Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

மனம், உடல் மேம்பட சிவா யோகா பரிஹாரம்

$
0
0

நெறிவழியே சென்று நேர்மையுள் ஒன்றி தறி இருந்தாற் போலத் தம்மை இருத்திச்

சொறியினும் தாக்கினும் தூண் என்று உணராக் குறிஅறிவாளர்க்கு கூடலும் ஆமே.

 கம்பம்போல் உடல் ஆடாமல் அசையாமல் மூலாதாரம் முதல் தலை உச்சியாகிய சகஸ்ராரம் வரை மேல்நோக்கி உள் உணர்வைச் செலுத்த வேண்டும். உடலைப் பிறர் கீறினாலும் தாக்கினாலும் திடுக்கிட்டு உணர்வு கலையாமல் குறிக்கோளாகிய சிவத்தையே அடையும் முயற்சிய விடாதவர்க்கு யோகம் கைகூடும்.

பேணிற் பிறவா உலகருள் செய்திடும் காணில் தனது கல்வியுளே நிற்கும்

நாணில் நரகநெறிக்கே வழிசெயும் ஊனில் சுடும் அங்கி உத்தமன் தானே.

 இயற்கையிலேயே எல்லா உடலிலும் மயிர்க்காம்பு தோறும், அணுக்கள், திசுக்கள் தோறும் நெருப்பு மேல் நோக்கிப் போகிறது. மூச்சுக்காற்று இரத்தத்தின் மூலம் எல்லா அணுக்களிலும் சென்று அங்கே எரிகிறது, உண்ட உணவு செரிமானத்திற்காக எரிகிறது, இதற்கு மூலமான ஒளியே குண்டலினிதான்.

 நினைவினால் உண்டாகும் தீயும் மந்திர ஒலிமூலம் உண்டாகும் தீயும் முன்பே உடலில் மேல் நோக்கிப்போகும் தீயும் ஆகிய முத்தீ தட்சிணாக்னி, ஆகவநீயம், காருகபத்தியம் ஆகும். இதுவே சந்திர சூரிய அக்னி மண்டலங்களாகும். உடம்பைச் சுடும் அந்த நெருப்பு சிவமாகிய நெருப்பே. உலகின் எல்லா ஒளிக்கும் சிவமே காரணம்.

யோகச் சமாதியின் உள்ளே அகலிடம் யோகச் சமாதியின் உள்ளே உளர் ஒளி

யோகச் சமாதியின் உள்ளே உளசக்தி யோகச் சமாதி உகந்தவர் சித்தரே.

சமாதி யோகம் செய்பவர் உள்ளே பிரபஞ்சம் முழுவதும் அடக்கம். சிவ ஒளியைக் காண்பர். பராசக்தியை உணர்வர். யோகச் சமாதியை மகிழ்ந்து ஏற்பவர் சித்தர்களே.

தாங்குமின் எட்டுத் திசைக்கும் தலைமகன் பூங்கமழ் கோதைப் புரிகுழலாளொடும்

ஆங்கது சேரும் அறிவுடையார்கட்குத் தூங்கொளி நீலம் தொடர்தலும் ஆமே.

எந்த ஆதாரத்திலும் நிற்காமல் தனித்து தொங்குவது போல் நீல ஒளி தொடர்ந்து உயர்ந்து யோகியர்க்கு சகஸ்ராரத்தில் நீலச் சுடர் ஒளியாய் பராசக்தி காட்சி தருவாள்.

நாகமும் ஒன்று படர் ஐந்து நால்-அது போகமும், புற்றில் பொருந்தி நிறைந்தது

ஆகம் இரண்டும் படம் விரித்து ஆட்டு ஒழிந்து ஏகபடம் செய்து உடம்பு இடல் ஆமே.

சூக்கும உடலில் அதே குண்டலினி படம் எடுத்து புலன் அனுபவம் எதுவும் கொள்ளாமல் தூல உடம்பையே மறந்து யோகம் செய்து வாழ்வது இன்னொருவகை. நான்கு என்பது அந்தக்கரணங்கள். ஐந்தலைப்பாம்பு என்பது குண்டலினியையும் புலன் நுகர்ச்சி அனுபவம் ஆகியவையாம். அவை சுருங்கும்போது யோக சித்தி கிட்டும்.

ஆறு அந்தமும் கூடி ஆடும் உடம்பினில் கூறிய ஆதாரம் ஆறும் குறிக்கொள்மின்

ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலாக ஊறிய ஆதாரத்து ஓர் எழுத்தாமே.

ஆகும் உடம்பும் அழிகின்ற அவ்வுடல் போகும் உடம்பும் பொருந்தியவாறுதான்

ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம் ஆகும் உடம்புக்கும் ஆறந்தமாமே.

