Quantcast
Channel: SwasthikTv
Viewing all 15459 articles
Browse latest View live

Weekly Numerology from 01st August to 07th August 2017

$
0
0

Weekly Numerology from 01st August to 07th August 2017

https://www.youtube.com/watch?v=iOnf02msiN8 

School For De Soul Therapy OK,  Welcomes  you to this week, scientific personality profiling.

 There is a saying,  Know Thy to Know Others – which means , knowing the qualities possessed by you will be the gate for you to know the world and others. Let’s see what’s in store in for each NUMBERS FOR THE WEEK 31.

NUMBER 1 – (01,10,19,28)

STRENGTH:-   you are a Born leader,  you can make  the world to revolves around you.  You are a person of  very strong character,  you possess highest creativity  , you possess Good Management and Leadership skills,  you love being  Independent & commanding. You are  Action  result oriented. You have  high Inventive&  Creativity

CHALLENGES:-  you become, Too authoritative , too demanding, you  are adamant, you tend to  boast too much, you lack flexibility, you tend to be  Overly ambitious or high expectancy.

ONE:–  Give yourself a break from those pressures, stress which is pressing you. Express your feeling with your close and loving ones. Your leadership qualities, decisive making skills will come very handy.

NUMBER 2 – (02,11,20,29)

STRENGTH:-   you Possess excellent analytical ability & Creativity. You have your own rules, goals and set own standards of life.   You are a Self motivator of your own. You speaks precisely.  You are Flexible.  You play the Brilliant mind strategy.

CHALLENGES:-  you are  sentimental & emotional.  Your Dependant  nature make you sensitive  & submissive. You change and  Swings Easily. you lack courage & self confidence.  You suffer a lot from Low self esteem.  Your Inconsistency & bad discipline earns a bad reputation. You tend to Day dream a lot,  you are very shallow Person.

TWO –  You have the potential for great spiritual insights. But there is the tendency to feel you’re superior to some others who may not have the same values or experience as you. Humankind is united in love and common failures. Having compassion for others is also showing compassion for you. Don’t beat yourself up for imagined faults, and don’t congratulate yourself for being better than someone else. Gentle acceptance of yourself and others is the path of wisdom.

NUMBER 3 – (03,12,21,30)

STRENGTH:-   you are a Born leader & carries special DIVINE GRACE,  you possess more divine blessings/ wisdom.   You Prefers slow  & Steady Growth . you Have charismatic personality,  your words/speech/conversation carries special power.  You are very Compassionate &  man of principles , values. You Maintains discipline .you are a  good natured , gentle and broad mind soul.

CHALLENGES:-  you are very Emotional&  impatience.  You suffer from Poor Management of money.  And Falls into the vicious trap of  debts.  Tends to be Very  Conservative &  lacks the will to change and adept. You  tends to be very sentimental often.

THREE – Be  open minded and willing to move in new directions. Patience and perseverance will see you through. Refuse to surrender your hopes for a brighter future.

NUMBER 4 – (04,13,22,31)

STRENGTH:- You are an Excellent communicator.  You are Open-mind for change & growth. You are Practical and Generous,  you are straight forward person,  you are an excellent orator, you have charismatic personality. You  can debate on almost anything. Your Deep analytical ability  can make you see things in Unconventional way and bring solution from out of the box. You are a person of high Integrity. you likes to live life in a grand manner. If you can properly nurture yourself, you can raise to power or be a top most people person.

CHALLENGES:-  You suffer from Ego.  Your Secretive nature & rebellious personality pulls you into unwanted issue, you are highly impulsive& short-tempered . you are very Emotional. You  Argue too much. You Lack diplomacy & planning.

FOUR- Your integrity, Charismatic personality will lead you to lot of opportunities towards achieving your goal.  Perfection is less important than acceptance. Be more open to accepting what comes with your work, family, relationships, friends, and even the difficulties you face. Embrace with joy  on whatever life is offering.

NUMBER 5 – (05,14,23)

STRENGTH:- you are an Intelligent & witty person, you have strong will power, you are  well planned and  shrewd person,  you have a loving  charisma to attract people, you have the excellent gift of knowledge and wisdom especially on money rotation, investment from others.

CHALLENGES:- you sometimes have to battle with your own Dual nature, you tend to be  cunning & secretive. You get into the habit of being too much hypo critical & sometimes behave very childish as well.  You are inconsistent  on money making ideas. You stuck into being  very materialistic & easily falls prey to Speculation gambling. You suffer a lot coz of your  Doubting nature & self esteem issue.

FIVE –  Don’t allow those conflicting emotions to get you stuck in the web of fear. Cultivate the habit of Gratitude and live life to the fullest. Be ready for growth and change in life.

NUMBER 6 – (06,15,24)

STRENGTH:- You are highly Intellectual & can Play brilliant Mind Strategy, you are very courageous, you tend to live life in grand way.  You are compassionate and understanding person.  You are very Religious.  You are blessed with  marital bliss. You carry the charisma to Attract wealthy & Business men.  You can Connect with gurus. You are Blessed with the power to give birth to a prodigal son/daughter.

CHALLENGES:-  you lacks will power. You are very Obstinate & unyielding. You should  learn to balancing with contenting life.  You should work on your  Laziness. You  are impulsive and emotional.

SIX – You will feel like being more challenged in work front. Don’t allow those challenges to discourage you than usual. You may think you aren’t able to measure up against the competition, but this isn’t true! What is necessary is a realistic assessment of your situation that doesn’t include a conversation about what a failure you are. You can have a happy and joyous life despite limitations. 

NUMBER 7 – (07,16,25)

STRENGTH:-   You are gifted with excellent  Mindpowers. You are  Inventive & intuitive person.  You love the slow &  steady approach. You are an Excellent communicator.   You have the Magnetic Charisma. You are very straight forward person. You like Debating & in depth analysis. You can see things  in Unconventional way. You  Loves to live grand way.  You  have high Integrity.

CHALLENGES:-  you tend to day Dream. Some time you behave in a  Mysterious way. You fall into the  web of Animosity, Self limiting doubts. unwanted fears about life. . You suffer from Inferiority complex & submissive nature. You suffer from small thinking or self esteem. You  Lack discipline.  You are very shallow Person & lazy .you  lack consistency & being impatience. You  tends to be quarrel some and criticize too much.  You Lack courage & fighting spirit.

SEVEN:- You can get caught in very fixed patterns that aren’t helpful. An Unwanted fear web is bothering you too much. You should wake up to the reality.  Don’t get stuck in your  self-imposed prison. Don’t worry about any imagined flaws. Start living life with faith, counting your blessings, focusing on your talents.Seek to bridge this gap with humor, compassion, and a willingness to share your thoughts.

NUMBER 8 -(08,17,26)

STRENGTH:-  you are a Knowledge treasure. You are Melancholic & meticulous .  if harnessed well,  you can go beyond any limit.  You carry indepth  Analytical thinking & creativity.  You can be a  path breaker or innovator or pioneer or reformer. You like to  travels a lot.  You love to keep meeting more  new people. Your biggest strength is your  keep learning Attitude.  You like to Do in grand/ extravaganza.  You carry lot of Noble qualities. You prefer  Slow and steady approach. You are strong willed person.

 CHALLENGES:-  you prefers loneliness. You tend to  extremists and not balanced. You needed to reminded about your powers and encourage to have big dream & do big things. You suffer from unwanted webs of  Animosity, fear. And, it impact your  willpower. You tend to be more  Revolutionary  & Rebellious. You should  work on not being bogged into low level of thinking. 

EIGHT –  You may have to cope with some situations and events that are painful and hard to accept. It may seem to counter good sense, but if you’re willing to accept and embrace painful sensations and events without resistance, you can more easily move through them. When you focus on the story about your pain or the results of this pain, you can be trapped and suffer much more than if you embrace the event knowing that you’ll move on.

NUMBER 9 – (09,18,27)

STRENGTH:-  You are a great Warrior &  intensive thinker.  You are always full of  energy and aggression. You carry the best  Leadership qualities. You possess ROBUST NATURE. You are   impulsive decision maker. You carry the  dynamism & commanding skills. You are full of  Courage  & confidence. You like to be  Independent . you have big heart and want to be more Service oriented. You are compassionate & kindhearted.  You like  to do larger than life cause.

CHALLENGES:-  you get Angry easily and  suffers from short temperament.  You fall  easily to negative web of circles. You  goes into courting unnecessarily.  Your Quarrelsome nature & sensitiveness will put you into lot of trouble often. You lack discipline in handling money & as well as other habits. You adamant nature will not want  you to oblige anyone.

 NINE:-  You have an opportunity to make important changes, but only at the moment when you’re ready to accept things as they are. Look at yourself and your situation with open eyes and an open heart. Then and only then will the possibility of a new way of being appear. Real transformation begins when you allow things to be just as they are.

Your Astro Healer

Your Crystal Therapist

Your Lifestyle Guru

Om Kameswaraa

+91 8825596557

School For De Soul Therapy OK

The post Weekly Numerology from 01st August to 07th August 2017 appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை –அருணை பீடம்

$
0
0

அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை – அருணை பீடம்

நினைக்க முக்தி தரும் தலங்களுள் முதன்மையானது திருவண்ணாமலை. ஈசன் அண்ணாமலையாராகவும் அம்பிகை உண்ணாமுலையம்மன் எனும் அபீதகுஜாம்பாளாகவும் திருவருட்பாலிக்கும் திருத்தலம். சூரியன், பிரதத்தராஜன், அஷ்டவசுக்கள், பிரம்மதேவன், சந்திரன், திருமால், புளகாதிபன் போன்றோர் பூஜித்துப் பேறுபெற்ற தலம். வித்தியாதரர்களாகிய இருவர் ஒரு ரிஷியின் சாபத்தால் பூனையாகவும் குதிரையாகவும் இருந்த நிலை இத்தலத்தை வலம் வந்ததால் மாறியதாக தலபுராணம் கூறுகிறது.

முன் ஜென்ம பாவங்கள் விலக வேண்டுமா?

இத்தலத்தில் நடைபெறும் பெரிய விழா கார்த்திகை தீபத் திருவிழாவாகும். இது கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நன்னாளில் நடைபெறும். சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தைத் தீர்த்தமாகக் கொண்டு பிரமோற்சவமும், பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம் ஆறுநாள் விழாவும், மாசிமகத்தில் வல்லாளன் திருவிழாவும், தை மாதம் திருவூடல் விழாவும், ஆனி விழாவும், ஆடியில் அம்பிகை விழாவும், பவித்ரோற்சவம், நவராத்திரி, கந்தசஷ்டி, திருவெம்பாவை உற்சவம், திருவா திரை முதலியனவும் சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றன.

gopuram thiruvannamalai

இத்தலம் பஞ்சபூதத்தலங்களுள் அக்கினி தலமாக போற்றப்படுகிறது. அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் இத்தலம் அருணை சக்தி பீடமாக போற்றப்படுகிறது.

ஒரு சமயம் கயிலை மலையில் பார்வதிதேவியுடன், ஈசன் அமர்ந்திருந்தார். அப்பொழுது ஈசனைக் காண வந்த பிருங்கி முனிவர் ஈசனை மட்டும் வணங்கி வலம் வந்தார். ஆனால், தேவியை வணங்கவில்லை. அதனால் பார்வதி கோபமடைந்தாள். பிருங்கியின் உடலில் உள்ள சதை மற்றும் ரத்தம் நீங்கி சக்தியை இழக்குமாறு சாபமளித்தார். பிருங்கி முனிவர் சதையும் ரத்தமும் நீங்கி எலும்பு தோல் போர்த்திய உடம்பினைப் பெற்றார். ஈசன் தம்முடைய பக்தனின் தளர்வடைந்த நிலையினைக் கண்டு இரக்கமுற்றார். உடனே முனிவருக்கு மூன்றாவது காலாக ஊன்று கோலினை அளித்தார். ஊன்று கோலினை பெற்ற முனிவர் மகிழ்ச்சி அடைந்து, ஈசனின் முன்பாக நடனம் ஆடி பக்தியைச் செலுத்தினார்.

உயர்ந்த ஞானம், தர்மம், அர்த்தம், மோட்சம் பெற்றிட !!!

இதனைக் கண்ட பார்வதிதேவி மனம் வருந்தி ஈசனில் பாதி உருவை அடையவேண்டும் என்று கருதி ஈசனை நோக்கிக் கடுமையான தவத்தினை மேற்கொண்டாள். ஈசன் மனமகிழ்ந்து தம்முடலில் பாதியினைத் தருவதாக வரமளித்தார். பார்வதி தேவி சிவனுடன் ஒன்றிணைந்து அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி அளித்தார். பிருங்கி முனிவர் இருவரையும் வணங்க வேண்டிய நிலை ஏற்பட்டு வணங்கினார். இவ்வாறு பார்வதி ஈசனின் பாதி உடலை பெற்ற தலம் இத்திருவண்ணாமலையாகும். கார்த்திகை தீபத்தின்போது அர்த்தநாரீஸ்வர திருக்கோலத்தின் ஆனந்த நடனத்தை ஓரிரு நிமிடங்கள் மட்டுமே தரிசிக்க முடியும். பின் அடுத்த வருட கார்த்திகை தீபத்தின்போதுதான் அத்திருவுரு தரிசிக்கக் கிடைக்கும்.

உண்ணாமுலை அம்பிகையின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் ஏது? லலிதா ஸஹஸ்ர நாமம் தேவியைப் போற்றும் நாமங்களில் நிஸ்துலா – சிறந்த பொருள் அனைத்திலும் சிறந்தவள், எவர்க்கும் ஒப்பிலாதவள் என்கிறது. மேலும் ஸமானாதிக வர்ஜிதா – ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவள். ஒப்பார் இல்லாத போது மிக்கார் எப்படி இருக்க முடியும்? தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் எனும் சதுர்விதபுருஷார்த்தங்களையும் அளிக்க வல்லவள். தேவியின் தாமரை போன்ற சிவந்த பாதங்களுக்கு அவற்றின் நகங்களின் பிரகாசமே நிலவாகிறதாம்! தாமரையின் கொழுப்பை அடக்கும் திருப்பாதங்கள் என்று மூககவியும் தன் ‘பாதாரவிந்த சதக’த்தில் அம்பிகையின் பாதங்களைப் புகழ்கிறார். இதைத்தான் அருணகிரிநாதரும் ‘சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேர மட்டில் தவ முறை தியானம் வைக்க’ என்கிறார். சரணங்கள் என்ற கமலங்களாலேயே ஆன ஆலயம் தேவியின் திருப்பாதங்களாகும்.

தேவியின் கண்களோ அதற்கும் மேலான கருணையைப் பொழிகின்றது. மிகவும் குளிர்ந்ததான, அழகான, சலனமான பார்வையை அம்பிகை நம்மீது செலுத்த வேண்டும். அன்பு கனிந்த பார்வை என்பது குளிர்ச்சியாக இருக்கும் தேவியின் பார்வை. அதன் மகிமையாலேயே ஈசனால் சாம்பலாக்கப்பட்ட மன்மதன் மீண்டும் உயிர்பிழைக்கப் பெற்றான். அம்பிகையின் குழந்தை என்ற பெருமையையும் பெற்றான். தேவியின் கடைக்கண் பார்வை நம்மீது பட்டால் போதும். யுகங்களில் செய்த பாவங்களும் பறந்தோடிவிடும்.

