விரும்பிய காரியங்கள் நிறைவேற ஹோமங்களும் அதன் பயன்களும்
தோஷ பரிகாரங்களில் மிகவும் சிறந்தவையாக விளங்குபவை ஹோமங்கள் ஆகும். புராண காலத்தில் தெய்வங்களும், சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும், அரசர்களும் தாங்கள் விரும்பிய காரியங்கள் வெற்றி அடைய ஹோமங்கள் செய்து தமது இஷ்ட காரியங்கள் மற்றும் வரங்களையும் பெற்றுள்ளனர்.
கண்திருஷ்டி ஹோமம் :
திருஷ்டி தோஷங்கள் விலகும், காரிய தடைகள் நீக்கும்.
கணபதி ஹோமம் :
தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.
சண்டி ஹோமம் :
பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும்.
தில ஹோமம் :
சனி தோஷம் போக்கும், இறந்தவர்களின் சாபங்களை நீக்கும்.
நவகிரஹ ஹோமம் :
கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்.
ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம் :
சகல பயங்களும் போக்கி, சத்ருக்களிடம் வெற்றி பெற முடியும்.
சுதர்ஸன ஹோமம் :
ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும்.
ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம் :
ஆண்களுக்கு திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
மிருத்யுஞ்ச ஹோமம் :
மந்தி தோஷம் போக்கும், பிரேத சாபம் நீக்கும்.
சுயம்வர கலா பார்வதி ஹோமம் :
பெண்களுக்கு திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
லக்ஷ்மி குபேர ஹோமம் :
செல்வ வளம் தரும், பொருளாதார பெருக்கம் ஏற்படும்.
புத்திர கமோஷ்டி ஹோமம் :
புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்.
ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம் :
எதிரிகளின் சூழ்ச்சிகள் தொல்லைகள் நீங்கி, வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.
கால சர்ப்ப ஹோமம் :
திருமண தடை உத்தியோக தடை நீங்கும், வாழ்வில் சோதனைகள் நீங்கி சாதனைகள் மலரும்.
ருத்ர ஹோமம் :
ஆயுள் விருத்தி உண்டாகும்.
The post விரும்பிய காரியங்கள் நிறைவேற வேண்டுமா? appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.