Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

திருகடையூர் அபிராமி அம்மன் கோவிலில் யமனை எச்சரித்த சிவன்

$
0
0

 

திருகடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

திருகடையூர் என்ற இத்திருதலம் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஸ்ரீ அபிராமி அம்மன், மார்கண்டேயர் மற்றும் அபிராமி பட்டர்பற்றிய புராதன செவி வழிக்கதைகளுக்கு தொடர்புடையதாகவும் உள்ளது.

சோழர் கால மாபெரும் கோவில்களின் கட்டிடக்கலை ஏற்ப, இக்கோயில் மிக பரந்த பகுதியில் 11 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து. 5 பிரகாரங்கள் கொண்டும் (தாழ்வாரங்கள்), கம்பீரமான கோவில் கோபுரங்கள் மற்றும் பெரிய விசாலமான மண்டபம் கொண்டு பரந்தது நிற்கிறது. இக்கோவிலை புனரமைப்பு செய்தவிவரங்களை யார் என்று அறுதியிட்டு கூற முடியாது என்றாலும், அது 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, இராஜராஜன் சோழன் காலத்திலிருந்து இருந்து வந்துள்ளது என்று கோவில் கல்வெட்டுகளில் இன்றும் காணப்படுகிறது.

குலோத்துங்கசோழன் (1075 – 1120) காலத்தில், கோவில் செங்கல் சுவர் மாற்றி கல் சுவர் மற்றும் முன் மண்டபம் கட்டப்பட்டது. கோவில் ராஜகோபுரம் முழுவதும் புராணங்களின் படிச் சித்தரிக்கப்பட்டுள்ளது,  மற்றும் அதன் தொடர்புடைய படங்கள், சிலைகள் சுண்ணாம்பு கலவையால் செய்யப்பட்டு நிறைந்து உள்ளன.

யமதர்மனை பற்றி பிரபல கதை :

மிருகண்டு என்ற முனிவர் ஒரு சிவபக்தராக இருந்தார். அவர் ஒரு மகன் வேண்டும் என்று கடவுளை வேண்டினார் . சிவன் அவர் வேண்டுக்கோலுக்குகினங்க ஒரு மகன் பிறப்பான், ஆனால் அவன் 16 ஆண்டுகள் மட்டுமே வாழ்வான் என்று ஆசி கூறினார்.

அவருக்கு மார்கண்டேயன் என்று ஒரு மகன் பிறந்தான். மேலும் அவன் ஒரு சிவபக்தனாக வளர்ந்து சிறுவன் ஆனான். அவரது தந்தையின் ஆலோசனை படி இறைவன் திருகடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரரை இக்கோவில் பாதால வழி மூலம் புகழ்பெற்ற கங்கை நதி நீரை கொண்டு வழிபடலனான். (இன்றும் அந்த பாதால வழிபகுதியில் 20 படிகள் உள்ளது)

விதி முடியும் நாள் அன்று எமன் மார்கண்டேயனை பிடிக்க சுருக்குடன் கூடிய தனது பாசகயிறுடன் தோன்றினார். எமனை கண்ட மார்கண்டேயன் உடன் ஒடி இறைவனிடம் தஞ்சம் அடைந்து இறைவனை கட்டிக்கொண்டார்.

உடனே இறைவன் தனது பாதுகாப்பின் கீழ் இருந்த மார்கண்டேயனை தொடாதே என எச்சரித்தார், இருந்தும் யமன் கேட்காமல் மார்கண்டேயனை பிடிக்க பாசகயிறு வீசினான். அந்த பாசகயிறு மார்கண்டேயன் கட்டிக்கொண்டிருந்த கடவுள் (லிங்கம்) மேலும் சுருக்குடன் விழுந்தது. இந்த துடுக்குத்தனம் கண்டு கோபம் கொண்ட சிவன் விஸ்வருபம் எடுத்து தனது இடது காலால் உதைத்தார் மற்றும் அவரது இடது காலின் கீழ் அவரை மிதித்து,யமனை செயலற்று ஆக்கினார்.

