ஓம் நமோ நாராயணாய.ஸ்வஸ்திக் டிவி.காம் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. காரணம் நாம் இப்பொழுது ஒவ்வொரு மாதத்திற்குமான பலாபலன்களைப் பார்க்கப் போகிறோம்.இப்பொழுது ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 3௦ம் தேதி வரை கிரஹத்துடைய தாக்கம் என்ன கிரிஹத்துடைய சுழற்சி என்ன என்பதை பார்ப்போம்.
மேஷம்:
முதல் வாரம் தடுமாற்றமாக இருக்கும். இரண்டாம் வாரம் நன்மைகள் நடக்கும். முதல் வாரத்தில் 9 கிருஹங்களில் 5 கிருகங்கள் சாதகமாக உள்ளது. இரண்டாம் வாரத்தில் 9 கிருஹங்களில் 7 கிருகங்கள் சாதகமாக உள்ளது. 5 கிருகங்கள் அனுகூலமாக இருப்பதால் உறவுகள் மேன்மைப் படும். பகை மறையும். பிரிந்தவர்கள் ஒன்று கூடுவர். திருமணம் கைகூடும். மூன்றாவது வாரத்தில் ஜூன் 16ம் தேதி சந்திராஷ்டமம். நீர் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரும். மூன்றாவது வாரத்தில் அனைத்து காரியங்களும் சித்தி ஆகும். கடைசி வாரத்தில் அனைத்து காரியங்களும் கைகூடும். 9 கிரஹங்களில் 5 கிரகங்கள் அதி முக்கியமாக அனுகூலமாக உள்ளது. வெளிநாட்டுப் பயணம் ஏற்படும். கலைகளில் தொடர்புடையவர்கள் ஏற்றம் காண்பார்கள். வியாதிகள் தீரும். மேஷ ராசியைப் பொறுத்தவரை 1௦௦% க்கு 74% நன்மைகளே நடக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது அனுகூலம் தரும்.
ரிஷபம்:
ரிஷப ராசி அன்பர்கள் துணிச்சலான நல்ல முடிவுகளை எடுப்பார்கள். முதல் வாரத்தில் தடுமாற்றம் ஏற்பட்டு பின்னடைவு காணப்படும். இரண்டாவது வாரம் காரிய சித்தி உண்டாகும். எதிர்பாராத நன்மைகள் நடக்கும். இழந்த சொத்துக்கள் மீண்டும் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஓங்கும். மூன்றாவது வாரத்தில் 19ம் மற்றும் 2௦ம் தேதிகளில் சந்திராஷ்டமம். இந்த நாட்களில் கவனம் தேவை. பேச்சு வார்த்தையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாதக் கடைசியில் தடுமாற்றங்கள் இருக்கும். பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும். கணவன், மனைவி விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். இந்த மாதக் கடைசியில் உறவுமுறையில் பிரச்சனைகள் வரும். 9 கிரஹங்களில் 4 கிருஹங்கள் சாதகமாக இருக்கும். ரிஷப ராசி நேயர்களுக்கு மனத் தடுமாற்றம் இருக்கும். அனைவரிடமும் பொறுமையாக எச்சரிக்கையாக நடக்க வேண்டும். இந்த மாதம் 1௦௦% க்கு 69% நன்மைகளே நடக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிகாரர்களுக்கு முதல் வாரம் மற்றும் இரண்டாம் வாரம் சில தொல்லைகள் இருக்கும். மூன்றாம் வாரம் 21, 22, 23ம் தேதிகளில் சந்திராஷ்டமம். மூன்றாவது மற்றும் நான்காவது வாரம் மிகவும் சிறப்பாக அமையும். வெளியூர், வெளிநாட்டு பிரயாணம் மேற்கொள்வார்கள். மன நிம்மதி கிடைக்கும். வேலையில் உள்ள பிரச்சனை நீங்கும். பெண்களுக்கு வயிறு உபாதைகள், தலைவலி, கை கால் குடைச்சல் போன்ற உபாதைகள் வந்து போகும். ஒரு சில ஆண்களுக்கு பல் சம்மந்தப்பட்ட உபாதைகள் வரும். கடைசி வாரத்தில் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். 1௦௦% க்கு 98% நன்மையே நடக்கும்.