ஆறு அத்துவாக்களால் உடம்பில் செறிந்துள்ள ஆறு ஆதாரங்களையும் குறித்து அவற்றில் 51 அட்சரங்களையும் சொல்லவும். அது ஓம் எனும் மந்திரப் பொருளை அதிகமாக்கும். மந்திரம் பதம் வன்னம் முதலிய அத்துவாக்கள் ஆறு. அத்துவா என்பது வழி எனப்படும். இந்தவழி மூலம் நாம் செய்யும் யோகம் வெற்றி அடையும். 51 அட்சரங்களின் தனி ஒளி நிறம் ஆகியவை ஓம் எனும் மந்திரத்தில் பதிந்து வலுப்பெறும்.

மனம், உடல் மேம்பட சிவா யோகா பரிஹாரம்

ஆயும் மலரின் அணிமலர் மேலதும் ஆய இதழும் பதினாறும் அங்கு உள

தூய அறிவு சிவானந்தமாகிப்போய் மேய அறிவாய் விளைந்தது தானே

இலிங்கம் அது ஆகுவது ஆரும் அறியார் இலிங்கம் அது ஆகுவ எண்திசை எல்லாம்

இலிங்கம் அது ஆகுவ எணெண் கலையும் இலிங்கம் அது ஆகஎடுத்து உலகே

எளிய அறிவு சிவானந்தம் உண்ரும் சிவஞானமாகிப்போய் சிவமே ஆக்கும் சாந்தியாதீத கலையாக மாறும். அண்ட லிங்கம் என்பது எது. எட்டு திசைகளும் 64 கலைகளும் வழங்கும் உலகமே ஒரு லிங்கம். அதில் உள்ள எல்லாவற்றையும் சக்தி, சக்தியற்றபொருள், உயிர் உடம்புகள், நடப்பன, இருப்பன முதலிய எல்லாவற்றையும் ஒன்று திரட்டி உணர்வதே அண்ட லிங்கம்.

மனம், உடல் மேம்பட சிவா யோகா பரிஹாரம்

தரையுற்ற சக்தி தனிலிங்கம் விண்ணாம் திரைபொரு நீரது மஞ்சன சாலை

வரைதவழ் மஞ்சுநீர், வான்உடு மாலை கறையற்ற நந்தி கலையுந்திக்கு ஆமே.

மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம் மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்

மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம் மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே

மனித உடலின் அமைப்பே லிங்க வடிவாகும். சிதம்பரமாகிய சிதாகாசம் மார்பு நடுவில் உள்ளது. சக்தியும் சிவமும் ஆகிய சதாசிவம் புருவ நடுவில் தலையில் உள்ளது. இறைவன் திருக்கூத்தாகிய ஒளிச்சுடரையும் மனித உடலியே காணலாம். எனவே சிவலிங்கம் எனப்பட்டது. பத்மாசனம் இட்டு அமர்ந்திருந்தால் உடல் வடிவம் லிங்க வடிவாவது தெரியும்.

உலந்திலர் பின்னும் உளர் என் நிற்பர் நிலம்தரு நீர்தெளி உள்ளவை செய்யப்

புலம்தரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக வலம்தரு தேவரை வந்தி செய்யீரே.

மரணமிலாப் பெருவாழ்வுக்குரிய ஒரு வழி. உடலில் உள்ள ஐந்து பூதங்களின் பகுதிகள் புலனுக்கும் அறிவுக்கும் தொடர்புடையவை. அவற்றை உடம்பில் உணர்ந்து இவைகளுக்குக் காரணமான ஒரு பொருளையும் உணர்ந்து அப்பொருள் தெய்வமென வந்தனை செய்தால் பயன் கிடைக்கும்.

கோயில் கொண்ட அன்றே குடிகொண்டது ஐவரும்

வாயில் கொண்டு ஆங்கே வழிநின்று அருளுவர்

தாய் இல்கொண்டாற்போல் தலைவன் என்னுள்புக

வாயில் கொண்டு ஈசனும் ஆளவந்தானே.

ஆன்மா உடலாகிய கோவிலுக்குள் வரும்போது அந்த ஐந்து பூதங்களும் இவ்வுடம்பில் மரணமில்லா இடம் பெற்று இருக்கின்றனர். ஐந்து பொறிபுலன்களை உருவாக்கி ஆன்மாவிற்கு இவ்வுலக் வாழ்வுக்கான அறிவைத் தந்து வருகின்றன். தாய் சேய்க்கு பால் தருவதுபோல் இறைவன் இந்த உடம்பாகிய வீட்டிற்கு வந்து ஞானமாகிய பாலை வழங்குவான்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்

தெள்ளத்தெளிந்தார்க்குச் சிவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே

மானுடர் உடல் சிவலிங்கம், யோகியார் உள்ளமே கருவறை. உடம்பே திருக்கோயில்கள் பகுதியாம். திருநாமத்தை ஓதும் அவர் வாய் கோபுர வாசல். நுணுகி அறிந்தோர்க்கு உயிரே சிவலிங்கம். மயங்கி நின்ற புலன்கள் ஐந்து மாணிக்க ஒளிவிளக்காகும். காளம் என்றால் நஞ்சு. அது உறைந்து நாகரத்தினம் ஆவதுபோல் ஐந்தலைநாகமாக ஐந்து புலன்களும் குண்டலினியை மேம்படுத்தும்.

