“கோள்களின் நகர்வுகளை அறிந்து கொண்டால் பரம்பொருளான கடவுளின் நிலையை அடைய முடியும்,” என வானவியல் அறிஞர் ஆர்யபட்டா கூறியுள்ளார்”.
“கோள்களின் நகர்வு பற்றி அறிந்தவர்கள் நல்ல பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்”, என யஜுர் வேத ஜோதிடம் கூறுகிறது.
கோள்கள் இடம் விட்டு இடம் மாறும் சமயம், மனிதர்களுக்கும் அவர்கள் பிறந்த நேரத்தின்படி, அவர்களது ஜன்ம நட்சத்திரத்தின் பலன்களை துல்லியமாக கணிக்க முடியும்.
அடுத்த சுழற்சியின்பொழுது, அதற்கேற்றபடி ஏற்ற இறக்கங்களை காண முடியும் என்கின்றனர். உரிய பரிகாரம் செய்ய தாக்கத்தின் உக்கிரம் குறைந்து தாங்கிக் கொள்ள சூழ்நிலை உண்டாவதை அறியலாம். தொழில்களிலும், பணியாற்றும் இடத்திலும், கல்வி பயிற்சியிலும் மாற்றம் ஏற்படும்.
” நாம் கிரகங்கள், நட்சத்திரங்களில் இருந்து தான் பிறந்திருக்கிறோம். நம் பூர்வீகமே நட்சத்திரங்கள் தான். அவைகளைப் பற்றி எந்த அளவுக்கு அறிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நம்முடைய எதிர்காலம் நன்றாக அமையும்.”
சனீஸ்வரர் பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிப்பட்டால் 7½ரையும் விலகி 8 ஆகும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.
‘நன்றிதமு சனிகவச நாள்தோறும்
அன்பினொடு நவின்று போற்றில்
வென்றிதரும் விறல் உதவும் புகழ் அளிக்கும்
பெருவாழ்வு மேவ நல்கும்
கன்றுபவத் துயரொழிக்கும் வினை ஒழிக்கும்
பணி ஒழிக்கும் கவலி போக்கும்
அன்றியும் உள் நினைந்தவெல்லாம் அங்கை நெல்லி
யம்கனியாம் அவனி யோர்க்கே”
(சனி கவசத்திலிருந்து சில வரிகள்)
ஏழரைச்சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி இவைகள் தங்கள் வாழ்க்கையில் பெரும் பின்னடவை ஏற்படுத்தும் என நினைக்கிறார்கள். இதற்காக பல பரிகாரங்களைச் செய்கிறார்கள்.
அதில் தவறில்லை. ஆனால், செலவே இல்லாமல் எளிய அறிவியல் பரிகாரம் ஒன்று உள்ளது. நம் பூர்வீகமே நட்சத்திரங்கள் தான். அவைகளைப் பற்றி எந்த அளவுக்கு அறிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நம்முடைய எதிர்காலம் நன்றாக அமையும். கிரகம், நட்சத்திரங்களை நோக்கி தியானம் செய்தால் நற்பலனை நிச்சயம் நம்மால் பெற முடியும்.
சூரியனுக்கு அருகில் சனி இருப்பதாக மனதில் கற்பனை செய்து, சனீஸ்வரா! எனக்கு உன்னால் வரும் கெடுபலன்களில் இருந்து காப்பாற்று, என மனதால் தியானம் செய்ய வேண்டும். இந்த முறையில் இரவில் அல்லது பகலில் எந்த நேரத்திலும் மனத்திரையில் கண்டு தியானிக்கலாம்.
சனி மட்டுமல்ல! பிற கிரகப்பெயர்ச்சிகளால் நமக்கு பிரச்சனை இருந்தாலும், சம்பந்தப்பட்ட கிரகங்களுடன் ஒன்றாகவோ அல்லது குறிப்பிட்ட கிரகத்துடன் அன்றைய நாளில் சம்பந்தப்பட்ட நட்சத்திரத்துடன் ஒன்றிக் கலந்தோ உயிர்க்கலப்பு பெறலாம்.
கிரகங்களின் இருப்பிடத்தை மனத்திரையில் கண்டு தியானத்தில் ஆழ்ந்து விடுவதன் மூலம் அவைகளிடம் இருந்து காந்த அலைக்கதிர்களை நம்மால் ஈர்க்க முடியும்.
10 அல்லது 15 நிமிடம் இந்த தியானத்தை செய்வதன் மூலம் கிடைக்கும் பலன், கோயில்களில் நவக்கிரகங்களை வலம் வந்து அடையும் பலனுக்கு ஈடாகவோ இருக்கும்.
உங்கள் பிறந்த நட்சத்திர நாளில், உங்களது நட்சத்திரம் இருக்குமிடத்தை உத்தேசமாகக் கணக்கிட்டு அந்த இடத்திற்கு மனதால் சென்று தியானம் செய்பவர்கள் பிரத்யேக பலனைப் பெற முடியும்.
கிரகங்கள் ஒன்பதும் நம் உடம்பில் ஒவ்வொரு
பாகத்தைக் குறிக்கும்.
சூரியன்- எலும்பு,
சந்திரன்- ரத்தஓட்டம்,
செவ்வாய்- மஜ்ஜை,
புதன்- தோல்,
வியாழன்- மூளை,
சுக்கிரன்- உயிர்ச்சக்தி,
சனி- நரம்பு மண்டலம்.
அந்தந்த உறுப்புகள் நலம் பெற அந்த கிரகத்தை நோக்கி தியானம் செய்யலாம். மொத்தத்தில், இரவு நேரத்தில் மட்டுமே கிரகம், நட்சத்திரங்களைக் கண்டு களிக்கலாம் என்ற நிலையை மாற்றி பிரமிப்பூட்டும் பறவைப்பார்வை மூலம் பகல், இரவு பாகுபாடு இல்லாமல் எந்த நேரத்திலும் மனதை செலுத்தி உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மன ஆரோக்கியத்தை அடையலாம்.
இதை நடைமுறையில் கொண்டு வர நாம் எதையும் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. வீட்டிலேயே அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து, கிரகங்களின் இருப்பிடம் அறிந்து மனம் செலுத்தி தியானம் செய்வதே போதுமானது. இவ்வாறு தொடர்ந்து செய்பவர்கள் வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவது உறுதி.
The post ஏழரை சனிக்கு இந்த பரிகாரங்களை வீட்டில் இருந்தே செய்யலாம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.