The post அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை – அருணை பீடம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில்

$
0
0

 கோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில், கங்கை கொண்ட சோழபுரம்

கோபுர தரிசனம் கோடி அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில், கங்கை கொண்ட சோழபுரம்

பெரிய லிங்கம்:

 தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் இங்கு தான் உள்ளது. தஞ்சை பெரிய கோயில் லிங்கம் 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவும் (ஆவுடையார்) கொண்டது. கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது. ஆவுடையை சுற்றி பலகை கட்டி, அதன் மீது ஏறிநின்று அபிஷேகம் செய்கின்றனர். ஒரே கல்லால் ஆன மூலவர் இங்கு பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார். தஞ்சாவூரில் உள்ள லிங்கம் ஆணின் அம்சம். இங்குள்ள லிங்கம் பெண் அம்சமாகும். அங்கு உரல் வடிவம். இங்கு உடுக்கை வடிவம்.

brihadeswara lingam

தினமும் சூரிய தரிசனம் :

இங்குள்ள நந்தியும் தஞ்சாவூரை விட பெரியது. தஞ்சாவூரில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டு உயரமான மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. தஞ்சாவூரில் மூலஸ்தானத்திலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் நந்தி உள்ளது. இங்கு 200 மீட்டர் இடைவெளியில் உள்ளது. தினமும் பகலில் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு. மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் லிங்கத்தைப் பார்த்தால் மிகவும் அற்புதமாக இந்த ஒளி தெரியும் வகையில் வடிவமைத்துள்ளனர் நம் சிற்ப வல்லுனர்கள்.

brihadeeswarar

சந்திரகாந்த கல் :

 கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்ன வென்றால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும். இந்த அனுபவத்தை பல தலைமுறைகளாக இருந்து வரும் குருக்குள் தங்கள் சந்ததியினருக்கு கூறி வருகிறார்கள். இந்த வகை கல் வேறு எந்தக் கோயிலிலும் இருப்பதாக தெரியவில்லை.

அன்னாபிஷேகம் :

 காஞ்சிமடத்தின் சார்பில், ஐப்பசி பவுர்ணமி தினத்தில் இங்கு பல வருடங்களாக மிகவும் சிறப்பாக அன்னாபிஷேகம் நடந்து வருகிறது. நு}ற்றுக்கணக்கான மூடை அரிசியை வேகவைத்து மூலவராக இருக்கும் பிரமாண்டமான லிங்கம் மூடும் அளவிற்கு சாதத்தினால் அபிஷேகம் செய்வார்கள். அன்றைய தினம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை இந்த அபிஷேகம் நடக்கும். அத்துடன் காய்கறி, கனி வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, சிறப்பு பூஜை நடக்கும். மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரை பக்தர்கள் அன்னாபிஷேக லிங்கத்தை தரிசிப்பார்கள்.

images

 அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை பொதுவாக ஓடும் நீரில் விடுவது வழக்கம். குறிப்பாக பாணத்தின் மீது இருக்கும் அன்னத்தில் கதிர்கள் ஊடுருவி இருக்கும். அதை சாப்பிட்டால் அதன் சக்தியை தாங்கும் வலிமை நமக்கு கிடையாது. எனவே ஆவுடைப்பகுதியில் உள்ள அன்னத்தில்,தயிர் கலந்து தயிர் சாதமாக பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இதைச் சாப்பிடுகிறார்கள்.

பெரிய நாயகி :

 பெயருக்கேற்றாற் போல் 9.5 அடி உயரத்தில் பிரமாண்டமாக அம்மன் அருள்பாலிக்கிறாள். நிமிர்ந்து பார்த்து தான் வணங்க வேண்டும். இவளது பாதத்தில் காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்துள்ளார். அதன் பிறகு தான் கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வர ஆரம்பித்தனர் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

சுற்றமுடியாத நவக்கிரக மண்டபம் :

 இங்குள்ள நவக்கிரகம் மற்ற கோயில்களை போல் இல்லாமல், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சூரியனுக்குரிய யந்திர வடிவில் 8 கிரகங்கள் சுற்றிலும் அமைக்கப்பட்டு, 7 குதிரைகள் பூட்டிய தேரில் மேற்கு நோக்கி சூரியன் அமர்ந்துள்ளார். தேரை அருணன் சாரதியாக இருந்து ஓட்டுகிறான். தேரிலுள்ள 10 கடையாணிகளும் கந்தர்வர்கள் எனக் கூறப்படுகிறது. நவக்கிரகங்கள் இந்த உலகை சுற்றி வருகின்றன. எனவே அதை யாரும் சுற்றக்கூடாது என்பதன் அடிப்படையில் இங்கு நவக்கிரகங்களை சுற்றமுடியாத படி மண்டப அமைப்பு உள்ளது.

குழந்தை வடிவில் துர்க்கை :

 இங்குள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். இவள் ராஜேந்திர சோழனின் குலதெய்வம். 9 வயது சிறுமியின் வடிவில் சிரித்த முகத்துடன் 20 திருக்கரங்களுடன் மகிஷாசூரனை வதம் செய்த கோலத்தில் அருளுகிறாள். இத்தகைய கோலத்தை காண்பது மிகவும் அபூர்வம். இவளை மங்கள சண்டி என்று அழைக்கிறார்கள். திருமணபாக்கியம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவற்றுக்காக இவளை வணங்குகின்றனர். பதவி உயர்வுக்காகவும், பணியிட மாற்றத்திற்காகவும் அர்ச்சனை நடக்கிறது. ராஜேந்திர சோழன் கோயிலுக்கு வந்தவுடன் முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின் தான் சிவனை வணங்குவான். இதன் அடையாளமாக இன்றும் கூட ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில், முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின்னர் தான் சிவனை தரிசிக்க செல்கின்றனர். இவளுக்கு கோயிலின் இடது பக்கம் தனி சன்னதி உள்ளது.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில்

கணக்கு விநாயகர் :

 ஒருமுறை ராஜேந்திர சோழன் தன் அமைச்சரை அழைத்து பெரிய கோயில் கட்டியதற்கு இது வரை எவ்வளவு செலவாகி உள்ளது? என கேட்டான். அமைச்சருக்கு சரியாக சொல்ல தெரியவில்லை. அவர் பதறிப்போய் அங்கிருந்த விநாயகரை வணங்கினார். காவிக்கல் 8 ஆயிரம் செம்புகாசு, காவிநு}ல் 8 ஆயிரம் செம்பு காசு என நினைவு வந்தது. எனவே கணக்கு விநாயகர் என்று அழைக்கப்பட்டார். தற்போது கனக விநாயகர் எனப்படுகிறார். இவர் தன் வலக்கையில் எழுத்தாணியுடன் உள்ளார்.

கோபுர அமைப்பு:

 இங்குள்ள கோபுரம் சோழர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தஞ்சாவூரைப் போலவே இங்கும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த பின் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. 216 அடி உயரமுள்ள தஞ்சாவூர் கோபுரம் கீழிருந்து மேல் ஒரே சீராக கட்டப்பட்டிருக்கும். ஆனால் 180 அடி உயரம், 100 அடி அகலமுள்ள இக்கோயில் கோபுரம், கீழிருந்து 100 அடி உயரம் வரை அகலமாகவும், அதன் பின் 80 அடி உயரம் குறுகலாகவும் கட்டப்பட்டுள்ளது. கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது. தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு அடுத்தபடியாக இக்கோயில் விமானம் தான் தமிழகத்தில் பெரிய விமானம் ஆகும்.

சிறப்பம்சங்கள் :

கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது. கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும்.

 இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. இங்கு மூலஸ்தானத்திலிருந்து 200 மீட்டர் இடைவெளியில் உள்ளது. தினமும் பகலில் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு. மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் லிங்கத்தைப் பார்த்தால் மிகவும் அற்புதமாக இந்த ஒளி தெரியும் வகையில் வடிவமைத்துள்ளனர் நம் சிற்ப வல்லுனர்கள்.

The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

ஜோதிடக்குறிப்பு- பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள்

$
0
0

ஜோதிடக்குறிப்பு- பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள்

முதல் பாவம்:

      உடல் தோற்றம், பொலிவு, குணங்கள், வாழ்க்கையின் நிலை, செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை முதல் பாவத்தின் வலிமை, அதில் தங்கியிருக்கும் கிரகங்கள் அவற்றின் சிறப்பு முதலியவற்றைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.

இரண்டாம் பாவம்:

      குடும்ப சூழ்நிலை, செல்வம், கலை, பேச்சுத் திறமை, கல்வி ஆகியவற்றிக்கு உரியது

மூன்றாம் பாவம்:

      இளைய சகோதரி, சகோதரர்கள், பணியாள்கள், வாகன வசதி, சங்கீத ஞானம், அரசின் ஆதரவு, துணிவு, வீர தீரச் செயல்கள், உறவினர். நண்பர்கள் உதவி முதலியவற்றிற்கு முக்கியமானது.

தெய்வங்களின் குணமே கிரஹங்களின் குணம்!

நான்காம் பாவம்:

      கல்வி, நில புலன்கள், செல்வம், கால் நடைகள், முன்னோர் சொத்து. நண்பர்கள் ஆதரவு, உதவி முதலியவற்றுடன் தாயாரின் சுக சௌகரியங்களையும் அறிய முக்கியமானது. இந்த பாவத்தை மாத்ரு பாவம் என்று கூறுவர்.

ஐந்தாம் பாவம்:

      இதைப் புத்திரஸ்தானம் என்று அழைப்பர். ஒருவருக்குச் சந்ததி விருத்தி – குழந்தைகள் பிறப்பது – எப்படியிருக்கிறது என்பதை அறிய ஐந்தாம் பாவம் முக்கியமானது. இந்த பாவத்தின் வலிமையைக் கொண்டுதான் ஒருவருக்கு மழலைச் செல்வம், உண்டா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும். மற்றும் ஜாதகர் ஒருவரின் பூர்வ புண்ய பாவம், புகழ், பாவம், செல்வம், செல்வாக்கு, மதி நுட்பம் ஆகியவற்றையும் இந்த ஐந்தாம் பாவமே எடுத்துக் கூறக் கூடியது.

ராசிக்களுக்கான சகஸ்ரநாம அர்ச்சனையும் பலன்களும்!

ஆறாவது பாவம்:

      தாய் மாமன் குணம், உடல் ஆரோக்கியம், உதவி முதலியவற்றைக் கண்டறிய முக்கியமான பாவம், ஜாதகரின் உடல் ஆரோக்கியம், விரோதிகள் தன்மை, கடன், பொருள் சேதம், விபத்துகள் முதலியவற்றையும் எடுத்துக் கூறுவது இந்த பாவம்.

ஏழாவது பாவம்:

      காதல் திருமணம், மனைவி உறவு முறை, நொருங்கிய உறவினர், சகோதர சகோதரிகள் ஆதரவு. உதவி, வழக்குகள், அரசு ஆதரவு. சமுகத்தில் செல்வாக்கு. விரோதம் முதலியவற்றைக் குறிக்கக் கூடியது. இதை களத்திர-மனைவி-பாவம் என்று பொதுவாகச் செல்வார்கள்.

navagragam

எட்டாவது பாவம்:

      ஆயுள் பாவம் பெண்களுக்கு தாலி பலத்தைக் குறிக்கும் பாவமும் இதுவே. உடல் கோளாறு, விபத்துகள். பொருள் இழப்பு, நோய்கள், மனைவியுடன்-கணவனுடன்-உறவு முறை முதலியவற்றையும் இந்த பாவத்தைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.

ஒன்பதாம் பாவம்:

      பித்ருஸ்தானம்-தந்தை-அதிர்ஷ்டம், பொன், பொருள், தான தர்ம குணம். தூர தேசப் பயணம், பிறவிப் பயன், தெய்வ பக்தி, பேரன் பேத்திகள், முன்னோரின் தர்ம சிந்தை முதலியவற்றை அறிய ஒன்பதாம் பாவம் உதவுகிறது.

எடுத்த எந்த காரியமும் வெற்றியுடன் தொடங்க வேண்டுமா?

பத்தாம் பாவம்:

      இதை, கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம் என்றும் அழைப்பார்கள். வாணிபம், அரசாங்கப்பதவி, செல்வம், வெளி நாட்டுப் பயணங்கள், தெய்வபக்தி முதலியவற்றைக் கண்டறியலாம். ஜாதகருக்குக் கர்மம்-ஈமக்கடன்-செய்ய பிள்ளைகள் உண்டா என்பதை அறியவும் இந்த பாவம் முக்கியமானது.

பதினொன்றாம் பாவம்:

      லாபஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், சகோதர சகோதரிகள் உறவு முறை, கல்வி, நகைகள், உடை, வீடு, மன மகிழ்ச்சி முதலியவற்றை பதினொன்றாம் பாவம் எடுத்துக் காட்டுகிறது.

பன்னிரண்டாம் பாவம்:

      இதை விரைய ஸ்தானம், சோர ஸ்தானம் என்றும் மறைவிடம் என்றும் சொல்வார்கள். பன்னிரண்டாம் பாவம் நன்றாக இருந்தால் ஜாதகருக்குப் பொன்னும், புகழும் பெருகும். விரோதிகள் இருந்தாலும், பொருள் இழப்புகள் நேரிட்டாலும் ஜாதகர் மனம் தராமல் இருப்பார். ஆணாக இருந்தால் மனைவி பெண்ணாக இருந்தால் கணவன் நடத்தையை அறிய இந்த பாவம் முக்கியமானது.

பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள் அனைத்தும் பொதுவானது. இவற்றில் தங்கும் கிரகங்கள் நிலை-விளிமை தன்மை ஆகியவற்றைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.

The post ஜோதிடக்குறிப்பு- பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

புண்ணியம் தரும் கன்னியாகுமரி பகவதி அம்மன்

$
0
0

புண்ணியம் தரும்  கன்னியாகுமரி பகவதி அம்மன்

  முக்கடல் சங்கமிக்கும் இந்திய தென் கோடியில் அமைந்துள்ள குமரிகண்டத்தில் 2000-ஆண்டுகள் பழைமை வாய்ந்த பகவதி அம்மன் கோவில் உள்ளது. அம்மனின் 51-சக்தி பீடங்களில் இது குமரி பீடம் ஆகும். கடல் அருகே கோவில் இருந்தாலும் கிணற்றில் உள்ள நீர் உப்பு கரிப்பதில்லை என்பது அதிசியம். மூலவர் தேவி கன்னியாகுமரி, பகவதி அம்மன், உற்ச்சவர் தியாக சவுந்தரி, பாலசுந்தரி, தீர்த்தம் பாபநாசம்.காசிக்கு போகிரவர்களுக்கு கதி கிடைக்க கண்னியாகுமரிக்கு வரவேண்டும் என்கிறது புராணம். சிறந்த தீர்த்த உதுரை உடைய புண்ணிய கடல்கறை என்பதால் இங்கு நீராடினால் பாவம் தொலைந்து புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தாகளின் நம்பிக்கை.

ro

வேல்வியில் தோன்றி கன்னியாகுமரியில் தவம் புரிந்த அம்பாள்:

 அசுரர் அரசனாகிய பாணாசுரன் மூவுலகுக்கும் முடிவு தேடினான். விண்ணவரை ஒட்டித் தூயோர்க்கும் முனிவருக்கும் தொல்லை கொடுத்து வந்தான். நிலமகளாகிய தாய், உலகை இருள் மயமாக்கும் தீய திறனை ஒழிப்பதற்குத் திருமாலை வேண்டி நின்றாள்.

 திருமால் தீத்திறங்கொண்ட பாணாசுரனைப் பரசக்தியால் மட்டுமே கொல்ல முடியும் ஆகவே தேவர்கள் பராசக்தியை அணுக வேண்டும் என்றார். அதன் படி தேவர்கள் பராசக்தியை வேண்டி ஒர் பெரு வேள்வி செய்தனர். வேள்வி முடிவில் சக்திதேவி வெளிப்பட்டுப் பாணாசுரன் தலைமையில் நிகழும் தீய செயல்களை ஒழித்து, ஒழுங்கும் அறமும் உலகில் நிலைபெறச் செய்வதாக உறுதி மொழிந்தாள்.