பகவான் ஆள்க்காட்டி விரலை உயர்த்தி யமனை எச்சரிக்கை செய்யும் படங்கள் இன்றும் கோவிலில் சித்தரிக்கின்றன. யமன் வீசிய பாசகயிற்றின் அடையாளம் இன்றும் லிங்கத்தில் தெரியும்.

யமன் செயலற்று இருப்பதால் பூமியில் எப்பொழுதும் எற்படும் இறப்பு இல்லாமல் இருந்தன.என்றும் பூமி அதன் இயல்பான வழியில் சஞ்சரிக்க வேண்டும் என இறைவன் உரைத்து, காலசம்ஹாரமூர்த்தியாய் எழுந்தருளிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் யமனை மீண்டும் உயிர்பித்தார்.

‘இடது காலால் உதைத்து’ யமனின் துடுக்குத்தனமான செயலுக்குதான் தண்டனை என்றும் அதன் முக்கியத்துவத்தை பற்றி இன்றும் பேசப்படுகிறது இல்லையெனில் ஸ்வாமி வலது காலால் உதைத்து யமனை முற்றிலும் செயலற்று ஆக்கியிருப்பார் என ஐதீகம். இறப்பை வென்ற ஸ்தலம் இந்த திருகடையூர் என்பதால் இங்கே வழக்கமாக வயதான ஜோடிகள் தங்கள் சஷ்டியப்தபூர்த்தி (60 ஆண்டுகள் நிறைவு), பீமரதசாந்தி (70 வது பிறந்தநாள்) மற்றும் சதாபிஷேகம் (80 ஆண்டுகள் நிறைவு) கொண்டாடப்பட்டு காலசம்ஹாரமூர்த்தியை தரிசனம் செய்வதை வெகுவாக பார்க்க முடியும்.

பௌர்னமி பற்றிய மற்றோறு கதை :

அபிராமி பட்டர், சரபோஜி மஹாராஜா ஆட்சியின் போது வாழ்ந்து வந்தார். அவர் முற்றிலும் தன்னை அபிராமி அம்மனுக்கு அர்ப்பணித்து பல மணி நேரம் என்றில்லை, பல நாட்கள் தேவி முன்னிலையில் அமர்ந்து பேரின்ப நிலையில் தியானம் இருப்பார்.

ஒரு முறை ராஜா சரபோஜி கோயிலுக்கு விஜயம் செய்தார். அபிராமி பட்டர் அப்பொழுது தன்னையே மறந்த நிலையில் தியானம் இருந்ததினால் ராஜா சரபோஜி வருவதை கவனிக்காமல், ஒரு அடிப்படை மரியாதையின்

அடையாளமாக எழுந்து கூட நிற்காமல் தேவி அபிராமியின் ஒளிரும் தெய்வீக முகத்தோற்றம் கண்டு பார்வை ஒன்றி மூழ்கியிருந்தார். அப்பொழுது மரியாதை காட்டாத அபிராமி பட்டரை, கோபமான மன்னர் அருகில் நின்ற நபர்களிடம் அவரை பற்றி விசாரித்தார். துரதிருஷ்டவசமாக, அருகில் நின்ற நபர்கள் இவர் ஒரு மோசடி பேர்வழி என்று கூறினார்

பின்னர் சரபோஜி மஹாராஜா அபிராமி பட்டரை அணுகி இன்று என்ன திதி என்று கேட்டார். மன்னர் கேட்ட அன்று அமாவசை நாள். அபிராமி பட்டர் தேவியின் ஒளி வீசுகின்ற முகத்தோற்றம் கானும் கற்பனையில் கண்கள் திறக்காமல் அன்று முழு நிலவு நாள் என்று கூறினார்.

