Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

ஸ்ரீ தன்வந்த்ரி பீடத்தில் நடைபெறும் யாகங்கள்

$
0
0

ஸ்ரீ தன்வந்த்ரி பீடத்தில் நடைபெறும் யாகங்கள்

  வேலூர் மாவட்டம் ,வாலாஜாபேட்டை அருகே ஔஷதகிரி என்றும் குபேர பட்டிணம் என்றும் ஆரோக்ய பீடம் என்றும் அழைக்கப்படும் தன்வந்திரி பீடம் அனந்தலை மதுரா  கீழ்புதுப்பேட்டையில் 46 லட்சம் பக்தர்கள் கைப்பட எழுதிய 54 கோடி தன்வந்திரி லிகித ஜப மந்திரங்களை கொண்டு 9 அடி மூலவர் தன்வந்திரி பெருமாள், ஆரோக்ய லட்சுமி தாயார், ஐஸ்வர்ய ப்ரத்தியங்கிரா தேவி, 18 கைகளுடன் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி, போன்ற 73 தெய்வங்களுடன் மகான்களும் 468 சித்தர்கள் சிவலிங்க ரூபமாக கொண்டு மிகவும்  இரம்மியமாக இயற்கை சூழலுடன் மூலிகை வாசத் ஸ்தலமாக அமைந்து உள்ளது.

 ஷண்மத பீடமாக திகழ்கின்ற தன்வந்திரி பீடத்தில் தினசரி யாகத்துடன் அன்னதானம், மருத்துவ சேவை கோ பராமரிப்பு நடைபெற்று வருகிறது. ஆண்டு தோறும் பல்வேறு வகையான பிரம்மாண்ட யாகங்கள் நடைபெற்று வருகிறது.

 குறிப்பாக 365 நாட்கள் 365 விதமான யாகங்கள், சதசண்டீ யாகம், 365 நாட்கள் சண்டியாகம், 6000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு மஹா ப்ரத்தியங்கிரா யாகம், லட்சம் நெல்லிக் கனிகளில் கனகதாரா யாகம், 10 லட்சம் ஏலக்காய்களை கொண்டு லட்சுமி ஐயக்ரீவர் யாகம், லட்சத்து முப்பத்திரண்டாயிரம் லட்டுகளை கொண்டு குபேர லட்சுமி யாகம், ஒரு லட்சம் மோதகங்களை கொண்டு வாஞ்சா கல்ப கணபதி யாகம், ஒரு லட்சம் தாமரை பூக்களை கொண்டு மஹா லட்சுமி யாகம், முப்பது லட்சம் தாமரை விதைகளைக் கொண்டு அஷ்ட லட்சுமி யாகம் 74 பைரவர் யாகம், 64 பைரவர் யாகம்,108 கணபதி யாகம், 468 சித்தர்கள் யாகம் 21 ஆயிரம் ஜாங்கிரியை கொண்டும் 11 ஆயிரம் வாழைப்பழத்தை கொண்டும் ஸ்ரீ ஆஞ்சநேயர் யாகம், 21 ஆயிரம் மாதுளை பழத்தை கொண்டு ஸ்ரீ மஹா காளி யாகம், 21 ஆயிரம் வில்வ காய்களுடன் ஸ்ரீ மஹா லட்சுமி யாகம் , ஒரு லட்ச ஜபத்துடன் ஸ்ரீ மஹா சுதர்சன யாகம், 24 மணி நேரமும் 27 யாகங்கள், லட்ச த்தி எட்டாயிரம் ஜபங்களுடன் நவகிரக ஹோமம், நவ துர்கா ஹோமம், திருஷ்டி துர்கா ஹோமம், 2014 பூசணிக்காயை கொண்டு கூஷ்மாண்ட யாகம், அதி ருத்ரம், மஹா ருத்ரம், ஏகாதச ருத்ரம்,55 நாட்கள் 135 யாகங்கள் போன்ற பல்வேறு விதமான மஹாயாகங்கள் உலக நலன் கருதி நடைபெற்றுள்ளது.

 ஸ்ரீ தன்வந்திரி, சுதர்சன ஹோமம், ஸ்ரீ கார்தவீர்யார்ஜீனா ஹோமம், மஹா மிருத்யஞ்ச ஹோமம், கந்தர்வராஜ ஹோமம், சுயம்வர கலா பார்வதி யாகம், சந்தான கோபால யாகம், சத்ரு சம்ஹார ஹோமம், சூலினி துர்கா ஹோமம், தேய்பிறை அஷ்டமி யாகம், அமாவாசை யாகம், பௌர்ணமி யாகம், போன்ற கார்ய சித்தி ஹோமங்களும் மாதம் தோறும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி நடைபெற்று வருகிறது..

21.07.2017 ல் கோ ல‌ஷ்மிக்கும் ரிஷப ராஜாவிற்கும்  காலை 9.30 மணிக்கு திருக்கல்யாணம்,

23.07.2017 முதல் 30.07.2017 வரை சஹஸ்ர சண்டி யாகத்துயுடன்தினமும் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை

23.07.2017 வாஞ்சாகல்ப கணபதி-நவக்கிரக-ஸ்ரீலக்ஷ்மி-தன்வந்திரி-சுதர்சன யாகம்,

24.07.2017 ஏகாதச ருத்ர ஹோமம்,

25.07.2017 சுப்ரமண்ய சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம்

26.07.2017 நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா-திதி நித்யா ஹோமம்,

27.07.2017, ஸ்ரீ வராஹி ஹோமம்-ராகு கேது பெயர்ச்சி ஹோமம்,

28.07.2017, ஸ்ரீ சோடஷ மஹால‌ஷ்மி-ஸ்ரீசூக்தம்-குபேர ல‌க்ஷ்மி யாகம்,

29.07.2017 நவ துர்காஹோமம்-சந்தான பரமேஸ்வரி யாகம்,

30.07.2017 தசமஹா வித்யா-சுயம்வரகலா பார்வதியாகம்,

23.07.2017 முதல் 30.07.2017 வரை தினமும் காலை மாலை தேவி மஹாத்மிய பராயணமும் சஹஸ்ர சண்டி ஹோமம், நடைபெறும்

 

மேலும் விபரங்களுக்கு

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,

வாலாஜாபேட்டை – 632513.

வேலூர் மாவட்டம்.

Ph : 04172-230033 / 230274

Cell: 9443330203 / 8124516666

The post ஸ்ரீ தன்வந்த்ரி பீடத்தில் நடைபெறும் யாகங்கள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>