  அன்று முதல் அவள் கன்னியா குமரிக்கு வந்து கடுந்தவம் புரிந்தாள் நாள் செல்ல செல்லக் கன்னிதேவி மணப்பருவம் அடைந்ததும், சுசீந்திரம் என்னும் இடத்திலுள்ள இறைவன் சிவபெருமான் அவள் மீது காதல் கொண்டார். அவருக்கு அவளைத் திருமணம் முடிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

201703131412582067_kanyakumari-bhagavathi-amman-temple_SECVPF

  ஆனால், அசுரர் தலைவன் ஒரு கன்னியால் தான் கொல்லப்படுவான் என்று பிரம்மதேவனால் விதிக்கப்பட்டிருந்தமையால், இத் திருமணம் நிகழுமாயின், பாணாசுரன் அழிவுக்குரிய வாய்ப்பு கெட்டுவிடும் என்று நாரதர் உணர்ந்தார். ஆகவே அவர் இத்திருமணம் நிகழாதிருப்பதற்கு வேண்டிய வழிவகைகளைக் கருதினர்.

 அவர் பராசக்தியையும், சிவபெருமானையும் நேரில் சென்று கண்டு, திருமணம் குறிப்பிட்ட ஒர் நாளில், நள்ளிரவில், ஒரு நல்வேளையிலேயே நிகழ வேண்டும், அதற்கு ஆயத்தமாக இருங்கள் என கூறினார். அவ்வாறே சிவபெருமான் குறித்த இரவில், நல்லநேரம் தவறிவிடக் கூடாதெனக் கருதிக் கன்னியா குமரிக்குப் புறப்பட்டார். போகும் வழியில், வழுக்கம் பாறை என்ற இடத்தை அடைந்தபோது,

சேவல் உருவில் நாரதர்:

நாரதர் ஒர் சேவல் உருக்கொண்டு உரக்கக் கூவினார். பொழுது புலர்ந்து விட்டதெனத் தவறுதலாகப் புரிந்து கொண்ட சிவபெருமான் சுசீந்திரத்திற்கு வருத்தத்துடன் திரும்பினார். தேவியும், அதன் பின் என்றும் கன்னியாகவே இருப்பதாக முடிவு செய்து, தவத்தை தொடர்ந்தாள்.

Kaniyakumari - Bagavathi Amman

உணவு பொருள் மணலாக மாறியது:

 திருமணத்திற்கென்று செய்யப்பட்ட உணவு பொருள்யாவும் வகை வகையான மணலாக மாறின. அதன் சான்றாகவே, இன்றும், குமரிக்கடல் துறையில் அரிசி போன்ற வெண் சிறுமணலும், வேறுவகையான பலவண்ண மணலும் மிகுதியாகக் கிடப்பதைக் காணலாம். இவ்வாறு தேவி கடுந்தவமிருக்கும் போது, ஒரு நாள், பாணாசுரன் தேவியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவளை நேரில் காண வந்தான். தேவியைக் கண்டதும் அவளை மணந்து கொள்ள வேண்டினான். ஆனால், தேவி மறுத்து விடவே அசுரன் அவளைத் தன் உடல் வலிமையால் கவர்ந்து செல்ல எண்ணித் தன் உடைவாளை உருவினான். இத்தகைய தருணத்தை எதிர்நோக்கியிருந்த தேவியும் தன் போர்வாளை வீசினாள். நெடுநாட்கள் இருவரும் கடும் போர் புரிந்தனர். இறுதியில், தேவி தன் சக்கராயுதத்தால் பாணாசுரனைக் கொன்றொழித்தாள். தேவர் யாவரும் தேவிக்கு நன்றி செலுத்தினர். தேவியும் அவர்களை வாழ்த்தியருளியபின் மீண்டும் தன் தவத்தை மேற்கொள்ளத் தொடங்கினாள்.

நேர்த்தி கடன் அம்மனுக்கு விளக்கு போடுதல், புடவை சார்த்துதல் அண்ணதானம் செய்தல், அபிஷேகம் ஆராதனை செய்தல் இங்கு நேர்த்திகடனாக பக்தர்கள் செய்கின்றனர்.

The post புண்ணியம் தரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

அற்புதங்கள் நிறைந்த தாராமங்கலம் கயிலாசநாதர் திருக்கோயில்

$
0
0

அற்புதங்கள் நிறைந்த தாராமங்கலம் கயிலாசநாதர் திருக்கோயில்

சேலம் மாவட்டத்தில் உள்ள தாராமங்கலம் அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில், அற்புதங்களின் உறைவிடம் ! பேருந்து நிலையம் அருகில் அமைந்திருக்கும் இந்த ஆலயம், 13ம் நூற்றாண்டில் கெட்டிமுதலி என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதாம்.

இந்த ஆலயத்தின் சிறப்புகள் மொத்தம் 12. அவை…

பவளக்கல் படி:

 நுழைவு வாயிலில் கதவைத் திறந்ததும், சுமார் 2 அடி அகலத்தில் சிவப்பு நிறத்திலான இரண்டு பவளக்கல் படிகள் உள்ளன. உள்ளே நுழையும் பக்தர்கள் இந்த படிகளில் சிறிது நேரம் அமர்ந்திருந்தால், அவர்களின் உடல் உஷ்ணத்தைத் தனக்குள் ஈர்த்து, தணிக்கும் சக்தி இந்தக் கல்லுக்கு உண்டாம்.

 விதானச் சிற்பம்:

 மூலவர் சந்நிதி முன்புறம் உள்ள மண்டப விதானச் சிற்பம் கலைப் பொக்கிஷம்! இதழ் விரித்த தாமரை, அதன் இதழ்களைக் கவ்வியிருக்கும் எட்டு கிளிகள், சுற்றிலும் அன்னப் பறவைகள், மையச் சதுரத்தின் முனைகளில் உள்ள கல் வளையங்கள் கலைத்திறனுக்குச் சான்றாகத் திகழ்கின்றன. சங்கிலிப் பிணைப்பாகத் திகழ்ந்தாலும், வலையங்கள் ஒவ்வொன்றும் தனியே சுழலும் விதத்திலான சிற்ப வேலைப்பாடு பிரமிக்கவைக்கிறது.

 சகஸ்ரலிங்கம்:

 சகஸ்ரலிங்கச் சன்னிதி, இக்கோயிலின் சிற்பச் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கிறது. 1008 சிறிய லிங்கங்களை ஒருங்கே கொண்ட பெரிய சிவலிங்கம்! உற்று நோக்கினால் மட்டுமே சிறு லிங்கங்கள் புலப்படும்.

 யாழிகள்:

 மூலவர் சன்னிதி முன்புறம் உள்ள மண்டபத்தின் தூண் சிற்பங்களாக இடம்பெற்றிருக்கும் யாழிகள் குறிப்பிடத்தக்கவை. முதல் யாழியின் வாயில் வெற்றிடமாகத் திகழ, 2வது மற்றும் 3வது யாழிகளின் வாயில் தலா ஒரு கல் உருளை, 4வது யாழியின் வாயில் 2 கல் உருளைகள், 5வது யாழியின் வாயில் 3 கல் உருளைகள் என அமைத்திருக்கிறார்கள்.

tharamangalam

 ஜுரஹரேஸ்வரர்:

 கோயிலின் உள்பிராகாரத்தில் தெற்கு நோக்கிய நிலையில் 3 சிரங்கள், 3 கால்களோடு திகழும் ஜுரஹரேஸ்வரர் தரிசனம் விசேஷமானது ! ஞாயிற்றுக் கிழமைகளில் இவருக்கு விபூதி அபிஷேகம் செய்து, பிரசாதமாகப் பெற்று, நெற்றியில் இட்டுக்கொண்டால், தீராத ஜுரமும் தீரும் என்பது ஐதீகம். அதேபோல், மிளகு ரசம் சாதமும், வடைமாலையும் சமர்ப்பித்து இவரை வழிபட்டால், தீராப் பிணிகளும் தீரும் என்கிறார்கள்.

 பாதாள லிங்கம்:

 மகாமண்டபத்தின் வடமேற்கு மூலையில், நிலத்துக்குக் கீழே அமைந்திருக்கும் பாதாள லிங்கத்துக்குப் பச்சைக் கற்பூரம் கொண்டு, செவ்வாய்க் கிழமைகளில் அபிஷேகம் செய்து வந்தால், திருமண வரம், புத்திரப்பேறு, தொழில் வளம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 ஒன்பதே கற்களில் ஒரு சன்னிதி:

 இந்த ஆலயத்தில் ஒன்பதே கற்களால் உருவாக்கப்பட்ட சிறிய சன்னிதி ஒன்றும் உண்டு. ஒருமுறை, சிற்பிகளுக்கும், சுதை வேலைக் கலைஞர்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டதாம். இதில், இரண்டாம் தரப்பினரின் ஒத்துழைப்பைக் கோராமல், சிற்பிகள் அமைத்ததே இந்த ஸித்தி விநாயகர் சன்னிதி!

 பிரம்மன்:

 சிவனார் பிரம்மனின் சிரம் கொய்த புராணமும் இங்கே சிற்ப வடிவில் திகழ்கிறது. ஐந்து தலைகளுடன் ஒரு சிற்பத்தில் காட்சி தரும் பிரம்மன், அடுத்ததில் நான்முகனாகக் காட்சி தருகிறார்.

 தூண்கள்:

 மகா மண்டபத்தில் இருக்கும் தூண்களும் சிறப்பு பெற்றவையே ! சிறிய தூண்கள் இரண்டு, பிரதான தூண் ஒன்று எனத் திகழும் ஒவ்வொரு தூண் தொகுப்பும் ஒரே கல்லால் ஆனவை. சிவ வடிவங்கள், ரதிமன்மதன், பிரம்மனின் கோலங்கள்… என இந்தத் தூண்களில் உள்ள சிற்பங்கள் மிகத் தத்ரூபமானவை.

pillars

 மனிதனின் முகம்:

 மகா மண்டபத்தின் வெளிப்புறத்தில் வடக்கு ஓரத்தில், எறும்புகள் நுழைந்து வரும் அளவுக்கு  மட்டுமே துவாரங்கள் உள்ள ஒரு மனிதனின் முகம் அமைக்கப்பட்டுள்ளது. எறும்புகள் இந்த மனிதனின் காது, மூக்கு, கழுத்துப் பகுதிகளுக்குச் சென்று, பின்னர் மற்றொரு காது வழியாக வெளியேறும் விதமாக மிகச் சிறிய துவாரங்களுடன் திகழ்கிறது இந்தச் சிற்பம்.

 சூரிய வணக்கம்:

 மாசி மாதத்தில் 9, 10, 11 ஆகிய தேதிகளில் சூரியனின் கிரணங்கள் முதலில் கொடிமரத்தில் படிந்து, பிறகு நந்தியின் கொம்புகளுக்கு இடையே ஊடுருவி, மூலவரின் லிங்கத் திருமேனியைத் தழுவும் வகையிலான ஆலயம் மற்றும் கருவறை அமைப்பு, அதிசயிக்க வைக்கிறது.

 திருக்குளங்கள்:

 கோயிலுக்கு இரண்டு திருக்குளங்கள். ஒன்று, சுமார் 180 அடி சுற்றளவிலான சுற்றுச் சுவர்களுடன், அவற்றின் மீது 36 நந்திகள் அமைந்திருக்கும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது. மற்றொரு குளம் வட்ட வடிவிலும், படிக்கட்டுகள் எண்கோண வடிவிலும் அமைந்துள்ளது.

The post அற்புதங்கள் நிறைந்த தாராமங்கலம் கயிலாசநாதர் திருக்கோயில் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

AUGUST MONTH RASI PALAN 2017 by MUNAIVAR Dr.S.PANJANATHAN

$
0
0

AUGUST MONTH RASI PALAN 2017 by MUNAIVAR Dr.S.PANJANATHAN

https://www.youtube.com/watch?v=1XAOGAp0US8

Mesham (Aries):

Mesham is the first and raising rasi house among the twelve rasis in the vedic horoscope chart. People who are born in the mesha rasi always think higher, broad minded and have speedy approach in all the aspects.
Rishabam (Taurus):

Rishaba rasi people always blessings and tend to be down to earth in nature. Very positive thinking and will try to compete in many fields to become number one or winning person.

Mithunam (Gemini):

Calm and quite in nature and performs above average. Sometimes the luck plays role and shoot up like rocket to go on top of anything. Many famous personalities are possible to take birth under this rasi.

Katagam (Cancer):

Lucky people and mercy along with! More commanding, politically influenced & social rockers. Do or die matters will be easily tackled by kataga rasi people.

Katagam (Cancer):

Lucky people and mercy along with! More commanding, politically influenced & social rockers. Do or die matters will be easily tackled by kataga rasi people. Sensitive, emotional, harmonious, dedicated, intuitive, pleasure of living and well wishers.

Simmam (Leo):

War and peace. Runs life like war if angry and peaceful if all in favour. Lifetime achievements are major blessings for these people.

Kanni (Virgo):

Proper care, maintenance, perfection, love, responsibility, stewardship, gentle, polite, and motivation are the best suitable qualities for kanni rasi people.

Thulam (Libra):

Expectations are very high and almost same amount of blockages on either way. Life goes with good and bad combinations.

Virchagam (Scorpio):

Brave, Bold & Courageous people are born under Virchagam. Wants to travel and enjoy the adventures and keep themselves to become famous and flying colours.

Dhanusu (Sagittarius):

As the rasi owner is guru; the people under this rasi becomes real gurus. In born qualities of Dhanusu rasi people bring them up in life automatically to become excellent teachers, professors, spiritual leaders, famous scholars, researchers and related personalities.

Makaram (Capricorn):

Born with luck and fame to be on top in life. People under this rasi mostly becomes famous by nature and they shine like stars in any field.

Kumbam (Aquarius):

Worship, kindness, down to earth, curiosity, knowledge gathering, organising, listening abilities are good qualities of kumba rasi.

Meenam (Pisces):

Love, passion, attraction, helping nature, pious, calm, thankfulness, smartness, charming, availability, kind words are major good qualities for meena rasi people.

The post AUGUST MONTH RASI PALAN 2017 by MUNAIVAR Dr.S.PANJANATHAN appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

AUGUST MONTH RASI PALAN 2017 by SWAMY SRINIVASA RAMANUJAR

$
0
0

AUGUST MONTH RASI PALAN 2017 by SWAMY SRINIVASA RAMANUJAR

Mesham (Aries):

Mesham is the first and raising rasi house among the twelve rasis in the vedic horoscope chart. People who are born in the mesha rasi always think higher, broad minded and have speedy approach in all the aspects.

Rishabam (Taurus):

Rishaba rasi people always blessings and tend to be down to earth in nature. Very positive thinking and will try to compete in many fields to become number one or winning person.

Mithunam (Gemini):

Calm and quite in nature and performs above average. Sometimes the luck plays role and shoot up like rocket to go on top of anything. Many famous personalities are possible to take birth under this rasi.

Katagam (Cancer):

Lucky people and mercy along with! More commanding, politically influenced & social rockers. Do or die matters will be easily tackled by kataga rasi people.

Katagam (Cancer):

Lucky people and mercy along with! More commanding, politically influenced & social rockers. Do or die matters will be easily tackled by kataga rasi people. Sensitive, emotional, harmonious, dedicated, intuitive, pleasure of living and well wishers.

Simmam (Leo):

War and peace. Runs life like war if angry and peaceful if all in favour. Lifetime achievements are major blessings for these people.

Kanni (Virgo):

Proper care, maintenance, perfection, love, responsibility, stewardship, gentle, polite, and motivation are the best suitable qualities for kanni rasi people.

Thulam (Libra):

Expectations are very high and almost same amount of blockages on either way. Life goes with good and bad combinations.

Virchagam (Scorpio):

Brave, Bold & Courageous people are born under Virchagam. Wants to travel and enjoy the adventures and keep themselves to become famous and flying colours.