இந்த பதில் மூலம் கோபமடைந்த மஹாராஜா இந்த மோசடி பேர்வழியை தண்டிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது என எண்ணி இன்று மாலை முழு நிலவு இல்லையென்றால் நீங்கள் மரணத்தை சந்திக்க நேரும் என்று அவர் எச்சரித்து சென்றார். நீண்டநேரத்திற்கு பிறகு அபிராமி பட்டர் தனது தியானம் கலைந்து, கண்களை திறந்து என்ன நடந்தது என்று அறிந்தார். இதயங்களை உருக வைக்கும் கவிதையாக, பதிகம் என நூறு அதிகாரம் கொண்ட பதிகங்கள் அபிராமி அம்மனை புகழ்ந்து பாடினார்.

அதுவே அபிராமி அந்தாதி ஆகும். அபிராமி அந்தாதி கவிதை ஒரு வகையான தனிப்பட்ட கவிதையாகும். முந்தைய ஒரு கவிதையின் கடைசி அடி, அடுத்த கவிதையின் முதல் வரியில் முதல் வார்த்தையாக தொடங்குகிறது. இந்த வகையான கவிதை ஒரு தனிப்பட்ட ரகம் என்று கூறப்படுகின்றன. மனமுருகிய தேவி அபிராமி தன் காது தோடு எடுத்து வானில் எறிந்தார். அது முழு நிலவாக நடு வானில் பிரகாசமான பிரகாசித்தது. ராஜா சரபோஜி அபிராமி பட்டரின் பெருமையையும் ,பெருந்தன்மையும் உணர்ந்து, பட்டர் தொடர்ந்து மறுத்த போதிலும், அவருக்கும் மற்றும் அவர் சங்கதியினருக்கும் எல்லா கிராமங்கள் தோரும் வரும் வருவாயில் ஒரு நூறு பகுதியை தானம் செய்யவதாக அவரது கட்டளையை செப்பு தகடுகளில் ஆவண செய்தார் என ஆவணங்கள் சொல்கின்றன. இன்றும் அந்த செப்பு பட்டயம் பட்டரின் சங்கதியினரிடம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திருதலத்தில் மூன்று குளங்கள் (புஷ்கரணி) உள்ளன. அவை அம்ரிதா தீர்த்தம், காலா தீர்த்தம் மற்றும் மார்கண்டேய தீர்த்தம் ஆகும்.

கோவிலில் ஒரு நாள் 6 முறை வழிபாடுகள், சேவைகள் வழங்கப்படுகிறது. இன்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் 60 வது, 70 வது,80 வது பிறந்த நாள் மற்றும் பிற சிறப்பு சந்தர்ப்பங்களில் இங்கு கொண்டாட வருகின்றனர்.

மற்ற முக்கியத்துவங்கள்

 

கள்ள பிள்ளையார் :

முதல் கடவுள் கணபதியை வழிபடாமல் தேவர்கள் அவரை அசட்டை செய்துவிட்டு அமிர்தம் எடுக்க பாற்கடலை கடையும் போது, அசட்டை செய்த தேவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க அவசரமாக கணபதி யாருக்கும் தெரியாமல் அமிர்தபானையை திருடி ரகசிய இடத்தில் அதை மறைத்து வைத்துவிட்டார். தேவர்கள் அதை தேடிதேடி கிடைக்காமல் சிவனிடம் முறையிட்டனர், சிவன் தேவர்களை கணபதியிடம் மன்னிப்பு கேட்க அறிவுரை கூறினார். பிறகு விநாயகாபெருமான் அமிர்தபானையை தந்தருளினார். அமிர்தபானையை பெற்ற தேவர்கள் ஒரு குளியல் போட சென்றார்கள். அவர்கள் திரும்பி வந்து பார்த்த போது, அவர்கள் பானையை எடுக்க முடியவில்லை அது ஒரு சிவலிங்கமாக மாறிவிட்டது. அந்த சிவ லிங்கம் தான் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் அதாவது அமிர்தம் + கடம், அதுவே, ஸ்ரீ அமிர்தகடேஸ்வரராய் திருகடையூரில் அருள்பாலிக்கிறார்.

