Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

முன்னோர்கள் சாபம், கர்மா வினைகள் நீங்க !!!

$
0
0

இன்று  துவாதசி திதி

  முன்னோர்கள் சாபம், கர்மா வினைகள் நீங்க  வைக்கும்  துவாதசி திதி

மஹா கால பைரவ உலகம் என்று ஒரு உலகம் இருக்கின்றது. இந்த உலகத்தில் வசித்து வரும் கால தேவனாகிய மஹா கால பைரவப் பெருமானின் அருளால் நமக்கு ஜோதிடத்தின் அடிப்படையான நட்சத்திரங்கள், கிரகங்கள், ராசிகளை பிரபஞ்ச வரலாற்றில் போதித்தார்.

இவர் வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில்  அண்ணாமலை கிரிவலம் வருகின்றார்; துவாதசி திதி அன்று அண்ணாமலையில் காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள்ளாகவும், மதியம் 1 மணிக்கு மேல் 2 மணிக்குள்ளாகவும், இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாகவும் அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு வேளையும் குறைந்தது 18 சாதுக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். அதன் பிறகு,இரவில் கிரிவலம் செல்ல வேண்டும். கிரிவலத்தின் போது ஓம் அருணாச்சலாய நமஹ என்று அல்லது ஏதாவது ஒரு சிவமந்திரத்தை ஜபித்துக் கொண்டே செல்ல வேண்டும். கிரிவலம் நிறைவடைந்தப் பின்னர், அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்;

இரட்டைப்பிள்ளையார் கோவில் வாசலில் இருந்து அண்ணாமலை கிரிவலத்தை துவக்க வேண்டும். பூத நாராயணப் பெருமாள் ஆலயத்தில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும். அதன் பிறகு ஆலயத்திற்குள் செல்ல வேண்டும். மூலஸ்தானத்தை நெருங்கும் போது, இடது பக்கத்தில் இருக்கும் உள்பிரகாரத்தில் பயணிக்க வேண்டும். வடமேற்கு மூலையில் துர்வாசர் மகரிஷியின் சன்னதி அமைக்கப்பட்டிருக்கின்றது. அவரிடம் மனப்பூர்வமாக தாம் முந்தைய தினத்தற்கு துவாதசி அன்னதானம் செய்துவிட்டோம்.

 அண்ணாமலையாரை தரிசிக்க அனுமதிப்பீராக என்று மனப்பூர்வமாக வேண்டிக்கொள்ள வேண்டும். அதன் பிறகே, மீண்டும் வரிசையில் இணைந்து அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும். பிறகு உண்ணாமுலையம்மன் என்ற அபிதகுஜலாம்பாளைத் தரிசிக்க வேண்டும். பிறகு,நவக்கிரக சன்னதிக்கு அருகில் சுவற்றை ஒட்டி அமைந்திருக்கும் இரட்டை சித்தரகுப்தர்களை பக்கவாட்டில் தரிசிக்க வேண்டும். இப்படி தரிசித்தால் மட்டும் தான் அண்ணாமலைக்கு வருகை தந்தது அருணாச்சலேஸ்வரருக்கு முறைப்படி தெரிவிக்கும் பாக்கியம் நமக்குக் கிட்டும். அதன் பிறகு கொடி மரம் அருகில் விழுந்து வணங்கி விட்டு, மஹா கால பைரவப்பெருமானைத் தரிசிக்க வேண்டும். இத்துடன் அண்ணாமலை துவாதசி திதி அன்னதானமும், கிரிவலமும் நிறைவடைகின்றது.

நாம் பிறந்த நாள் முதல் நமது வாழ்நாளின் இறுதி நாள் வரை காசியில் ஒரு கோடி மனிதர்களுக்கு ஒவ்வொரு நாளும் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியமோ,அதை விடவும் அதிகமான புண்ணியம் முழுத் துவாதசி திதி அன்று அண்ணாமலையில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும் என்று அருணாச்சல புராணம் தெரிவிக்கின்றது.

ஜோதிடப்படி,ஒருவரது ஜனன ஜாதகத்தில் சனியும்,செவ்வாயும் இணைந்திருந்தால் அல்லது செவ்வாய் இருக்கும் ராசிக்கு 4வது ராசியில் சனி இருந்தால் அவர்களுக்கு முன்னோர்கள் சாபம் பலமாக இருக்கின்றது என்று அர்த்தம்;

சிலருக்கு ராகுவுடன் சனியும்,செவ்வாயும் இணைந்திருக்கும்; இன்னும் சிலருக்கு கேதுவுடன் சனியும்,செவ்வாயும் இணைந்திருக்கும்;இன்னும் சிலருக்கு ராகுவுடன் செவ்வாயும்,கேதுவுடன் சனியும் அல்லது ராகுவுடன் சனியும்,கேதுவுடன் செவ்வாயும் இணைந்திருக்கும்;

இந்த மாதிரியான கிரக அமைப்புகள் இவர்களது முன்னோர்கள் வறட்டு கவுரவத்தினாலோ அல்லது சொத்துக்காகவோ அல்லது திமிரான செயல்பாடுகளாலோ பல ஆண்டுகளாக சண்டையிட்டுள்ளார்கள்; வீட்டுப் பெண்கள் இந்த சண்டை முடிவுக்கு வராதா? என்று பல நாட்களாக கதறி அழுதுள்ளார்கள் என்று அர்த்தம்; இதைச் சரி செய்ய குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு அண்ணாமலையில் துவாதசி திதி வரும் நாட்களில் அன்னதானம் செய்ய வேண்டும்; இதைச் செய்ய விரும்பி, ஆனால் வருமானம் ஒத்துழைக்காதவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை மாதம் தோறும் குலதெய்வம் கோவிலுக்கு படையலிட அரிசி வாங்கித் தரவேண்டும்;

அடுத்த ஒராண்டுக்கான துவாதசி திதி நாட்கள்

5.6.2017 ஞாயிறு

20.7.2017 வியாழன்

4.8.2017 வெள்ளி

2.10.2017 திங்கள்

16.10.2017 திங்கள்

30.11.2017 வியாழன்

14.12.2017 வியாழன்

13.1.2018 சனி

28.1.2018 ஞாயிறு

12.2.2018 திங்கள்

28.3.2018 புதன்

மேலே குறிப்பிட்டிருக்கும் கிரக அமைப்புகளில் பிறந்தவர்கள் மட்டும் தான் அண்ணாமலையில் அன்னதானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. முக்தியை இப்பிறவியிலேயே அடைய விரும்புவோர் இந்த நாட்களில் அண்ணாமலையில் அன்னதானம் செய்யலாம். தமது மகன்,மகள் மற்றும் அடுத்த 7 தலைமுறையினர் சீரும் சிறப்புமாகவும்,நிம்மதியாகவும் வசதியாகவும் வாழ வேண்டும் என்று விரும்புவோர் இந்த நாட்களில் அன்னதானம் செய்யலாம்.

The post முன்னோர்கள் சாபம், கர்மா வினைகள் நீங்க !!! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>