Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 03.06.2016 ஸ்ரீ வாஸ்துஹோமம்

$
0
0

  வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு வாஸ்து பகவானுக்கென்று ஒரு பீடம் அமைக்கப்பட்டுள்ளது.கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதத்திலும், வாஸ்து பகவானை பற்றியும், வாஸ்து சாஸ்திரங்களைப் பற்றியும் வருங்கால மக்கள் அறிந்து அதன் பிரகாரம் புதிய வீடுகள் அமைத்துக் கொள்ளவும், பழைய வீடுகளை புதுப்பித்துக் கொள்ளவும், காலி மனை, இருப்பிடம், நிலம் தொழிற்சாலை, திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாஸ்து தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக் கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக் கொள்ளவும் வாஸ்து பகவான் வழிபாடும், வாஸ்து ஹோமமும் வழிவகை செய்யும்.

   ஒவ்வொரு வாஸ்து நாட்களிலும், வளர்பிறை பஞ்சமி நாட்களிலும் தன்வந்திரி பீடத்தில் காலை 10.00 மணியளவில் வாஸ்து சாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜையும்நடைபெறுகிறது.அந்த வகையில் வருகிற 03.06.2016 வெள்ளிக் கிழமை வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து ஹோமமும் வாஸ்து தோஷ நிவர்த்தி பூஜையும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடைபெறுகிறது.ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து யந்திரம், மச்ச யந்திரம், வாஸ்து மண் மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை விரும்பும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி ஆசீர்வதிக்க உள்ளார்.இந்த பிரசாதங்களை பெற்ற எண்ணற்ற மக்கள் பயனடைந்து, மற்றவர்களுக்கும் எடுத்துச்சொல்லி அவர்களும் தன்வந்திரி பீடத்திற்கு வருகை தந்து வாஸ்து பகவானையும், இதர பரிவார தெய்வங்களையும் தரிசித்து சுவாமிகளின் ஆசிபெறலாம்.

வாஸ்து பகவான் அமைப்பு:

 வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்களுடன், அஷ்டதிக் பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவ பெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கி படுத்த வண்ணம் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் திருக்காட்சி வேறெங்கும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

வாஸ்து நாள் வாஸ்து ஹோமம்:

  வருகிற 03ஆம் தேதி (03.06.2016) வெள்ளிக் கிழமை அன்று வாஸ்துநாள் என்பதால் சிறப்பு வாஸ்து ஹோமமும், வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது. இந்த யாகத்தில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று குடியிருக்கும் இடத்தில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் நீங்கி வளம்பெற ப்ரார்த்திக்கின்றோம்.

வாஸ்து தோஷத்தால் ஏற்படும் தொல்லைகள்…

  கணவன் மனைவிக்குள், சுற்றத்தாருக்குள், நண்பர்களிடத்தில், தொழில் செய்யும் இடத்தில், சக வியாபாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.பணப் பிரச்னை, பொருளாதார தடைகள், திருமணத் தடை, குழந்தையில்லாமை, ஆரோக்ய குறைவு, குழந்தைகள் பெற்றோர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள், தவறான பழக்க வழக்கங்கள், மன உளைச்சல்கள், நவக்கிரகங்களால் ஏற்படும் தொல்லைகள் போன்ற எண்ணற்ற தோஷங்கள் ஏற்பட வழிவகை செய்யும்.இத்தகைய தோஷங்களை கண்டறிந்து நீக்கவும், தடைகள் விலகவும் வழிவகை செய்யும் என்பதை மனதில் கொண்டு மேற்கண்ட வாஸ்து ஹோமம் நடைபெற உள்ளது.இந்த தகவலை கயிலை டாக்டர் ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் தெரிவித்தார்.

மேலும் தொடர்புக்கு:

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,

வாலாஜாபேட்டை-632513.

வேலூர் மாவட்டம்

தொலைபேசி : 04172-230033

செல் : 9443330203

Website :  www.danvantripeedam.blogspot.in , www.danvantritemple.org

Mail : danvantripeedam@gmail.com

The post ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 03.06.2016 ஸ்ரீ வாஸ்துஹோமம் appeared first on SWASTHIKTV.COM.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>