ஜாதி மல்லி:

ஸ்ரீ மார்கண்டேயன் கங்கை நீரை கொண்டு அமிர்தகடேஸ்வரரை அபிஷேகம் செய்யும்பொழுது ஜாதி மல்லியும் தண்ணீரின் கூடவே வந்தது. பிஞ்சிலம் எனப்படும் ஒரு பெயரும் அதற்கு உண்டு. ஜாதி மல்லி ஒரு ஆண்டு முழுவதும் பூக்கும் ஒரு மலர் ஆகும். இந்த மலர் கடவுளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது மற்ற மனித நோக்கங்களுக்காக பயன்படுத்த கூடாது. ஒரு பூ கொண்டு செய்யும் ஒரு அர்ச்சனை 1008 அர்ச்சனைக்கு சமமாக கருதப்படுகிறது.

திருக்கோயில் புகழ்கள்:

இங்கு லிங்கம் சுயம்புவாக உள்ளது. கோவில் மேற்கு நோக்கி எதிர்கொண்டுள்ளது. நீங்கள் நெருக்கமாக நோக்கினால் மற்றொரு லிங்கமும் உங்களால் பார்க்க முடியும்.

8 அஷ்டவீரட்டன புனித கோயில்களிள் திருகடையூரும் ஒன்றாகும். இறைவன் செப்பு விக்கிரகத்தில் காலசம்ஹாரமூர்த்தியாய் சீற்றம் தெரிகிற தோற்றத்தில் எமன் மீது இடது கால் வைத்து தாக்கி கம்பீரமாய் காட்சி அளிக்கிறார்.

பல சித்தர் இங்கே தவம் செய்யதுள்ளனர் அதில், பாம்பாட்டி சித்தரும் ஒருவர்.

நவகிரகங்களுக்கும் இங்கு சக்தி இல்லை.அனைத்து பக்தர்களும் காலசம்ஹாரமூர்த்தியையே பூஜை செய்கின்றனர். திருகடையூரில் ராகுவின் எந்த விளைவுகளும் இருக்காது. இங்கு தேவி அபிராமி ஸ்ரீ மகா விஷ்ணுவின் நகையில் இருந்து தோன்றியதாகவும் கூறப்படுகிறது. பிரம்மா, அகஸ்திய, புலஸ்திய மற்றும் துர்கா தேவி ஆகியோர் இங்கு கடவுள் வழிபாடு நடத்தியதாகவும் கருதப்படுகிறது.

63 நாயன்மார்களிள் கரிய மற்றும் குங்கிலியகாலய நாயனார் இங்கே வாழ்ந்து இறைவன் பணியாற்றினார்கள் என்றும் கூறப்படுகிறது. ஸ்ரீ அபிராமி பட்டரை பெற்றெடுத்த புனித மண் இதுவாக கருதப்படுகிறது அப்பர், சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தர் மூவரால் பாடப்பட்ட ஸ்தலம் இது. நிகழும் தமிழ் மாதம் சித்திரை (ஏப்ரல்/ மே) 18 நாட்கள் யமா சம்ஹர விழா கொண்டாடப்படுகிறது. நிகழும் தமிழ் மாதம் கார்த்திகை திங்கட்கிழமையின் (நவம்பர்/ டிசம்பர்) போது 1008 சங்காபிஷெகம் மிகவும் பிரபலமானது. புரட்டாசி நவராத்திரி மற்றும் மார்கழி விதிபதம் ஒரு நாள் திருவிழாக்களாக கொண்டாடப்படுகிறது. ஆடிபூரம், நவராத்திரி,பௌர்னமி, ஸ்கந்த சஷ்டி, மாஹா சிவராத்திரி, பங்குனி உத்திரம், அபிராமி அந்தாதி பாராயணம், மாதாந்திர பிரதோஷ நாட்கள் மற்றும், தமிழ், ஆங்கிலப்புத்தாண்டு நாள் மற்றும் பொங்கல் அன்று கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

The post திருகடையூர் அபிராமி அம்மன் கோவிலில் யமனை எச்சரித்த சிவன் appeared first on Swasthiktv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>