கடகம்:
கடக ராசி நேயர்கள் பொறுத்தவரை மிகவும் சந்தோஷமான மாதம் இது. முதல் வாரத்தில் ஏற்றத்தாழ்வு நிலைகள் இருந்தாலும் இரண்டாம் வாரத்தில் காரியத்தில் வெற்றி, கலைநிகழ்ச்சிகளில் மேன்மை, சுய தொழில் தொடங்குதல் போன்றவை நடக்கும். வெளிநாட்டு பிரயாணம் மேற்கொள்வர். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பெண்கள் உடல் சோர்வுடன் காணப்படுவார்கள். தெளிவான மன நிலையம், சிந்தனையும் இருக்க வேண்டும். மூன்றாம் வாரத்தில் 23, 24, 25ம் தேதிகளில் எச்சரிக்கை தேவை காரணம் சந்திராஷ்டமம். பெற்றோர்களை மதிக்க வேண்டும். மாதக் கடைசியில் சுபகாரியங்கள் நடைபெறும். ஜூன் மாதத்தை பொறுத்தவரை 1௦௦% க்கு 88% நன்மையே நடக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மையே நடந்தாலும் ஒரு சில தடுமாற்றங்கள் நடக்கும். சிம்ம ராசி அன்பர்கள் கோபம் நிறைந்தவர்களாக இருப்பர். முதல் வாரத்தில் தடுமாற்றங்கள் இருந்தாலும், இரண்டாம் வாரம் கிரக நிலைகள் நன்றாக உள்ளது. முதல் வாரத்தில் 9கிரகங்களுக்கு 4 கிரகங்கள் சாதகமாக உள்ளது.; இரண்டாவது வாரத்தில் 9 கிரகங்களில் 6 கிரகங்கள் சாதகமாக உள்ளது. நல்ல பலன்கள் கொடுக்கும். வியாபாரம், தொழில், சுயதொழில், கலை, வெளியூர், வெளிநாட்டுப் பிரயாணம் அனைத்தும் நன்மையே தரும். சுபகாரியங்கள் நடக்கும். மூன்றாவது வாரத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த மாதம் கடைசியில் 26, 27, 28 தேதிகளில் சந்திராஷ்டமம்.எதிலும் கவனம் தேவை. 100% க்கு 93% நன்மையே நடக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்கு மாதம் தொடக்கத்தில் தடுமாற்றங்கள் இருக்கும். மாதக் கடைசியில் தடுமாற்றம் இருந்தாலும் பாதிப்புகள் இருக்காது. முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் வாரங்களில் அனைத்து பலன்களும் கிடைக்க வாய்ப்பு உண்டு. முதல் வாரத்தில் வெளியூர் வெளிநாடு பயணம் ஏற்படும். இரண்டாம் வாரத்தில் சுபகாரியங்கள் நடக்கும். மூன்றாவது வாரத்தில் படிப்படியாக நன்மைகள் நடக்கும். வீட்டில் ஏற்படும் சண்டைகள் தீரும். அனைத்து காரியங்களும் வெற்றி பெரும். 100% க்கு 86% நன்மையே நடக்கும்.
