Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

இராமானுஜர் வலியுறுத்தும் ரகஸ்யத்ரயம்

$
0
0

இராமானுஜர் வலியுறுத்தும் ரகஸ்யத்ரயம்

 பரமனின் 1000 நாமங்களையும் சொல்லக்கூடத் தேவையில்லை,  “நாராயணா” என்ற ஒரு திருநாமத்தையாவது (ஓம் நமோ நாராயணாய என்பது திருமந்திரம் (அ) அட்சாட்சர மந்திரம், ரகசிய மந்திரங்கள் என்று சொல்லப்படும் மூன்றில் முதன்மையானது, மற்றவை துவய மந்திரம், சரம சுலோகம்) தினம் ஓதி உய்யும் (வீடு பேறு அடையும்) வழியை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள் என்று நமக்கு அருளியிருக்கிறார்.

இராமானுஜர்ஆழ்வார்களின் பாசுரங்களை பெருமாள் கோவில்களில் இசையுடன் பாடிட வழிவகுத்தவர். இதனால் இவர் தமிழ் வேதமான திருவாய் மொழியின் செவிலித்தாய் எனப் போற்றப்படுகிறார். பன்மொழிப் புலமைமிக்கவர்.

இராமானுஜர் தமிழ் மறையை தழைக்கச் செய்தவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஜனநாயகம், சமத்துவம், சமதர்மம், சாதி மத பேதமின்மை ஆகிய கொள்கைகளை மக்களிடையே உபதேசித்ததோடு அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டியவர்.

ஆன்மிகத்தோடு சமூக ஒற்றுமையும் வலியுறுத்திய சிறந்த சமூக ஆன்மீக சீர்திருத்தவாதி. ஆதிதிராவிடர்களைத் திருக்குலத்தவர் என்று புகழ்ந்தவர். உடையவர், ஸ்ரீ பாஷ்யக்காரர், எம்பெருமானார், திருப்பாவை ஜீயர், யதிராஜமுனி, இளையபெருமாள் என பல பெயர்களால் குறிப்பிடப்படுபவர்.

திருவரங்கம் கோவிலின் நிர்வாகத் திட்டங்களை சீரமைத்து, தொகுத்து வகுத்தவர். இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத் தத்துவத்தைத் தோற்றுவித்தவர். விசிஷ்டாத்துவைதத்தை இந்தியா முழுவதும் பரப்பியவர்.

ஏழை எளிய மக்களிடமும் வைணவம் பரவக் காரணமானவர். பரிபூரணமான பக்தியும் சரணாகதியுமே இறைவனை அடைவதற்கான எளிய வழி என்று கூறி மக்களை எளிய வழியில் நெறிப்படுத்தியவர்.

 திருமந்திரத்தை வதரியாசிரமத்தில் (பத்ரிநாத்) நாராயணன் நரனுக்கு அருளினான். அவனே நரன் (சீடன்), அவனே நாராயணன் (ஆச்சார்யன்)!

  மந்திர ரத்தினம் என்று போற்றப்படும் துவயத்தை வைகுந்தத்தில் தான் மார்பில் தரித்த பிராட்டிக்கு (இலக்குமி தேவிக்கு) பரமன் உபதேசித்தார்.

ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே!

ஸ்ரீமதே நாராயணாய நமஹ!

 சரம சுலோகத்தை பார்த்தசாரதியாக குருச்சே த்திரப் போர்க்களத்தில் அருச்சுனனுக்கு உபதேசித்தார். பகவத் கீதையில் இது உள்ளது.

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ

 இந்த 3 மந்திரங்களையுமே நாராயணனே அருளியதால், அவன் குருபரம்பரையின் முதல் ஆச்சார்யன் ஆகிறான்!

 பரம்பொருளின் தன்மை, ஜீவாத்மாவின் தன்மை, முக்திக்கான வழிவகைகள், முக்தி என்ற இலக்கின் தன்மைகள், முக்திக்குத் தடையாக இருப்பவை ஆகிய 3 விஷயங்களை விளக்கும் சாரமாகவே இம்மூன்று ரகசிய மந்திரங்களும் (ரகஸ்யத்ரயம்) விளங்குவதாக மணவாள மாமுனிகள் அருளி யிருக்கிறார்

 விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார்  திருப்பல்லாண்டில்

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து

எங்கள் குழாம் புகுந்து

கூடு மனமுடையீர்கள் வரம் பொழி

வந்தொல்லைக் கூடுமினோ

நாடும் நகரமும் நன்கறிய நமோ

நாராயணாய வென்று

பாடு மனமுடைப் பத்தருள்ளீர், வந்து

பல்லாண்டு கூறுமினே!

திருமந்திரத்தின் மேன்மையை உணர்த்துகிறார்.

இதனாலேயே, பன்னிரு ஆழ்வார்களுக்கும், அவ்வாழ்வர்களை திருமாலுக்கும் மேலாகக் கொண்டாடிய, குருபரம்பரையின் நடு நாயகமாகத் திகழும், பகவத் ராமானுசருக்கும் வைணவத்தில் மிக உயர்ந்த இடம் அளிக்கப்பட்டிருக்கிறது!.

The post இராமானுஜர் வலியுறுத்தும் ரகஸ்யத்ரயம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>