Dhanusu (Sagittarius):

As the rasi owner is guru; the people under this rasi becomes real gurus. In born qualities of Dhanusu rasi people bring them up in life automatically to become excellent teachers, professors, spiritual leaders, famous scholars, researchers and related personalities.

Makaram (Capricorn):

Born with luck and fame to be on top in life. People under this rasi mostly becomes famous by nature and they shine like stars in any field.

Kumbam (Aquarius):

Worship, kindness, down to earth, curiosity, knowledge gathering, organising, listening abilities are good qualities of kumba rasi.

Meenam (Pisces):

Love, passion, attraction, helping nature, pious, calm, thankfulness, smartness, charming, availability, kind words are major good qualities for meena rasi people.

The post AUGUST MONTH RASI PALAN 2017 by SWAMY SRINIVASA RAMANUJAR appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


நோய்களிலிருந்து அனுதினமும் காக்கும் புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மன்

$
0
0

நோய்களிலிருந்து அனுதினமும் காக்கும் புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மன்

நோய்களிலிருந்து அனுதினமும் காக்கும் மாரியம்மன்

சுயம்பு அம்மன்:

 மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவானது என்பது ஒரு தனிச் சிறப்பாகும். மூலவர் அம்மன் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. தைலக் காப்பு சாற்றப்படுகிறது.

  அம்பாள் உற்சவ மூர்த்திக்கும் நித்தியபடி அபிஷேகம் நடைபெறுகிறது. அம்பாளுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைல காப்பு அபிஷேகம் நடைபெறும். அச்சமயம் ஒரு மண்டலம் அம்பாளை ஒரு வெண் திரையில் வரைந்து உபசாரம் செய்து, அர்ச்சனை ஆராதனைகள் நடைபெறும். அப்போது மூலஸ்தான அம்பாளுக்கு 48 நாட்களிலும் தினமும் இரு வேளை சாம்பிராணி தைலம், புணுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறும்.

திருமண பாக்கியத்தை அளிக்கும் முத்துமாரியம்மன்!

 தைலாபிஷேக நேரத்தில் அம்பாளின் தைலகாப்பின்போது உக்ரம் அதிகமாகும். அதை தவிர்க்க அம்பாளுக்கு தயிர் பள்ளயம், இளநீர் வைத்து நைவேத்தியம் நடைபெறும். சுமார் 6 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தருகிறாள் அம்மன். அம்மை நோய் 2 அல்லது 3 தினங்களிலேயே இத்தலத்தில் வழிபடுவோர்க்கு குணமாகிவிடுகிறது.

மாங்கல்ய பாக்கியம் தரும் ஆடிவெள்ளி வழிபாடு!

உள்தொட்டி நிரப்புதல்:

 அம்மன் சன்னதிக்கு அருகில் உள்ள தொட்டி உள்தொட்டி என்றும், பிரகாரத்தை சுற்றி உள்ள தொட்டி வெளித்தொட்டி என்றும் அழைக்கப்படுகிறது. அம்மை நோய்கண்டவர்கள் இந்த இரண்டு தொட்டிகளிலும் குடம் குடமாக தண்ணீர் ஊற்றுகின்றனர். இவ்வாறு செய்வதால் அம்பாளின் உஷ்ணம் தணிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கோடைநாட்களில் அம்பாளுக்கு முகத்திலும், சிரசிலும் முத்து முத்தாக வியர்வை வியர்த்து தானாக மாறிவிடும் பழக்கம் தற்போது வரை உள்ளது. இதன் காரணமாகவே அன்னையை முத்துமாரி என்று அழைக்கின்றார்கள்.

 குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வைசூரி வார்க்கும் சமயத்தில் அம்மனுக்கு பிரார்த்தனை செய்து உள்தொட்டி, வெளித்தொட்டிகளில் நீர் நிரப்பினால் விரைவில் எவ்வித சிரமமும் இன்றி குணமடையும் .

கோடி புண்ணியம் தரும் ஆடி மாத திருவிழாக்கள்

 இங்கு உட்பிரகாரத்தில் எழுந்தருளியிருக்கும் பாடகச்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் பைரவ உபாசகராக இருந்து குறைவிலா அன்னதானம் செய்ததுடன் தனது சித்தியினால் அனைவருக்கும் திருநீறு அளித்து வந்து தீராத நோயெல்லாம் தீர்த்து வைத்திருக்கிறார். ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளால் மாரியம்மன் யந்திர பிரஷ்டை செய்யப்பட்டதாகும். ஆகம விதிப்படி தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் கோயில் இது.

சாயா சக்தி பீடம் - மங்களங்கள் அருளும் மரகதாம்பிகை

சிறப்பம்சங்கள்:

இத்தலத்தில் அம்மன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

The post நோய்களிலிருந்து அனுதினமும் காக்கும் புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!

$
0
0

இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!

இராமேஸ்வரம் தல வரலாறுராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு “ராம ஈஸ்வரம்” என்று பெயர் ஆனது. மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.

மகாலெட்சுமிதீர்த்தம் :

இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது. இதில் ஸனானம் செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.

 இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!

சாவித்திரி தீர்த்தம், காயத்ரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம்:

இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது. இம்மூன்று தீர்த்ங்களில் ஸ்னானம் செய்வதால் மத சடங்குகளை விட்டவர் சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம்.

சேது மாதவ தீர்த்தம் :

இது மூன்றாம் பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம். இதில் ஸ்ரீராபிரானால் சகல லெட்சுமி விலாசமும், சித்த சக்தியும் பெறலாம்.

நள தீர்த்தம் :

மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு தென்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சுரிய தேஜசை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.

நீல தீர்த்தம் :

மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு வடபுறம் உள்ளது. இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.

கவாய தீர்த்தம் :

இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சக்குசாயம், கோபம் மனைவலினம், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

கவாட்ச தீர்த்தம் :

இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்குஅருகில் உள்ளது. இதில் நீராடுவதால் நரகத்திற்கு செல்ல மாட்டார்கள். மன வலிமை, தேக ஆரோக்கியம், திட சரீரம் கிடைக்கும்.

இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!
இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!

கந்நமாதன தீர்த்தம் :

சேது மாதவர் சன்னதியின் முன்பகுதியில் கவாய், கவாட்ச தீர்த்தங்களுக்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெற்று பிரம்ம ஹத்தியாதிபாப நிவர்த்தி பெறுவர்.

சங்கு தீர்த்தம் :

இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில் இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்.

சக்கர தீர்த்தம் :

இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம் பிரகாரத்தின் வடபுறம் உள்ள கருவூலத்தின் கீழ்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் அடைவர்.

பிரம்மாத்திர விமோசன தீர்த்தம் :

இது இரண்டாம் பிரகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சன்னதி அருகில் உள்ளது. இதில் நீராடுவதால்பிரம்மஹத்தயாதிதோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதடன், பில்லி சுனியமும் நீங்கும்.

சூர்ய தீர்த்தம் :

இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது. இத்திர்த்தத்தில் நீராடுவதால் திரிகாலஞானமும் உண்டாவதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்.

சந்திர தீர்த்தம் :

இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது. இதில் நீராடுவதால் ரோக நிவர்த்தி அகலும்.

கங்கா தீர்த்தம,யமுனா தீர்த்தம், காயத்ரி தீர்த்தம்:

இம்மூன்று தீர்தத்தங்களும்திருக்கோவில் இரண்டாம் பிரகாலத்தில் அமைந்தள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் உள்ள சூரியன், சந்திரன் தீர்த்தத்திற்குஎதிரில் அமைந்துள்ளது. இவைகளில் நீராடுவதனால் பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவைகளும் அஞ்ஞானமும் நீங்கி முக்தி அடையலாம்.

சாத்யாம்ருத தீர்த்தம் :

திருக்கோவில் அம்பாள் சன்னதியின் மூலஸ்தான நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டலட்சுமி சன்னதியின் தெற்கு பக்கம் உள்ளது. இதில் நிராடினால் தேவதாகோபம் பிராம்மணசாபம் நிவர்த்தியாவதுடன், சூரியமூர்த்தி, மோட்ச பிராப்தி ஆகியவை கிடைக்கும்.

சிவ தீர்த்தம் :

இந்த தீர்த்தம் சுவாமி சன்னதி நுழைவாயில் மற்றும் அம்மன் சன்னதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்தி தேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது. இதில் ஸ்னானம் நீராடினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

சர்வ தீர்த்தம் :

இந்ததீர்த்தம் முதல் பிரகாரத்தில் இராமநாதசுவாமி சன்னத முன் உள்ளது. இதில் நிராடினால் பிறவிக்குருடு, நோயம் நரை திரையும் நீங்கி வளமடையலாம். கோவிலுக்கு வெளியே பல தீர்த்தங்கள். இவை புயலாலும், ஆக்கிரமிப்பாலும் பாதிக்கப்பட்டதால் இவற்றில் நீராட இயலாது.

கோடி தீர்த்தம் :

இந்த தீர்த்தமானது இராமர் லிங்கப் பிரதிஷஙடை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது. அதனால் ராமநானவர் தன் அம்பின் நுனியை பூமியில் வைத்து அழுத்தினதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது. அதுவே கோடி தீர்த்தம் எனப்படுகிறது. இந்நீரானது இராமநாதசுவாமி மற்றும் எல்லா சுவாமி அம்பாள் ஆகியவர்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படவதால் பக்தர்கள் இத்தீர்த்தத்தில் நேரடியாக தாங்களே தீர்தத்தை எடுத்து குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.  பக்தர்கள் இத்திர்த்தத்தில் நீராட இரண்டாம் பிரகாரம் வடபகுதியில் உள்ள பைரவர் சன்னதி முன்புறம் உள்ள கோமுக் மூலம் தீர்த்தத்தை விடுவார்கள், அதன் மூலம் நீராடலாம். கோடி திர்த்தத்தில் நிராடியபின் இவ்வூரில் இரவு தங்கலாகாது என்பது சம்பிரதாயம்.

The post இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி

$
0
0

 கோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயில்

கோபுர தரிசனம் கோடி அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயில்

 நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற சைவ வைணவ திருத்தலமாகும். இந்த கோவிலில் ஆடித்தவசு திருவிழா, சித்திரை திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

sankarankovil

தலச்சிறப்பு :

 பாண்டிய நாட்டு பஞ்ச தலங்களில் இது பிருதிவிதலம் ( மண் தலம் ). இங்கு உள்ள புற்று மண் மிகவும் பிரசித்தி பெற்றது. புற்று மண்ணை நெற்றியில் திருநீராக எண்ணி பக்தியுடன் பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள். பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலே வாழ்ந்து, தேவியின் மகிமைகளை உலகறியச் செய்தார். இவரது சமாதியும் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. மார்ச் மாதம் 21, 22, 23, ஆகிய நாட்களிலும், செப்டம்பர் மாதம் 21, 22, 23 ஆகிய நாட்களிலும் சூரியன் உதிக்கும் போது, அதன் ஒளி சங்கரலிங்கர் மீது விழுவதை இன்றும் காணலாம். சூரிய பகவான் சங்கரலிங்கரை இந்நாட்களில் வழிபட்டு வருகிறார் என்று தல புராணம் கூறுகிறது.

தல வரலாறு :

 சங்கன் என்னும் நாக அரசன் சிவன் மீதும், பதுமன் என்ற அரசன் திருமால் மீதும் பக்தி கொண்டிருந்தனர். இருவருக்கும் அடிக்கடி சிவன் பெரியவரா? திருமால் பெரியவரா? என்ற வாதம் எழுந்தது. தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு தெரிவிக்க, இருவரும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள். இதையடுத்து, இருவரும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக காட்சி தந்தனர்.

sss

 பின்னர், அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவன், சங்கர லிங்கமாகவும் எழுந்தருளினார். நாகராஜாக்கள் இருவரும் சங்கர லிங்கத்தை வழிபட்டு வந்தனர். காலப் போக்கில் இந்த லிங்கத்தை புற்று மூடி விட்டது. நாகராஜாக்களும் அதனுள்ளேயே இருந்தனர். பக்தர் ஒருவர் இந்த புற்றை இடித்தபோது, உள்ளிருந்த நாகத்தின் வாலை வெட்டிவிட்டார். அதனால் ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்தவர் புற்றுக்குள் பார்த்தபோது லிங்கத்தைக் கண்டார். தகவல், பாண்டிய மன்னனுக்கு சென்றது. லிங்கம் இருந்த இடத்தில் அவன் கோயில் எழுப்பினான்.

நடைதிறப்பு : காலை 5.00 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.

பூஜை விவரம் : இத்திருக்கோயிலில் காமிக ஆகமப்படியமைந்து பூசைகளும் அதன்படி நடந்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் ஏழு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.

The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

தொடங்கும் செயல்கள் இனிதே நிறை வேறும் ஆடி பெருக்கு

$
0
0

தொடங்கும் செயல்கள் இனிதே நிறை வேறும் ஆடி பெருக்கு

 ஆடி மாதம் 18-ந் தேதியில் வரும் பதினெட்டாம் பெருக்கு விழா, நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. தட்சிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்பணிகளைத் தொடங்குவர். ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு.

aadi1

 நாடு செழிக்கத் தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப் போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர். அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்தனர். அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடினர். இந்த விழா இப்போதும் காவிரிக்கரை மாவட்டங்களில் சிறப்பாக நடக்கிறது. இந்நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறை வேறும் என்பது ஐதீகம். ஆடி 18-ல் காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதுமணத் தம்பதிகள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர்.

aadi2

 காவிரிக்கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கைக் கொண்டாட வேண்டும் என்பதில்லை. ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். ஒரு செம்பில் அரைத்த மஞ்சளை சிறிதளவு போடவேண்டும். நிறைகுடத்திலிருந்து அந்த செம்பில் நீர் எடுத்ததும், மஞ்சள் கரைந்து விடும். திருவிளக்கேற்றி அந்த நீரை விளக்கின் முன் வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும்.

 கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து, முன்னொரு காலத்தில் எங்களை மூதாதையர் உங்களை புனிதமாகக் கருதி வழிபட்டது போல் எங்களுக்கும் அத்தகைய மனநிலையைத் தாருங்கள் என்று வேண்டுங்கள். காவிரியையும் தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

aadi3

 அட்சய திரிதியை விட, ஆடிப்பெருக்கு நகை வாங்க உயர்ந்த நன்னாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் தொடங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பர். ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் தொடங்குவதில்லை என்பர். ஆனால், ஆடிப்பெருக்கு மட்டும் விதிவிலக்காகும்.

 காவிரியன்னை ரங்கநாதரின் தங்கையாகக் கருதப்படுகிறாள். இந்நாளில், சமயபுரம் பகுதியில் திருவிழா கோலமாக இருக்கும். இவ்வூருக்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளையும், மைத்துனர்களையும் வீட்டிற்கு வரவழைத்து சீர் கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. தம்பதியரை இங்குள்ள ஆதிமாரியம்மன் கோவிலுக்கும் அழைத்துச் செல்வர். இவள் சமயபுரம் மாரியம்மனின் சகோதரியாக கருதப்படுகிறாள்.

 சாதாரணமக்களே, இவ்வாறு சீர்கொடுக்கும் போது, இங்கே கோவில் கொண்டிருக்கும் ரங்கநாதர் சும்மா இருப்பாரா! தன் தங்கை காவிரிக்கு சீர் கொடுக்க அவர் அம்மாமண்டப படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்குள்ள மண்டபத்தில் சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை அங்கேயே ஆஸ்தானத்தில் வீற்றிருப்பார். சீதனப்பொருட்களாக பட்டு, தாலிப்பொட்டு, மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் ஆற்றில் மிதக்க விடப்படும்.

 ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். வசிஷ்டர், ‘அறுபத்தாறு கோடி தீர்த்தங்களைத் தன்னிடம் கொண்ட காவிரிக்கு, தட்சிண கங்கை என்று பெயர். அந்த நதியில் நீராடினால் உன் பாவ உணர்வுகள் நீங்கும்’ என்று கூறினார். அதன்படி ராமச்சந்திர மூர்த்தி, காவிரியில் நீராடி தன்னுடைய பாவங்களைப் போக்கிக் கொண்டார். அவர் காவிரியில் நீராடிய நாள் ஆடிப்பெருக்கு என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

 தென்னிந்தியாவில் திரிவேணி எனப்படும் பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோவிலின் நடை, ஆடிப்பதினெட்டு அன்று அதிகாலையில் திறக்கப்படும். மக்கள் கூடுதுறையில் நீராடிவிட்டு இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.

The post தொடங்கும் செயல்கள் இனிதே நிறை வேறும் ஆடி பெருக்கு appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

அனைத்து விருப்பங்களையும் கற்பக மரம்போல் நிறைவேற்றும் ஸர்வ ஏகாதசி

$
0
0

அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் ஸர்வ ஏகாதசி

அமாவாசை மற்றும் பௌர்ணமிக்குப் பிறகு வரும் பதினோறாவது நாளான ஏகாதசி தினமானது பகவான் ஹரிக்கு மிகவும் பிரியமான நாளாகும்.

ஏகாதசி விரதத்தின் குறிக்கோள்

ஏகாதசி விரதம் நாம ஸர்வ காம பலப்ரதம்

கர்தவ்யம் ஸர்வதா விப்ரனரர் விஷ்ணு ப்ரீணன காரணம்

 “ஒருவனது அனைத்து விருப்பங்களையும் கற்பக மரம்போல் நிறைவேற்றும் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் பகவான் விஷ்ணுவை திருப்திப்படுத்த முடியும். எனவே, அனைத்து உயிர்வாழிகளும் இவ்விரதத்தைக் கடைப்பிடித்து பகவான் ஹரியை மகிழ்விக்க வேண்டியது அவசியம்.”

perumal

 ஏகாதசியின் முந்தைய நாளான தசமியில் ஒருவேளை மட்டும் உண்டு, ஏகாதசி முழுவதும் முழு உபவாசம் மேற்கொண்டு, மறுநாள் துவாதசியில் ஒருவேளை மட்டுமே ஏற்று ஏகாதசியைக் கடைப்பிடிப்பது கடுந்தவமாகும். இதைப் பயிற்சி செய்ய இயலாதவர்கள், முதல் நாளான தசமியில் ஒருவேளை மட்டும் உண்டு, ஏகாதசியன்று முழு உபவாசம் மேற்கொள்ளலாம். ஏகாதசியன்று மட்டும் தானிய உணவுகளை தவிர்த்து, பழங்களையும் கிழங்குகளையும் உண்டு விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.

அஷ்டைதான்ய வ்ரதாஹ்னானி ஆபோ மூலம் பலம் பய
ஹவிர் பிராமண காம்யா ச குரோர் வசனம் ஆஸதமே

 ஏகாதசி திருநாளில் தவிர்க்க வேண்டியவற்றில் சில: (1) அரிசி, அரிசி வகைப் பொருட்கள், (2) கோதுமை, மைதா போன்றவை, (3) பார்லி, (4) பருப்பு வகைகள், பட்டாணி, (5) கடுகு எண்ணெய், நல்லெண்ணெய். இவற்றை ஏகாதசியன்று உட்கொண்டால் விரதமானது முறியடிக்கப்படுகிறது.

பாவங்களைப் போக்கும் மலை வேங்கட மலை!

 ஏகாதசி, ஹரி-வாஸர என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், அந்நாள், நமது எல்லா புலன்களையும் பகவான் ஹரியின் திருப்திக்காக மட்டுமே ஈடுபடுத்தும் நாள்; ஹரிக்காக மட்டுமே வாழும் நாள்; நமக்குக் கிடைக்கப் பெற்றுள்ள அரிய வரப்பிரசாதம். இந்நாளில் ஒவ்வொருவரும் பகவானுக்கும் அவரின் பக்தர்களுக்கும் சேவை செய்வதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

 மேலும், ஏகாதசியன்று பாவ காரியங்களையும் புலனின்பங்களையும் விடுத்து, இல்லறக் கடமைகளைச் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, ஆன்மீக உயர்விற்காக பகவானின் உன்னத சேவையில் நம்மை நாம் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

கிருஹ்ய பரிஷிஷ்ட காத்யாயன ஸ்மிருதி,

விஷ்ணு தர்மம், பிரஹ்ம வைவர்த புராணம்

eaka

 

ஏகாதசி விரதமானது துவாதசி அன்று காலையில் தானியங்களை ஏற்றுக்கொள்வதன் மூலமாக முடிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் விரதத்தை முடிப்பது முக்கியமானதாகும். அவ்வாறு முடிக்கத் தவறினால், ஏகாதசி விரதம் முழுமையடையாது.

The post அனைத்து விருப்பங்களையும் கற்பக மரம்போல் நிறைவேற்றும் ஸர்வ ஏகாதசி appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

தோஷங்களை நீக்கும் அற்புதங்கள் நிறைந்த பழமையான குரு பரிகார ஸ்தலம்

$
0
0

தோஷங்களை நீக்கும் அற்புதங்கள் நிறைந்த பழமையான குரு பரிகார ஸ்தலம்

குரு தலமாக திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் ஆகியவை விளங்குகிறது. திட்டை திருத்தலம் தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

பிரளய காலத்தில் அழியாமல் இருந்து, மந்திர ஒலிகள் தோன்றிய மகத்தான தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு. இந்தக் கோவிலில் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்பதாகும். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும்.

guru1

இத்தலத்தைப் பற்றி திருஞானசம்பந்தர் பதிகம் பாடியுள்ளார். வசிஷ்ட முனிவர் இங்கு வந்து ஆசிரமம் அமைத்து தவம் இருந்து இறைவனை வழிபட்டுள்ளார். ஆதலால் இந்த தலம் வசிஷ்டாஸ்ரமம் என அழைக்கப்படுகிறது. இத்தலத்தை தென்குடித்திட்டை என்றும் அழைப்பர்.

பஞ்சலிங்க தலம்:

 திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், ஒரு பஞ்சலிங்க ஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்தக் கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மத்தியில் மூலவர் ஐந்தாவது லிங்கமாக உள்ளார். பஞ்ச பூதங்களுக்கும் உரிய தலமாகவும் இது விளங்குகிறது.

இத்தலத்தில் உள்ள இறைவன் தானே தோன்றியதால் ஸ்ரீவயம்பூதேஸ்வரர் என்றும், வசிஷ்ட மகரிஷி தவமிருந்து வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் என்றும், பசுக்கள் வணங்கி வழிபட்ட தலம் என்பதால் பசுபதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அனந்தீஸ்வரர், தேனுபுரீஸ்வரர், ரதபுரீஸ்வரர், நாகநாதர், நாகேஸ்வரர் என்ற பெயர்களும் இத்தல இறைவனுக்கு உண்டு.

மங்களம் தரும் மங்களாம்பிகை:

mangalabigai amman

 மகாப்பிரளய காலத்தில் உலகைக் காக்க இறைவனுடன் ஓடம் ஏறி வந்ததால், இத்தலத்தில் உள்ள இறைவியை லோகநாயகி என்று அழைக்கின்றனர். சகல மங்களங்களையும் தருவதால் மங்களாம்பிகை என்றும், மங்களேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார்.

 கும்பகோணத்தில் சோமநாதன் என்பவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இவரது வீட்டுக்கு வந்த ஜோதிடர் ஒருவர், ‘உங்கள் மகள் மங்களா 16–வது வயதில் விதவையாகி விடுவாள்’ எனக் கூறினார். அதைக்கேட்டு சோமநாதன் வருந்தினார்.

 சிறிது காலத்தில் தஞ்சைக்கு அருகே உள்ள திட்டையில் உள்ள ஒருவருக்கும், மங்களாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திட்டைக்கு வந்த நாள் முதல் மங்களா, தனது கணவன் நீண்டநாட்கள் வாழ வேண்டும் என திட்டையில் உள்ள லோகநாயகி அம்மனை வணங்கி வந்தாள். பவுர்ணமி தினத்தன்று எமன் மங்களாவின், கணவனின் உயிரை பறிக்க நெருங்கினான். இதனை அறிந்து அலறித் துடித்த மங்களா, லோகநாயகி அம்மனை சரணடைந்து, ‘எமனிடம் இருந்து என் கணவனின் உயிரை காப்பாற்றி, எனக்கு மாங்கல்ய பிச்சை கொடு’ என கண்ணீர் மல்க வேண்டினாள். அவளது பிரார்த்தனைக்கு மனம் இரங்கிய லோகநாயகி, மங்களாவின் கையில் விபூதியை கொடுத்து ‘இதை எமன் மீது இடு. உன் கணவன் நீண்ட ஆயுளுடன் இருப்பான். நீயும் நீண்ட நாட்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாயாக’ என ஆசி கூறி மறைந்தார்.

 மங்களாவும், இறைவியின் ஆணைப்படியே செய்தாள். எமன் மறைந்தான். பின்னர் மங்களா நீண்ட நாட்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள். மாங்கல்ய பிச்சை கொடுத்ததால் இத்தலத்தில் அன்னை மங்களாம்பிகா, மங்களேஸ்வரி என அழைக்கப்படுகிறார்.

 இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இறைவி, இறைவனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அமர்ந்துள்ளார். சிவன் இல்லையேல் சக்தியில்லை. சக்தியில்லையேல் சிவன் இல்லை. ஆண், பெண் சமத்துவத்திற்கு அற்புத உதாரணமாக அம்மன் இத்தலத்தில் கோவில் கொண்டுள்ளார். அம்மன் சன்னிதிக்கு எதிரே விமானத்தில் மேஷம் முதல் மீனம் வரையான 12 ராசிகளுக்குரிய சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தோஷம் நீங்க தங்கள் ராசிக்கு கீழே நின்று அம்மனை பிரார்த்தனை செய்து கொண்டால், தோஷங்கள் நீங்கி நலம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

குரு பகவான்:

dhatchana_moorthy

 நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது.

 இத்தகைய குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். நவக்கிரகங்களின் வரிசையில் ஐந்தாவதாக இருப்பவர் வியாழ பகவான் எனப்படும் குரு. மற்ற கிரகங் களுக்கு இல்லாத சிறப்பு குருவுக்கு உண்டு. நவக்கிரகங்களில் சூரியன் ராஜா. சந்திரன் ராணி. செவ்வாய் கிரகம் சேனாதிபதி. புதன் இளவரசர். குரு பகவான் ராஜ மந்திரி. மதி நிறைந்த அமைச்சர் என்ற அந்தஸ்தில் உள்ளவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

 இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 இந்த ஆண்டு குரு பெயர்ச்சி ஆகஸ்டு 2–ந் தேதி (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. அன்று காலை 9.30 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார் குரு பகவான். இதையொட்டி, இத்தல ராஜ குருவுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும், யாகங்களும் நடைபெறுகின்றன. குரு பெயர்ச்சியை முன்னிட்டு அடுத்த மாதம் 8–ந் தேதி லட்சார்ச்சனை நடக்கிறது. அதைத் தொடர்ந்து 15–ந் தேதி தொடங்கி 17–ந் தேதி வரை 3 நாட்களுக்கு பரிகார யாக பூஜை நடத்தப்படுகிறது.

அமைவிடம்:

 தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் திட்டை என்னும் கிராமத்தில் இத்தலம் அமைந்துள்ளது. தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பள்ளியக்கிரகாரம் என்ற பகுதியில் இருந்து திட்டைக்கு சாலை பிரிந்து செல்கிறது. தஞ்சையில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.

குரு  கிரக  பரிகாரங்கள்:

 வியாழ பகவானுக்குரிய நாளாகிய வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குருபகவானுக்கும் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர் களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம்.

 மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும். குரு பகவானின் அதி தேவதைகளான பிரம்மன், இந்திரன் ஆகியோரை வழிபட்டாலும் குரு மகிழ்ச்சி கொண்டு பலன்களை வழங்குவார். ‘அடாணா’ ராகத்தில் குருபகவானின் கீர்த்தனைகளைப் பாடி பிரார்த்தனை செய்வதும் நலம் தரும். ஜாதகத்தில் குரு பலவீனமாகவோ, தோஷத்துடனோ இருந்தால், நவமி அன்று சண்டி ஹோமம் செய்வது சிறப்பான பலனை தரும்.

மகாவிஷ்ணு உருவாக்கிய தீர்த்தம்:

 இந்த தலத்தில் பசு தீர்த்தம், சூல தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. பசு தீர்த்தத்தில் ஒரு துளி நீரானது, நம்முடைய சகல பாவங்களையும் போக்கிவிடும் வல்லமை கொண்டது. சூல தீர்த்தமானது சிவ பக்தியில் நம்மை திளைக்கச் செய்து சிவனின் திருப்பாதத்தில் நம்மை ஆட்கொள்ள செய்யும் வல்லமை கொண்டது என்று புராணங்கள் கூறுகின்றன.

 மகாவிஷ்ணு ஒரு சமயம் யோக நித்திரையில் இருக்கும் போது, மது, கைடவர் என்ற இரு அரக்கர்கள் தோன்றி தேவர்களை துன்புறுத்தினர். நித்திரை அகன்று எழுந்த மகாவிஷ்ணு, அசுரர்களை எதிர்த்து போர் புரிந்தார். அப்போது விஷ்ணு தன் பலம் குறைவதை உணர்ந்தார். தன் பலத்தை புதுப்பித்துக்கொள்ள திட்டையில் தன் சக்ராயுதத்தால் ஒரு குளம் உண்டாக்கி, அதில் நீராடி இறைவனை வழிபட்டார். அதனால் பலம் ஏற்பட்டு அரக்கர்களை அழித்தார். மகாவிஷ்ணுவால் உருவாக்கப்பட்ட குளம் ‘சக்கர தீர்த்தக்குளம்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.

இறைவன்  மீது  சொட்டும்  நீர்:

 நமசிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம். அந்த ஐந்து எழுத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவம் லிங்க உருவம். திட்டையில் லிங்க வடிவமாக எழுந்தருளியிருக்கும் மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில், சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. அதற்கும் ஒரு வரலாறு உண்டு.

 தன் மாமனார் தட்சனால் தினம் ஒரு கலையாக தேய்ந்து அழியும் சாபம் பெற்றார் சந்திர பகவான். தினமும் தேய்ந்து கொண்டே வந்த அவர் திங்களூர் வந்து கயிலாயநாதரை, வணங்கி தவம் இருந்தார். கயிலாயநாதரும் சந்திரனின் சாபத்தை நீக்கி, மூன்றாம் பிறையாக தனது தலையில் சந்திரனை அணிந்து கொண்டார். திங்களூரில் தன் சாபத்தை போக்கிய சிவபெருமானுக்கு திட்டையிலே தன் நன்றிக் கடன் செலுத்துகிறார் சந்திரன். இறைவனுக்கு மேலே சந்திரக்காந்தக் கல்லாக அமர்ந்து காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யாபிஷேகம் செய்கிறார். 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன் மீது ஒரு சொட்டு நீர் விழுவதை இன்றும் காணலாம். உலகில் வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இது.

The post தோஷங்களை நீக்கும் அற்புதங்கள் நிறைந்த பழமையான குரு பரிகார ஸ்தலம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

நாளை வரலட்சுமி விரதம், விரதம் இருப்பது ஏன்?

$
0
0

நாளை வரலட்சுமி விரதம், விரதம் இருப்பது ஏன்?