துலாம்:
துலாம் ராசி அன்பர்களுக்கு முதல் வாரத்திலேயே 2, 3 ம் தேதிகள் சந்திராஷ்டமம். கவனம் தேவை. இரண்டாவது வாரம் நினைத்த காரியம் நடக்கும். சொந்த தொழில், சுய தொழில், விவசாயிகள் மற்றும் கலைஞர்களுக்கு அனுகூலம் பிறக்கும். மூன்றாவது வாரம் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் உகந்தத வாரம். ஆடை, ஆபரணங்கள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கிடைக்கும். நான்காவது வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். கணவன் மனைவியிடையே அன்பு கூடும். 100% க்கு 92% நன்மையே நடக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி அன்பர்கள் 4, 5, 6 ஆம் தேதிகளில் கவனமாக இருக்க வேண்டும், காரணம் சந்திராஷ்டமம். சிலருக்கு தடுமாற்றங்கள் இருக்கும். இரண்டாவது வாரத்தில் நன்மைகள் நடக்கும். மூன்றாவது வாரத்தில் தொழில் சிறப்படையும். நான்காவது வாரம் எதிர்பாராத நன்மைகள், மகான்களின் தரிசனம் கிடைக்கும். விநாயகரை வழிபடுவது நல்லது. 100% க்கு 89% நன்மையே நடக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு முதல் வாரத்தில் ஒரு சில தடுமாற்றங்கள் இருக்கும். இருந்தாலும் 50% காரிய சித்தி உண்டாகும். இரண்டாவது வாரம் 7, 8, 9 ம் தேதி மூன்று நாட்களும் சந்திராஷ்டமம் மிகவும் கவனம் தேவை. மூன்றாவது வாரம் அனைத்து நன்மைகளும் நடக்கும். நான்காவது வாரம் நினைத்த காரியம் கைகூடும். சொந்த தொழில், சுய தொழில், வெளியூர், வெளிநாட்டு பிரயாணம் போக வாய்ப்பு உண்டு. கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். 100% க்கு 93% நன்மையே நடக்கும்.
மகரம்:
மகர ராசி அன்பர்களுக்கு முதல் வாரம் நல்ல பலன்கள் உண்டாகும். சொந்த தொழில், சுய தொழில், வியாபாரம் மேன்மை பெரும். விவசாயிகளுக்கு உகந்த வாரம். வெளியூர், வெளிநாடு பிரயாணங்கள் நடைபெறும். இரண்டாவது வாரத்தில் 9 கிரகங்களில் 4 கிரகங்கள் சாதகமாக உள்ளன. 10, 11, 12 ஆகிய மூன்று நாட்களுக்கு கவனம் தேவை காரணம் சந்திராஷ்டமம். பெண்களுக்கு வயிறு உபாதைகள் ஏற்படும். மூன்றாவது வாரத்தில் ரொம்ப சிறப்பாக இருக்கும். நான்காவது வாரம் 9 கிரகங்களில் 7 கிரகங்கள் சாதகமாக உள்ளது. 100% க்கு 88% நன்மையே நடக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு முதல் வாரம் ஜாமீன், வழக்கு பிரச்சனைகள் தீரும். இரண்டாவது வாரம் பெண்களுக்கு வியாதிகள் நீங்கும். 13, 14, 15 தேதிகள் கவனம் தேவை. காரணம் சந்திராஷ்டமம். மாதக் கடைசியில் அனைத்து நன்மைகளும் நடக்கும். 100% க்கு 89% நன்மையே நடக்கும்.
மீனம்:
மீன ராசி அன்பர்களுக்கு முதல் வாரம் தடுமாற்றமாக இருக்கும்.இரண்டாம் வாரம் சுபிட்சம் கிடைக்கும்.மூன்றவது வாரத்தில் 15,16ம் தேதிகளில் சந்திராஷ்டமம்.மன அமைதி தேவை. நான்காவது வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும்.குடும்பத்தில் குதுகலம் உண்டாகும்.உத்தியோகம் கிடைக்கும்.9 கிரகங்களில் 7 கிரகங்கள் சாதகமாக உள்ளது. 100% க்கு 96% நன்மையே நடக்கும்.
ஜோதிட பிதாமஹர் ஸ்ரீ சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர்
9324087044 , 9320417957
The post ஜூன் மாத ராசி பலன்கள் வழங்குபவர் ஜோதிட பிதாமஹர் ஸ்ரீ சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர் appeared first on SWASTHIKTV.COM.