால அளவு, மற்றும் வரிசை என்ன?
சூரிய தசை – 6 ஆண்டுகள்
சந்திர தசை – 10 ஆண்டுகள்
செவ்வாய் தசை – 7 ஆண்டுகள்
ராகு தசை – 18 ஆண்டுகள்
குரு தசை – 16 ஆண்டுகள்
சனி தசை – 19 ஆண்டுகள்
புதன் தசை – 17 ஆண்டுகள்
கேது தசை – 7 ஆண்டுகள்
சுக்கிர தசை – 20 ஆண்டுகள்
The post இன்றைய ராசி பலன் 17-01-2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.