 வரலட்சுமி விரதம் ஆடி மாதம் வளர்பிறையில் கடைசி வெள்ளிக்கிழமை (ஆகஸ்டு 4-ந்தேதி) அனுசரிக்கவேண்டிய விரதம் இது. வரலட்சுமி விரத பூஜை செய்யும் போது, சுமங்கலிப் பெண்கள் நோன்பு சரடை வைத்து பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் அந்த சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும்.

vara

 மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருமதி. இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள்போல் கருதாமல், இறைவனே அவர்களது வடிவில் எழுந்தருளி இருப்பதாக கருதி, அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியைத் தந்தது. மகாலட்சுமி, சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள் புரிந்தாள்.

 என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களது இல்லத்தில் நான் வசிப்பேன் என்று அப்போது சாருமதிக்கு அருளிய வரலட்சுமி, அந்த விரத முறையை கூறி மற்றவர்களுக்கு எடுத்துரைக்குமாறும் கேட்டுக் கொண்டாள். அதை அப்படியேச் செய்தாள் சாருமதி. இப்படித்தான் வரலட்சுமி விரதம் பிறந்தது.

vara1

 பதினெட்டாம் பெருக்கு முடிந்து ஆகஸ்டு 4ம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இல்லந்தோறும் திருமகளை வரவேற்று நோன்பிருந்து பூஜை செய்து மகிழ்கிறோம். இந்நாளை வரலட்சுமி விரதம் அல்லது வரலட்சுமி நோன்பு என்கிறோம். திருமகளான லட்சுமி நம் இல்லத்திற்கு எழுந்தருளி கொலுவிருப்பதால் இதை வரலட்சுமி பண்டிகை என்றும் கூறலாம்.

பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை

 இந்நாள் ஆடி அல்லது ஆவணி மாதம் வெள்ளிக் கிழமையில் வருகிறது. குறிப்பாக ஆவணி மாதம் பௌர்ணமி நாளுக்கு முந்தையதாக வரும் வெள்ளிக் கிழமையில் தான் இவ்விரத பூஜை அனுசரிக்கப்படுகிறது. ஆவணி மாதம் பௌர்ணமி அமைவதைப் பொறுத்து ஆடியிலோ ஆவணியிலோ கொண்டாட்டப் படுகிறது.

அம்மனை அழைத்தல்

 வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் என்றால் முதல் நாளான வியாழனன்றே அம்மனை அழைக்கிறோம். பூஜை செய்யப் போகுமிடத்தில் இழை கோலம் போட்டு காவியிட்டு ஒரு தட்டில் அட்சதை(அரிசி)யைப் பரப்பி அம்மனை ஆவாஹனம் செய்யப் போகும் கலசத்தை அதன் மீது வைக்க வேண்டும். கலசத்தினுள் அட்சதையுடன் வெற்றிலை பாக்கு, மஞ்சள் ஒரு வெள்ளிக் காசு மற்றும் ஒரு எலுமிச்சைப் பழமும் வைத்து மாவிலையைக் கலசத்தின் மீது வைத்து அதன் மீது தேங்காயை வைக்கிறோம். அம்மனின் முகத்தைக் கலசத்தோடு இணைத்து வைத்து விளக்கேற்றி வெண்பொங்கல் நிவேதனம் செய்கிறோம். அம்மனை அழைப்பதாக உள்ள பாடல்கள் பாடி வரலட்சுமி அம்மனை வரவற்கிறோம்.

vara4

 திருமணத்திற்குப் பிறகு வரும் முதல் வரலட்சுமி விரதத்தன்று புதுமணம் முடித்த பெண்ணிற்கு இந்நோன்பு எடுத்து வைக்கப்படும். புகுந்த வீட்டில் இந்நோன்பு அனுசரிக்கும் வழக்கம் உள்ள வீடுகளில் பெண்கள் வரலட்சுமி விரதம் கண்டிப்பாக அனுசரிக்க வேண்டும். சில பெண்கள் புகுந்த வீட்டில் வழக்கமில்லாமலிருந்தாலும் பிறந்த வீட்டிலிருந்து நோன்பு எடுத்து வரும் பழக்கம் உள்ளது.

 ஆனால் இரண்டு பக்கமும் இப்பண்டிகை கொண்டாடும் வழக்கமில்லாமலிருந்தால் தாம் மட்டும் நோன்பு எடுக்கும் வழக்கம் அவ்வளவாகத் தமிழ் நாட்டில் இல்லை. உறவினர்கள் வீட்டில் பண்டிகையில் கலந்து கொண்டு பூஜையில் பங்கேற்கலாம். புகுந்த வீட்டில் வரலட்சுமி விரதம் கொண்டாடும் பழக்கமுள்ள வீடுகளில் திருமணம் முடித்த கையோடு இப்பண்டிகைக்கு முன்பாக அம்மனின் திருமுகம், காதோலை, கருகமணியுடன் கூடிய நகைகள் பிறந்த வீட்டுச் சீராக வாங்கித் தருவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் பண்டிகைக்கு முதல் நாள் அம்மனை அழைத்து மறுநாள் பூஜை செய்து நோன்பு செய்து ஆராதனை செய்ய வேண்டும்.

வரலட்சுமி பிறந்தகம் வருகிறார்

 ஒவ்வொரு வரலட்சுமி விரதத்தன்றும் அம்மன் தம் பிறந்தகத்திற்கு வருவதாக நம்பிக்கை. அவளை அன்புடன் வரவேற்று ஆராதித்து துதிக்கிறோம். மறுநாள் வெள்ளிக் கிழமையன்று விளக்கேற்றி வைத்து நல்ல நேரத்தில் பிள்ளையார் பூஜை செய்து கலசத்தில் அம்மனை ஆவாஹனம் செய்து கலச பூஜை செய்து பின் லஷ்மி அஷ்டோத்திரம் முடித்து மலர்களால் அர்ச்சிக்கிறோம்.

மஹா நிவேத்யம்

 நிவேதனங்களாக மஹா நிவேத்யம் எனப்படும் அன்னம் பருப்பு வடை, பாயஸம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளும் அளிக்கப்படுகின்றன. பின்பு நோன்புச் சரடிற்குத் தனியே பூஜை செய்து நோன்பு எடுத்ததின் அடையாளமாக வலது மணிக்கட்டில் சரடைக் கட்டிக் கொள்வதோடு பூஜை முடிகிறது. நாள் முழுவதும் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தால் நல்லது.

 மாலையில் பால் பழம் நிவேதனம் செய்து இரவு தொடங்கும் நேரம் தீபத்தை சாந்தி செய்யலாம். மறுநாள் சனிக்கிழமையன்று புனர் பூஜை என்கின்ற பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை பாக்கு பழம் நிவேதனம் செய்த சுண்டல் முதலியவற்றைக் கொடுப்பது வழக்கம்.

 அம்மன் மனம் குளிர பாட்டுக்கள் பாடி அரிசி வைக்கும் பாத்திரத்தை பூஜை செய்த இடத்திற்கு அருகாக வைத்து ஆரத்தி எடுத்த பின்பு அம்மனை மெதுவாக அந்த அரிசியுடன் கூடிய பாத்திரத்தில் வைத்து மூடி வைப்பார்கள். நம் வரவேற்பையும் ஆராதனைகளையும் ஏற்ற திருமகள் நம்முடன் தங்குவதாக நம்பிக்கை.

The post நாளை வரலட்சுமி விரதம், விரதம் இருப்பது ஏன்? appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


கோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில்

$
0
0

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில்

கோபுர தரிசனம் கோடி

அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில்

 கற்பனைக்கும் எட்டாத அருள் தரும் சிவசக்தித்தலம். கி.பி 1639 -ம் ஆண்டுக்கு முன்பே விஸ்வகர்மா குலத்தினரால் இவ்வாலயம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. சென்னை என்று இந்த நகருக்கு பெயர் வர காரணமாக இருக்கும் அன்னை குடி கொண்டிருக்கும் தலம். வீர சிவாஜியும், மஹா கவி பாரதியாரும் வழிபட்ட தலம், விஸ்வ கர்மாவிற்கு தனி சன்னதி உள்ள தலம், ஆதி சங்கரர் ஸ்ரீ சக்ரம் ஸ்தாபித்த தலம் என்ற அனைத்து பெருமைகளையும் கொண்ட தலம் தான் சென்னை காளிகாம்பாள் திருக்கோவில்.

அனைத்து வித துன்பங்களையும் போக்கும் கவுரி விரதம்!

அகில புவனங்களையும் படைத்தும், காத்தும் கரந்தும் விளையாடும் அந்த ஆதி பராசக்தியானவள் நாம் உய்யக் கொள்ளும் வேடங்கள் அநேகம் அவற்றுள் ஒன்றுதான் காளி. துஷ்டர்களை அழித்து பக்தர்களை காக்க அம்மை கொள்ளும் கோலமே காளி ரூபம். காலம் என்பதன் தெய்வீக ரூபமே காளி. இந்த பூவுலகிலே பிறந்த எந்த உயிரும் வளர்ந்து பின் இறந்து மறுபடியும் பிறக்கும் என்பது நியதி. இவ்வாறு புதிதாய் தோற்றுவிக்க சக்தி வடிவம் கொள்பவள் ஒரே அன்னையே!. கோரமும் இறைவன் செயலே என்பதை எடுத்துக் காட்டவே, சௌந்தர்யமான அன்னை சக்தி, குரூரமான காளி உருவம் கொள்கிறாள். அழிவு இல்லாமல் ஆக்கம் ஏது? இரவை அழித்து பகலையும் பகலை அழித்து இரவையும் உண்டு பண்ணுபவள் அன்னையே.

கோடி புண்ணியம் தரும் ஆடி மாத திருவிழாக்கள்

காளிகாம்பாள் உற்சவர்

தர்மமிகு சென்னை என்று போற்றப்படும் சென்னை மாநகரிலே தம்பு செட்டி தெருவிலே நாம் விரும்பும் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றும் காமாக்ஷ’யாய், தீயவர்களை அழிக்கும் காளிகாம்பாளாய், உலகையாளும் தேவியாய், தன்னை வணங்குபவர்களின் துன்பம் நீக்கி இன்பம் அளிக்கும் கமடேஸ்வரி அன்னையாய் கொலு வீற்றிருக்கிறாள் அந்த பராசக்தி. அவள் குங்குமம் பெற்றாலே முக்தி.

நோய், தோஷம், தரித்திரங்களை அகற்ற வேண்டுமா

மிகவும் புராத னமான கோவில், சுமார் 400 வருடங்கள் பழமையானது. சிவாஜி மஹாராஜா வழிபட்ட பவானி ஸ்ரீ காளிகாம்பாள், யாதுமாகி நின்றாய் காளி என்று பாரதியாருக்கு நா வன்மையை கொடுத்த ஸ்ரீ சாரதை காளிகாம்பாள், தன்னை வணங்கும் அன்பர்களின் செல்வ நிலயை உயர்த்தும் ஸ்ரீ மஹா லக்ஷ்மி கல்வியை கலைகளை வழங்கும் ஸ்ரீ மஹா சரஸ்வதி இருவரையும் தன் கண்களாகக் கொண்டவள் காளிகாம்பாள்.

தனது இச்சா மந்திர சக்தியால் பன்னிரண்டு ஸ்தலங்களில் காட்சி தந்து வரும் காமாட்சி அன்னை, அவற்றுள் ஒன்றான இத்திருக்கோவிலில் மேற்கு நோக்கி அர்த்த பத்மாசனத்தில் வலக்கால் தொங்கவிடப்பட்ட நிலையில், அங்குச பாசம் மேற்கையில் ஏந்தி, தாமரை வரத முத்திரையுடன், மூக்குத்தி மின்ன, மரகத பதக்க பொன் தாலியும், ஒட்டியாணம், கொப்பு, குழை, கங்கணம், பாதச்சிலம்பு மின்ன, காலை மூன்று அரக்கர்களின் மேல் வைத்த நிலையில் எழிற் கோலம் காட்டுகின்றாள். நாம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் நீக்கினாலே அந்த பரம் பொருளுடன் சேர முடியும் என்பதை குறிப்பாக காட்டுகின்றாள் அன்னை. காளி என்றாலும் சாந்த ரூபத்தில் காமாக்ஷ’யாக எழிற் கோலம் காட்டுகின்றாள் அன்னை. அவள் சன்னதியில் நின்றாலே ஒரு நிம்மதி அம்மையை தரிசித்தவுடன் நம் பாவமெல்லாம் விலகுகின்றன. ஆதி சங்கர பகவத் பாதாள் ஸ்தாபித்த ஸ்ரீ சக்ர அர்த்த மேருவும் அம்மையின் முன் உள்ளது. அர்ச்சனை அர்த்த மேருவிற்க்குத்தான் நடைபெறுகின்றது.

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்

ஸ்ரீ காளிகாம்பாள் திருப்பல்லாண்டிலிருந்து ஒரு பாடல்:

கலைமகளே திருமகளே மலைமகளே

காலை கதிரொளியே!

குலக்கொழுந்தே கொற்றவையே காளிஎனும்

கலைக்கடலே கருணை ஈவாய்

சிறந்தொளிசேர் செம்பூவும் பசுந்தழையும்

சேர்ந்தன போல் சிவமும் தாயும்

அறந்தழைக்க நேர் பாதி கலந்த கோல

அழகினுக்கு ஆயிரம் பல்லாண்டு.

இந்திரன், குபேரன், வருணன், விராட புருஷன் விஸ்வகர்மா, வியாசர், பராசரர், அகத்தியர், ஆங்கிரேசர், புலஸ்தியர் ஆகியோர் வழிபட்ட தலம். கி.பி 1639 -ம் ஆண்டுக்கு முன்பே விஸ்வ கர்மா குலத்தினரால் இவ்வாலயம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. பரதபுரி, ஸ்வர்ணபுரி என்றெல்லாம் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இப்புராதன ஆலயம். விஸ்வ கர்மாக்கள் கோட்டையிலே வழிபட்டதால் கோட்டையம்மன். முற்காலத்தில் கடல் ஓரத்தில் இருந்திருக்கலாம் ஆங்கிலேயர் காலத்தில் இப்போது உள்ள இடத்திற்கு மாறியிருக்க வேண்டும். செம்படவர்களும் மற்றவர்களும் செந்து‘ரம் பூசி வழிபட்டதால் இவ்வன்னைக்கு சென்னியம்மன் என்ற திருநாமமும் உண்டு. சென்னம்மன் குப்பமே, சென்னை ஆயிற்று.

“ஸமாசர ரமாவாணி ஸவ்ய தக்ஷ’ண சேவிதா” என்ற லலிதா சகஸ்ரநாம நாமாவின் படி ஸ்ரீ மஹா லக்ஷ்மியும், ஸ்ரீ மஹா சரஸ்வதியும் தன் இரு கண்களாய் அமையப் பெற்ற காளிகாம்பாள் இவளாவதால் செல்வமும் கல்வியும் குவிந்துள்ள நகரமாய் சென்னை விளங்குகின்றது.

தெற்கு இராஜ்ஜயங்களை தன்வயப்படுத்தி திக்விஜயம் செய்த மராட்டிய மாமன்னன் வீர சிவாஜி 1667ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் நாள் இவ்வாலயத்திற்கு விஜயம் செய்து அன்னையை வழிபட்ட செய்தியை வரலாற்று ஏடுகளில் நாம் காணலாம்.

பிராட்வேயில் சுதேசமித்திரனில் பணி செய்து கொண்டிருந்த போது மஹாகவி பாரதியார்,

யாதுமாகி நின்றாய் காளி

எங்கும் நீ நிறைந்தாய்

தீது நன்மையெல்லாம் – நின்றன்

செயல்களின்றி இல்லை

போதும் இந்த மாந்தர் வாழும்

பொய்மை வாழ்க்கையெல்லாம்

ஆதி சக்தி தாயே – என் மீது

அருள் புரிந்து காப்பாய்.