படமடக் கோவில் பரமற்கு ஒன்று ஈயின் நடமாடு அக்கோயில் நம்பற்கு ஒன்று ஆகா

நடமாடு அக்கோயில் நம்பற்கு ஒன்று ஈயின் படமாடு அக்கோயில் பரமற்கு அது ஆமே.

தண்டு அறு சிந்தை தபோதனர் தாம் மகிழ்ந்து உண்டது மூன்று புவனமும் உண்டது

கொண்டது மூன்று புவனமும் கொண்டதுதென்று எண்திசை நந்தி எடுத்துரைத் தானே.

அடியார்களுக்கு ஒன்று செய்தால் அதுவே இறைவனுக்கும் செய்வது ஆகும். இறைவன் விரும்பி இருக்கும் இடமடியர் மனமே. தவம் செய்வோர் தாம் மனம் மகிழ்ந்து ஒன்றை உண்டால் அது மூன்று உலகங்களும் மகிழ்ந்து உண்டதற்குச் சமம். அதுபோல் அவர்களுக்கு ஒன்று கொடுக்க அவர்கள் அதை ஏற்றுக் கொண்டால் அதுவும் மூன்று உலகமும் ஏற்றுக்கொண்டதேயாகும்.

வித்தகமாகிய வேடத்தர் உண்ட ஊன் அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்

சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின் முத்தியாம் என்று நம்மூலன் மொழிந்ததே

சித்தம் சிவமாகத் தெளிந்தஞானியர் உண்டது போக எஞ்சியதைப் பருகினால் மூத்தியடைந்ததேயாகும். எல்லாவற்றிற்கும் மூலகாரணமான கடவுள்.

என்தாயோடு என் அப்பன் ஏழ் ஏழ் பிறவியும் அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்

ஒன்றாய் உலகம் படைத்தான் எழுதினான் நின்றான் முகில்வண்ணாண் நேர் எழுத்தாயே.

ஏதோ ஒரு பிறவியில் என்தாய் தந்தை இருவரும் ஏழ் பிறவியிலும் சிவனுக்கு நான் அடிமை என்று அன்றே ஆவணம் எழுதி விட்டனர். பிரம்மா ஆவணம் தயாரித்தவன் திருமால் சாட்சிக் கையெழுத்திட்டவன் ஆவர்.

சீவன் எனச் சிவனார் என்ன வேறு இல்லை சீவனார் சிவனாரை அறிகிலர்

சீவனார் சிவனாரை அறிந்தபின் சீவனார் சிவன் ஆயிட்டு இருப்பாரே.

ஆன்மாவும் சிவனும் வேறல்ல. சிவனைச் சீவன் அறியும் போது சீவனே சிவனாகிவிடும்.

அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இல்லை

அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே.

புலன்கள் ஐந்தும் அடக்கு அடக்கு என்பர். தேவர்கள் கூட ஐந்தும் அடக்கி இருப்பதில்லை. ஐந்து புலன்களையும் அடக்கினால் உயிருக்கு அறிவு வரும் வாயில்கள் அடைபட்டு அறியாமை உண்டாகும் என்பதால் ஐந்தையும் அடக்கிப் பழகாமல் அறிவை அறிந்தேன்.

முழக்கி எழுவன மும்மத வேழம் அடக்க அறிவென்னும் கோட்டையை வைத்தேன்

பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக் கொழுத்தன வேழம் குலைக்கின்றவாறே.

ஐந்தில் ஒடுங்கில் அகலிடம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அரும்தவம் ஆவது

ஐந்தில் ஒடுங்கில் அவன்பதம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அருள் உடையாரே.

ஐந்து புலன்களை அடக்குவதற்குப் பதில் ஒடுக்கினால் அதாவது நம் வழியே அதை நடக்கச் செய்தால் அது பிரபஞ்சம் முழுவதும் கருதியது ஆகும். அதுவே தவம், திருவடி ஆகும் அது செய்வோர் இறையருள் பெறுவர்.

பெருக்கப் பிதற்றின் என் பேய்த்தேர் நினைந்து என்

விரித்த பொருட்கு எலாம் வித்து ஆவது உள்ளம்

பெருக்கின் பெருக்கும், சுருக்கின் சுருக்கும்

அருத்தமும் அத்தனை, ஆய்ந்து கொள்வார்க்கே.