என்று அன்னையின் மேல் பாடல்கள் புனைந்துள்ளார். பாரதியார் பாடிய காளி பாடல்கள் அனைத்தும் அன்னையைப் பற்றியதே. சிவபெருமானின் அம்சமாக காலடியில் தோன்றி நமது சனாதன தர்மமான இந்து மதத்திற்க்கு புத்துயிரூட்டிய ஆதி சங்கர பகவத் பாதாள் இவ்வாலயத்திற்கு எழுந்தருளி அன்னையை வழிபட்டு ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்திருக்கின்றார் இந்த சரித்திர சிறப்பு பெற்ற நிகழ்ச்சிகளும் இத்திருகோவிலில் சுதை சிற்பங்களாக விவரிக்கப்பட்டுள்ளன. அன்னையின் சன்னதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது, கோஷ்டத்தில் வித்யேஷ்வரி, பிரம்ம வித்யா, வைஷ்ணவி, தாக்ஷ‘யணி, மற்றும் மஹாலக்ஷ்மி எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். அம்மனுக்கு வலப்புறத்தில் மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் கமடேஸ்வரர் சன்னதி. ஐயனின் கோஷ்டத்திலும் சிறிதாக துர்க்கை, பிரம்மா, விஷ்ணு, ஆலமர் கடவுள் மற்றும் வினாயகர் அருள் பாலிக்கின்றனர். திருக்கோவிலில் உள்ளேயே கிழக்கு நோக்கி அருணாச்சலேஸ்வரர் சன்னதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதியும் உள்ளது.

 சிவசக்தித்தலமான இத்தலத்தில் எம்பெருமான் கமடேஸ்வரராகவும், அருணாச்சலேஸ்வரராகவும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதியும் உள்ளது.. எனவே இத்தலத்தில் வழிபட்டால் காஞ்சி, அருணை ஆகிய இரு தலங்களையும் வழிபட்ட பலன் உண்டு. மேலும் கோவிலின் உள்ளேயே குரு சனனதியும், பள்ளியறையும் உள்ளன.நெரிசல் மிகுந்த பாரி முனைப் பகுதி என்பதால் ஒரே ஒரு பிரகாரம். பிரகாரத்தில் தென் கிழக்கு மூலையில் கிழக்கு நோக்கிய சித்தி புத்தி வினாயகர் சன்னதி. சுப்பிரமணியர் வட கதிர் காம முருகராகவும், அகோர வீர பத்திரர், மஹா காளி, வேத மாதா காயத்ரி, துர்கா, விஸ்வ கர்மாஆகியே’ருக்கு தனித்தனி சந்நிதிகள், வீரபத்திரர் சன்னதியின் விமானத்தில் ஆட்டுத்தலையுடன் கூடிய ஆணவம் நீங்கிய தட்சன் வீர பத்திரரை வணங்கும் சுதை சிற்பம் அற்புதமாக உள்ளது. வடக்கு நோக்கிய துர்க்கை அம்மன் செப்புத் திருமேனி, எழிலாக அருட்காட்சி தருகின்றாள் அன்னை. வெளி பிரகாத்தில் வட கிழக்கு முலையில் ஆடல் வல்லான் சன்னிதி பிரம்மோற்சவ காலங்களில் அம்மனின் அலங்கார மண்டபமாகவும் விளங்குகின்றது. பரிவார தேவதை கடல் கண்ணி, கடல் தீர்த்தம் எனவே அன்னை நெய்தல் நில காமாட்சி என்றும் அழைக்கப்படுகின்றாள் , தல விருட்சம் மா மரம்.

இளமை குன்றாமல், நடை தளராமல், இன்முகத்தோடு வாழ!

ஸ்ரீசக்கர நாயகிக்கு கிண்ணித் தேர்

வேறு எந்த ஆலயங்களுக்கும் இல்லாத பல சிறப்புகள் இவ்வாலயத்திற்கு உள்ளன. ஸ்ரீ சக்ர நாயகியாம் அன்னைக்கு ஸ்ரீ சக்ரமே இங்கு தேராக அமைந்துள்ளது. இந்த சக்ரராஜ விமானம் எனப்படும் இத்தேர் கிண்ணித்தேர் என்று அழைக்கப்படுகின்றது. வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் போது ஒன்பதாம் நாள் இரவு வெண்கல கிண்ணிகளால் நிறைந்த இத்திருத் தேரிலே மின் விளக்கு ஒளியில் பவனி வருகின்றாள் அன்னை. நடராஜருடன் இத்தலத்திலே எலும்பும் தோலுமாய் , மூன்று கால்களுடன் பிருங்கி முனிவர் எழுந்தருளியுள்ளார். ஐயனை மட்டுமே வலம் வருவேன் அம்மையையும் சேர்த்து வலம் வர மாட்டேன் என்று அறியாமையால் தவறு செய்த பிருங்கி முனிவர் அன்னையின் சாபத்தினால் இவ்வாறு ஆனார். பின் அம்மை கேதார கௌரி விரதம் மேற்கொள்ளவும் இடப்பாகம் பெறவும் காரணமாய் இருந்தவர் பிருங்கி முனிவர். இன்றும் ஆருத்ரா தரிசனம் திருவுலா முடிந்து ஐயனும் அம்மையும் திரும்பி வரும் போது இந்நிகழ்ச்சியை குறிக்கும் வகையில் ஊடல் உற்சவம் நடைபெறுகின்றது.

பிரம்மோற்சவத்தின் போது அம்மனின் எழிற்கோலம்

உற்சவ மூர்த்திகள் இருவர் பெரிய நாயகி மஹா லக்ஷ்மியும், மஹா சரஸ்வதியும் தோழியராக நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகின்றாள். சிறிய நாயகி பிரகாரத்தில் 16 கால் மண்டபத்தில், அருட்காட்சி தருகின்றாள். அகோர வீரபதித்திரருக்கு வெற்றிலை மாலை அணிவித்து 6 மாதம் பௌர்ணமியண்று வழிபட்டால் இஷ்ட சித்தியாகும். விராட புருஷன் விஸ்வ கர்மாவுக்கு தனி சன்னதி உள்ளது. அவரை,

ஓம் சத்யோஜாத மு1காய பிரம்மதேவனே நம:

ஓம் வாமதேவ முகாய விஷ்ணு தேவனே நம:

ஓம் அகோர முகாய ஈஸ்வர தேவனே நம:

ஓம் ஈசான்ய முகாய இந்திர தேவனே நம:

ஓம் தத்புருஷ முகாய சூரிய தேவனே நம:

ஓம் தேவ தேவ மஹா தேவ விஸ்வப்பிரம ஜகத் குருவே நம:

என்று அகில ஜகத்திற்கும் குருவாகவே விஸ்வ கர்மா பெருமக்கள் வணங்குகின்றனர்.

நாளெல்லாம் திருனாளே நமை காக்க வருவாளே என்றபடி திருக்கோவிலில் வருடம் முழுவதும் திருவிழாதான். சித்திரையிலே குங்கும லட்ச்சார்சனை. சித்ரா பௌர்ணமியன்று திரு விளக்கு வழிபாடு. வைகாசியிலே வைகாசி விசாகத்தை ஒட்டி 10 நாள் பிரம்மோற்சவம். முதல் நாள் வினாயகர் உற்சவம், துவஜாரோகணம், தினமும் காலையிலும் மாலையிலும் திரு வீதி உலா, காலை 3வது நாள் பூத வாகனம், 7ம் நாள் பூத்தேர் மிகவும் விசேஷம். மாலையிலே 2ம் நாள் காமதேனு வாகனம், 4ம் நாள் ரிஷப வாகனம், 5ம் நாள் சிம்ம வாகனம், 6ம் நாள் தும்பிக்கையும், காதும் ஆடும் யானை வாகனம், 9 நாள் கிண்ணித்தேர் என்று சர்வ அலங்காரத்துடன் அருட்காட்சி தந்து மாட வீதிகளில் உலா வருகின்றாள் அன்னை.

ஆனியிலே வசந்த விழா.

அன்னைக்கு உகந்த ஆடி பெருவிழா 10 ஞாயிற்றுக் கிழமைகள், வெள்ளிக்கிழமையிலே ஊஞ்சல் உற்சவம். ஆவணியிலே வினாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் நவராத்திரி 9 நாட்களும் பல்வேறு அலங்காரங்களில் கொலுவிருக்கும் அன்னை விஜய தசமியன்று வீதி உலா வருகின்றாள். ஐப்பசியில் ஸ்கந்த சஷ்டி விழா. கார்த்திகை சோம வாரம் மற்றும் கார்த்திகை தீபம், மார்கழியில் ஆருத்ரா தரிசனம் 10 நாட்களும் மாணிக்கவாசகர் உலா பத்தாம் நாள் காலையில் நடராஜர் சிவகாமசுந்தரி அபிஷேகம் மற்றும் தீபாரதனை பின் புறப்பாடு, கோவிலுக்கு திரும்பி வரும் போது அம்மை முதலில் உள்ளே வந்து பின் கதவை சாத்துகின்றனர் பின் திருஊடல் உற்சவம், அம்மை சமாதானம் ஆன பின் சபைக்கு எழுந்தருளுகின்றார் எம்பெருமான் . மாலையிலே காளிகாம்பாள் திருவீதி உலா, தை மாதம் பொங்கல், பூச்சொரிதல், மூன்றாம் வெள்ளி பட்டாபிஷேகம், 4வது வெள்ளி 108 திருவிளக்கு வழிபாடு, வெள்ளி ஊஞ்சல். தைப்பூசத்தன்று தெப்பம் கச்சாலீஸ்வரர் கோவிலில். மாசி மகத்தில் கடலாடல் மற்றும் சிவராத்திரி. பங்குனியில் வசந்த நவராத்திரி. அம்மை உலா வர நூதன வெள்ளி ரதம் பக்தர்களால் சமர்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அம்மனுக்கு இத்தலத்தில் பூந்தேர், கிண்ணித்தேர், வெள்ளித்தேர் என்று மூன்று தேர்கள்.

The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

தனதான்யம், வளமான வாழ்வருளும் வைஷ்ணவி தேவி

$
0
0

தனதான்யம், வளமான வாழ்வருளும் வைஷ்ணவி தேவி

தவயோகிகளும், சித்தபுருஷர்களும் குடிபுகும் சித்தபீடம் காஷ்மீரம். இமயமலைச்சாரலில் தென்னாடுடைய சிவனே குடிபுகுந்தான் – தவம்புரிய, தவம் செய்பவர்களுக்கு அருள்பாலிக்க சங்கரர், ராமானுஜர் முதலான பரமாச்சாரியர்கள்கூட தம் தர்ம சித்தாந்தங்களை நிலைநாட்ட காஷ்மீரத்தை உயரிய ஞானபீடமாகக் கருதி வந்தார்கள்.

 அப்பிரதேசத்தில் பல தெய்வத் திருக்கோயில்கள் இன்றும் மகிமையோடு விளங்கி வருகின்றன. அவற்றில் தலையாயது, வைஷ்ணவி பகவதி என்று போற்றப்பெறும் வைஷ்ணோதேவி ஆலயம்.

vai2

 தேவியின் 51 தலையாய சக்திபீடங்களுள் இப்பீடம் வைஷ்ணவி பீடமாக திருவருட்பாலிக்கிறது. காஷ்மீரம் மூன்று பகுதிகளைக் கொண்டது.  சுத்த மகாதேவர், கெளரிகுண்டம், சுயம்பு பரமசிவன், சுதாதரர், அமரநாதர் – இப்படிப் பல தெய்வங்களுக்கான திருக்கோயில்கள் பிரபலமானவை.

 மலைப்பாங்கான பகுதியில் குகைக்குள் அமைந்திருக்கிறது வைஷ்ணவி தேவியின் சித்த பீடம் எனும் திருக்கோயில். இந்த பகுதி, இயற்கை எழில் கொஞ்சும் அற்புதமான இடம். ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பக்தகோடிகளும் இங்கு ஆண்டுதோறும் வந்துபோகிறார்கள்.

 பக்தர்கள் பெறும் பரமானந்தம், சொல்லில் அடங்காது. அன்னையின் ‘தர்பார்’ அப்பகுதி முழுவதும் தெய்வீகப் பொலிவு மிளிர வியாபித்திருப்பதைக் காண்கிறோம். மகாவிஷ்ணுவின் சக்தி சொரூபமாக ஆவிர்ப்பவித்த அருள்தான் வைஷ்ணவி தேவி.

vai1

  இமயமலைச் சாரலில் குகைக்குள் திருக்கோயில் கொண்டிருக்கிறாள் அவள். இயற்கையின் புனிதமான பனிபடர்ந்த சூழலில் அமைந்திருக்கும் திருச்சந்நதியில் வைஷ்ணவி தேவிக்கு இருமருங்கிலும் மகாகாளியும் – மகாசரஸ்வதியும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க கொலுவீற்றிருக்கிறார்கள்.

 ஜீவராசிகளின் இயக்கத்திற்கே ஆதாரசக்திகளான இம்மூன்று மகாதேவிகளின் ஒருமித்த சாந்நித்தியம் அருள்பொங்கும் திவ்யதிருக்கோலமதை இந்த சக்திபீடத்தில் அனுபவிக்கலாம். வைஷ்ணவி தேவியின் சந்நதிக்கு குகை வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்தப் பாதையில் வைஷ்ணவி தேவியின் திருப்பாதங்களைத் திருமஞ்சனம் செய்தபடி கங்கை பிரவாகிக்கிறாள். பக்தர்கள் புனித கங்கையில் நீராடியவாறே அன்னையின் அருள் பெற மெல்ல முன்னேறிச் செல்லேவண்டும்.

vais4

 பக்கத்திலுள்ள சிறுநகரமான கட்டா பகுதியில் ஹம்ஸாவி என்று ஒரு கிராமம். இங்கு ஸ்ரீதரபண்டிதர் எனும் பரமபக்தர் வாழ்ந்திருந்தார். தீவிர தேவிஉபாசகர். ஒருநாள் அவர் கனவில் வைஷ்ணவி தேவி தோன்றி, ‘‘என்னை மலைக் குகைக்குள் வந்து தரிசித்து அருள்பெறுவாயாக!’’ என்று சொன்னாள். மலைக்குகையைத் தேடி அலைந்தார் ஸ்ரீதரபண்டிதர். ஒருநாள் ஆடுகளை மேய்த்துக் ெகாண்டிருந்த இடைப்பிள்ளைகள் ஒரு குகைக்குள்ளிருந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள், ‘‘பல மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் மிக அழகான சிறுமி சர்வாலங்கார பூஷிதையாய் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தாள். நாங்கள் அவளைக் காண அருகில் சென்றோம்.

உடனே மாயமாய் மறைந்துவிட்டாள். நாங்கள் ஏக்கத்துடன் அவளைப் போற்றிப் பாடிக் கொண்டிருந்தோம். ஒருநாள் இந்தக் குகைக்குள் நுழைந்து சென்றாள். நாங்களும் பின்தொடர்ந்தோம். அந்தத் தெய்வீகப் பெண் அமர்ந்திருந்த இடத்தில் பிறகு இந்த அம்மன் சிலை இருந்தது. நாங்கள் தினமும் இங்கு வந்து அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம்’’ என்றார்கள். ஸ்ரீதரபண்டிதர் அகம் மகிழ்ந்தார். கனவில் தோன்றிய தேவியின் திருவுருவம் எதிரே காட்சி அளித்தது. ஆதிமகாசக்தியின் வடிவமான வைஷ்ணவி சக்தியின் திருமூர்த்தம் என்பதை உணர்ந்தார். தினமும் வந்து பூஜை, புனஸ்காரம், நிவேதனம் என்று முறையாக வழிபாடுகளைச் செய்துவந்தார். அவருடன் சில பக்தர்களும் வரத் தொடங்கினார்கள்.