கானல்நீர் போல் மாயையாகிய உலகக் காட்சிகளை நினைத்து ஒரு பயனும் இல்லை. பிரபஞ்சம் முழுவதும் விரிந்த பொருள்கள் எல்லாவற்றையும் நம் உள்ளம் உற்று அறிவது ஆகும். உள்ளத்தைப் பிரபஞ்சம் அளவு பெருகச் செய்தால் பெருகும். சுருங்கச் செய்தால் சுருங்கும். மனதில் கற்பித்துக் கூறிய ஒருசொல் நினைவு பிரபஞ்சத்தில் எங்கேயோ உள்ள ஒரு பொருளைச் சென்று அடையும். அப்பொருளுக்கு மனமே விதையாகும்.

நடக்கின்ற நந்தியை நாடோறுமுன்னிப் படர்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக்

குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில் வடக்கொடு தெற்கு மனக் கோயிலாமே.

போற்றிசைத்தும் புனிதன் திருமேனியே போற்றிசெய் மீண்டே புலனைந்தும் புத்தி ஆம்

நால்திசைக்கும் பின்னை ஆற்றுக்கும் நாதனை ஊற்றுகை உள்ளத்து ஒடுங்கலும் ஆமே

ஐந்தெழுத்து முதலான மந்திரங்களே இறைவன் திருமேனி மந்திரங்கல் ஆகும். எட்டெழுத்து திருமாலுக்கும் ஆறு எழுத்து முருகனுக்கும் பதினைந்து எழுத்து பராசக்திக்கும் உரியது. உடலின் நான்கு புறமும் உள்ள நாடிகளுக்கும் நடுவே உள்ள ஆறு போன்ற சுழுமுனை நாடிக்கும் இறைவனே தலைவன். எல்லா நாடிகளுக்கும் ஆறுபோல் இணைப்பானது. அது அமுதம் வரும் வழியாகும்.

நேயத்தே நிற்கும் நிமலன் மலம் அற்ற நேயத்தை நல்க வல்லோன் நித்தன் சுத்தனே

ஆயத்தவர் தத்துவம் உணர்ந்தாங்கு அற்ற நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே

பரிசன வேதி பரிசித்தது எல்லாம் வரிசை தரும்பொன் வகையாகு மாபோல்

குருபரி சித்த குவலயம் எல்லாம் திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே

அன்பில் நிறைந்து நிற்பவன் இறைவன் மலமில்லாத அன்பை அவன் அருள்வான். தத்துவம் 36ம் உணர்ந்து அவற்றின் மாயையில் சிக்காது நீங்கி வாழ்பவர்க்கு வீடுபேறு அளிக்கும் குருவாக இறைவனே வருவான். அவன் சுத்தனாகவும் நித்தனாகவும் இருப்பதால் அவன் மீது கொண்ட அன்பும் அந்த இயல்பு உடையதாகும்.

உள்ளிடும் ஐம்மலம் பாச உணர்வினால் பற்ரு அற நாதன் அடியில் பணிதலால்

சுற்றிய பேதம் துரியம் மூன்றால் வாட்டி தற்பரம் மேவுவோன் சாதகனாமே.

ஐந்து மலம் பந்தபாசம் ஆகியவற்றை உணர்வினால் நீக்கி இறைவன் திருவடியில் பணியும்போது மூன்று விதத்துரியம் காட்டி பிறகு சிவமாகவே நிற்பவே சாதகன். ஐந்து மலமான ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதயி.என்பன.

காயப்பை ஒன்று சரக்குப் பலவுள மாயப்பை ஒன்று உண்டு மற்றுமோர் பையுண்டு

காயப்பைக்கு உள்நின்ற கள்ளன் புறப்பட்டால் மாயப்பை மண்ணாய் மயங்கியவாறே.

சென்ற பிறவியில் செய்த விணைகள் இப்பிறவியின் உடலுக்குக் காராணமாகி நம் வடிவமைப்பு வாழ்வு முதலியவற்றைத் தீர்மானிக்கும் காரண உடல், கண்ணுக்குத் தெரியாப் பல உறுப்புகளுடன் இருக்கும் சூக்கும உடல், கண்ணுக்குத் தெரியும் தூல உடல் என்ற மூன்று உடல்கள் பைகளுக்குள் பை இட்டது போல் செறிந்து நமக்குள் உள்ளன. யாவற்றுக்கும் காரணமான இறைவன் இவ்வுடலாகிய பையிலிருந்து வெளியேறிவிட்டால் மற்ற பைகளும் உடலும் மண்ணாகி அழியும்.

The post மனம், உடல் மேம்பட சிவா யோகா பரிஹாரம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>