 காஷ்மீரத்தை ரணஜித்தேவர் எனும் அரசர் ஆட்சிபுரிந்து வந்தார். இம் மன்னவரும் வைஷ்ணவி தேவியின் பக்தரானார். திருக்கோயிலை உருவாக்கியவர் இவர்தான். ஸ்ரீதரபண்டிதர் முதல்முறையாக வைஷ்ணவி தேவியை தரிசித்த இடத்தை நுழைவாயிலாக அமைத்திருக்கிறார்கள். இதை ‘தர்சனீ தர்வாஜா’ என்று அழைக்கிறார்கள். இங்கிருந்து மும்முடிச் சிகரமாகத் திகழும் இமயமலையைத் தரிசிப்பது பரவசமூட்டும் திவ்ய அனுபவம். இப்பகுதிக்கு ‘த்ரிகூடம்’ என்று பெயர். சீக்கிய மதகுரு கோவிந்தசிங் இங்கு தரிசனத்திற்காக வருவது வழக்கமாம்.

 ரத்னாசாகரர் எனும் மகாபுருஷருக்கு ஒரு பெண் பிறந்தாள். இளம் பிராயத்திலிருந்தே ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியிடம் தீவிரபக்தி கொண்டிருந்தாள். திருமணப்பிராயம் வந்தபோது ‘ஸ்ரீராமபிரானைத் தவிர, வேறு எவரையும் கணவராக வரிக்கமாட்டேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு தவம் புரியத் தொடங்கினாள். ஸ்ரீராமர் வனவாசம் புரிந்து கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு வந்தார். ஒரு பெண் தம்மையே வரிக்கத் தவமிருப்பதை அறிந்து அவள் இல்லத்திற்கு எழுந்தருளினார். அப்பெண்ணுக்கு அறிவுறுத்தி, அவளது சங்கல்பத்தை மாற்ற முயன்றார். ‘‘எனக்குத் திருமணமாகி விட்டது. நான் ஏகபத்தினிவிரதன். என்னை மறந்துவிடு’’ என்றெல்லாம் சொல்லிப் பார்த்தும் பயனில்லை.

 அவள் பக்திக்குப் பணிந்த ஸ்ரீராமபிரான் வரமளித்தார்: ‘‘அடுத்த அவதாரத்தில் உன்னை என் தேவியாக ஏற்றுக் கொள்கிறேன். அதுவரையில் ‘வைஷ்ணவி பகவதி’யாக நீ தவம் புரிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருப்பாயாக.’’ தெய்வீகப் பெண் மகிழ்ச்சியுடன் இந்த வாக்குறுதியை ஏற்றுக் கொண்டாள். தவவலிமையால் மூன்று மகாதேவிகளின் சொரூபமாக மாறினாள். இன்றும் அதே திருக்கோலத்தில் அருள்பாலித்து வருகிறாள் என்று வேறு ஒரு தலபுராணமும் இத்தலத்திற்கு உண்டு. ஜம்மு நகரிலிருந்து நிறைய பஸ், கார் வசதிகள் உள்ளன. வழியில் முக்கிய இடங்களில் தங்குவதற்கு தர்ம சாலைகள் இருக்கின்றன.

The post தனதான்யம், வளமான வாழ்வருளும் வைஷ்ணவி தேவி appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும் வரலட்சுமி விரதம்

$
0
0

தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும் வரலட்சுமி விரதம்

 

வரலட்சுமி விரதம் பூஜை முறை:

 வரலட்சுமி விரதம் ஆடி மாதம் வளர்பிறையில் கடைசி வெள்ளிக்கிழமை (ஆகஸ்டு 4-ந்தேதி) அனுசரிக்கவேண்டிய விரதம் இது. வரலட்சுமி விரத பூஜை செய்யும் போது, சுமங்கலிப் பெண்கள் நோன்பு சரடை வைத்து பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் அந்த சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும்.

vara

பூஜைக்குத் தேவையானவை :

 

 மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.

vara3

நிவேதனப் பொருள்கள்:

பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.

பழ வகைகள்:

 

ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை…

vara4

பூஜைக்கான முன்னேற்பாடுகள்:

 

 வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும்.

vara2

 சில இடங்களில் வீட்டின் பூஜை அறை ஒட்டிய சுவரில் வெள்ளை அடித்து அம்மனின் திருவுருவத்தை எழுதி ஆவாஹணம் செய்கிறார்கள். பூஜைக்காக வைக்கப்படும் கலசத்தில் காதோலை, கருமணி, எலுமிச்சம்பழம் முதலியவையும் போடப்படுகிறது.

 விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் & ராகு காலத்துக்கு முன் (சிலர் மாலை வேளையிலும் செய்வர்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும். மஞ்சள் பில்ளையார் பிடித்து வைத்து அதில் அருகம்புல் சொருகி வினாயகர் மந்திரத்தை உச்சரித்து விட்டு,மகாலட்சுமி துதியை சொல்லவும்..

 அப்போது, மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாட வேண்டும். நூற்றியெட்டு போற்றி அல்லது அஷ்டோ த்ரசத நாமம் சொல்லி, புஷ்பம் அல்லது குங்கும அர்ச்சனை செய்யவும்.

பூஜையின் முடிவில் மஞ்சள் கயிறை(சரடு) கையில் கட்டிக் கொள்கிறார்கள். மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும். சிறு பெண் குழந்தைகளை அழைத்து வந்து பூஜையில் கலந்து கொள்ளச்செய்ய வேண்டும். அவர்களுக்கு இனிப்பு பலகாரங்கள் பூஜையின் இறுதியில் கொடுத்து கையில் மஞ்சள் கயிறு கட்டி அனுப்பவும்.

ஓம் நமோ நாராயணா..!!

The post தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும் வரலட்சுமி விரதம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

மந்த்ரபீடேஸ்வரியாய் மங்களங்கள் அருளும் மங்களாம்பிகை

$
0
0

 மந்த்ரபீடேஸ்வரியாய் மங்களங்கள் அருளும் மங்களாம்பிகை

 கும்பத்தில் இருந்த அமுதத்தினின்றும் வெளிப்பட்டவராதலால், இக்கோயிலில் குடிகொண்டுள்ள இறைவன் கும்பேசர். பிரளய காலத்தில் மிதந்துவந்த அமுத கும்பத்தின் மூக்கின் வழியே அமுதம் பரவியதால் குடமூக்கு என்று சொல்லப்படும் இக்கோயில் உருவானது. அமுத குடத்தை அலங்கரித்திருந்த பொருட்களான மாவிலை, தர்ப்பை, உறி, வில்வம், தேங்காய், பூணூல், முதலிய பொருட்கள் காற்றினால் சிதறடிக்கப்பட்டு, தாம் விழுந்த இடங்களில் எல்லாம் தனித்தனி லிங்கங்களாய்க் காட்சியளித்தன. அவை தனிக்கோயில்களாகவும் விளங்குகின்றன.

man1

 இத்தலத்து இறைவன் ஆதிகும்பேஸ்வரர், அமுதகும்பேஸ்வரர், அமுதேசர் என்றெல்லாம் போற்றப்படுகிறார். உலகிற்கு திருஞானசம்பந்தர் தாம் பாடிய பதிகத்தில் இறைவனை குழகன் என்றும் காட்டுகின்றார். சிவபெருமான் வேடர் உருவத்தில் தோன்றி அமுத கும்பத்தை அம்பால் எய்தபோது கிராதமூர்த்தி (வேடர்) என்ற பெயரைப் பெற்றார்.

மகா பிரளயத்திற்குப் பிறகு படைப்புத் தொழிலை பிரம்ம தேவன் தொடங்குவதற்கு, இறைவர் இத்தலத்தில் எழுந்தருளி லிங்கத்துள் உறைந்து சுயம்பு வடிவானார். இறைவி மங்கள நாயகி, மந்திர பீடேஸ்வரி, மந்திரபீட நலத்தள், வளர்மங்கை என அழைக்கப்படுகிறாள். தம்மை அன்போடு வணங்குவார்க்குத் திவ்ய மங்களத்தை அருளும் மாட்சிமையால் மங்களநாயகி என்றும், சக்திபீடங்களுள் ஒன்றான விஷ்ணுசக்தி பீடம் எனும் மந்திரபீடத்தில் விளங்குவதால் மந்திர பீடேஸ்வரி என்றும், தம் திருவடிகள் அடைந்தவர்களுக்கு மந்திரபீடத்தில் இருந்து நலம் தருதலால் மந்திரபீட நலத்தள் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன.

 திருஞானசம்பந்தர் இத்தல அம்பாளை வளர்மங்கை என தேவாரப்பதிகத்தில் குறிக்கின்றார். இறைவன் திருச்செங்கோட்டுத்தலத்தில் தம்முடைய சரீரத்தில் பாதியை அம்பாளுக்கு அளித்தது போன்று, இத்தலத்தில் தம்முடைய 36,000 கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு வழங்கியதால் அம்பாள் மந்திரபீடேஸ்வரியாகத் திகழ்கின்றாள். அத்துடன் தமக்குரிய 36,000 கோடி மந்திர சக்திகளையும் சேர்த்து 72,000 கோடி சக்திகளுக்கு அதிபதியாக அருள்பாலிக்கின்றாள். அம்பாளின் உடற்பாகம் பாதநகம் முதல் உச்சிமுடி வரை 51 சக்தி வடிவ பாகங்களாகக் காட்சியளிக்கின்றன. மற்றைய தலங்களில் உள்ள சக்தி பீடங்கள் ஒரே ஒரு சக்தி வடிவை மட்டும் கொண்டது.

இந்த அம்பாள், 51 சக்தி வடிவங்களையும் தன்னகத்தே ஒன்றாய் உள்ளடக்கி சக்தி பீடங்களுக்கெல்லாம் தலையானவளாக அருள் பாலிக்கின்றாள். சிவனும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்தும் வகையில் இத்தலத்தில் ஈசனையும், அம்பிகையையும் சேர்த்தே வலம்வந்து வணங்க முடியும். இத்தலத்தில் கல் நாதஸ்வரம் பெயர் பெற்றதும் அபூர்வமானதுமாக விளங்குகிறது. மனிதர்கள் தங்களது பாபங்களைப் புண்ணிய நதிகளில் தலைமூழ்கி விட்டுச் சென்றதால் பாபத்தின் சுமை தாங்க முடியவில்லை என கங்கா, பிரம்மபுத்ரா, யமுனா, குபேர, கோதாவரி, நர்மதை, காவேரி, சரயூ, கன்யா ஆகிய நதிகள் மங்களாம்பிகையிடம் முறையிட்டன. அவை மகாமகக் குளத்தில் கலந்தால், பாவங்கள் தொலையும் என மங்களாம்பிகை திருவாய் மலர்ந் தருளினாள். காசியில் புரியும் பாவம், ராமேஸ்வரத்திலும், ராமேஸ்வரத்தில் புரியும் பாவம் காசி கங்கையிலும் தீரும்.

கும்பகோணத்தில் புரியும் பாவம் மகாமக குளத்தில் மூழ்கினாலே கழியும் என்கிறது புராணம். சிறப்பு பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் மங்களாம்பிகை அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கோயிலிலிருந்து ரோஜா, அரளி, மல்லிகை, மரிக்கொழுந்து, கதிர்பச்சை, செண்பகப்பூ, தாழம்பூ, செவ்வந்தி, விருட்சிப்பூ போன்ற மலர்களை கூடைகளில் எடுத்துக்கொண்டு யானை முன்னே செல்ல ஊர்வலமாக செல்வர். கோயில்பிராகாரத்தை வலம் வந்து, கொடிமரம் அருகே சென்று பூக்களை வைப்பர். அதன் பிறகு மங்களாம்பிகைக்கு சிறப்பு புஷ்பாபிஷேகமும், தொடர்ந்து ஆராதனையும், தீபாராதனையும் நடைபெறும். மந்த்ரபீடேஸ்வரியாய் மங்களங்கள் அருளும் மங்களாம்பிகையை சரணடைவோம்.

The post மந்த்ரபீடேஸ்வரியாய் மங்களங்கள் அருளும் மங்களாம்பிகை appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று அருள்மிகு ஆதிஜெகநாதர் திருக்கோயில் திருப்புல்லாணி

$
0
0

 கோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று அருள்மிகு ஆதிஜெகநாதர் திருக்கோயில் திருப்புல்லாணி

கோபுர தரிசனம் கோடி அருள்மிகு ஆதிஜெகநாதர் திருக்கோயில் திருப்புல்லாணி

தலச்சிறப்பு :

 இக்கோவில் திவ்ய தேசம் 108 வைணவ சேத்திரங்களில் 44வது ஆகும்.  ஆழ்வார்களில் திருமங்கையழ்வாரால் 20 பாடல்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதாகும்.  புல்லாரண்யம், தர்பசயனம் என்று பலபேராலும் புகழ் பெற்றதாகும்.

திருத்தல வரலாறு :

முன்னொரு காலத்தில் புல்லர், காவலர், கண்வர் என்ற 3 மகரிஷிகள் உலக நன்மைக்காக தவம் இயற்றும் பொழுது அரக்கர்களால் துன்புறுத்த பெற்றனர்.  மகரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்க எம்பெருமான் மகாவிஷ்ணு முதலில் அரச மர ரூபமாய் அவர்களை  காப்பாற்றி பின் ஸ்வரூபமாய் அதாவது சங்கு சக்ர தரியாய் அபய முத்ரையுடன் காட்சியளித்து  தன்னை சேவிக்கும் பக்தர்களை காக்கும் பொருட்டு இப்பொழுதும் சான்னித்யமாய் அருள்  பாலிக்கிறார்.

தசரதன் மகபேறு வேண்டி உலகத்தை சுற்றிவரும் பொழுது இந்த பெருமாளை 60000 மனைவிகள்  இருந்தும் குழந்தை பேறு இல்லையே என்று வேண்ட உடனே ஆதி ஜெகன்னாத பெருமாள் ஒரு  மந்திரத்தை சொல்ல பின்பு தசரதன் இத்தலத்தில் நகாபிரதிஷ்டை (அதாவது இப்போது அந்த  சந்தான கிருஷ்ணனை தர்பசயன ராமர் சன்னதி அருகில் தரிசிக்கலாம்) செய்து பின்  புத்ரகமோஷ்டி  யாகம் செய்ய பெற்றதாக கூறப்படுகிறது.

இராமாயணத்தில் சீதையை ராமன் தேடி வரும் காலத்தில் இத்தலத்தில் சேதுக்கரை வரை சென்று எங்கெங்கிலும் சமுத்திர மயமாய் இருக்கிறதே எப்படி செல்வது, கடலைதாண்டுவதா? யார்  உதவியை நாடுவது? தெற்கே சென்ற அனுமனையும் காணவில்லையே? என்ற ஆயாசத்துடன்  வல்வில் ராமன் சோகமயமாய் தன் தம்பி லக்ஷ்மணன் மடியில் சயனம்(படுக்கை) தலைசாய்த்து  தர்பையை பரப்பி உடல் நீட்டி அதாவது 3 நாட்கள் இத்தலத்தில் உபவாசம் கிடந்தார்.

இதன் அடிப்படையில் இங்கு ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில்  சிலை வடிக்கப்பட்டுள்ளது.  சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால் சீதை  இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணரும் இல்லை.   ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார்.  மூலஸ்தான சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன்,  சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 12.15 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் :

பிரம்மோற்சவத் திருவிழா – பங்குனி மாதம் ,

ராமர் ஜெயந்தி திருவிழா – சித்திரை மாதம்,

இவை தவிர வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, பொங்கல், தீபாவளி மற்றும் வாரத்தின் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் கோவிலில் கூட்டம் பெருமளவில் இருக்கும்.

The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று அருள்மிகு ஆதிஜெகநாதர் திருக்கோயில் திருப்புல்லாணி appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

Viewing all 15459 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>