Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

திறம்பட பேச திக்குவாய் உள்ளவர்கள் நன்கு பேசிட!

$
0
0

 திறம்பட பேச திக்குவாய் உள்ளவர்கள் நன்கு பேசிட!

 எம்பெருமாள் வடிவங்கள் எண்ணற்றவை. இதில் அபூர்வமாக விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள மோ.வன்னச்சூர் கிராமத்தில் கோமுகி நதி வடகரையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
   வாய்பேச முடியாத சிறுமி தினமும் கோயிலுக்கு வந்து பெருமாளை வணங்கிவிட்டு அங்குள்ள காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்ப்பது வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது ஒருநாள் ஆடுகளை கோவில் அருகில் மேய்த்துக் கொண்டிருந்தபோது மாறுவேடத்தில் பெருமாள் சிறுமி முன் தோன்றி வாய்பேச முடியாத அந்த சிறுமியின் நாக்கில் தேனை தடவினார். சிறிது நேரத்தில் அந்த சிறுமிக்கு பேச்சு சரளமாக வந்தது. இதனைக் கண்ட ஊர் பொதுமக்கள் இதனைக் கேட்டு ஆச்சரியத்தில் மூழ்கினர். ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு வந்து பெருமாளை வழிபட்டனர். இப்போதும் பெருமாளுக்கு சனிக்கிழமை தோறும் தேனால் அபிஷேகம் செய்து வாய்ப்பேச முடியாதவர்களுக்கும் திக்குவாயாக உள்ளவர்களுக்கும் நாக்கில் தேன் தடவுவது வழக்காக உள்ளது.
 கோவில் முன்பு கொடிமரம் உள்ளே சென்றதும் சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மரை வணங்கிவிட்டு மூலவர் வரதராஜ பெருமாளை தரிசிக்கலாம். மேலும் குழந்தை பாக்கியம், வெளிநாடு செல்பவர்கள், வாழ்க்கையில் முன்னேற்றம் போன்றவற்றிற்கு பரிகாரமாக உத்தமர் வரதராஜ பெருமாளை வணங்கிவிட்டு செல்கின்றனர்.
   ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் கூட்டு பிரார்த்தனை நடைபெறுகிறது. விசேஷ நாட்களில் சுவாமிக்கு அலங்காரம் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. ஆவனிமாதம் கிருஷ்ணஜெயந்தி திருவீதியுலா, புரட்டாசி மாதம் திருவீதியுலா, மார்கழி ஏகாதசி திருவீதியுலா.

பெருமாளுக்கு சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய முப்பலனையும் அடையலாம்.  நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்பர்.  சனிபகவானின் ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுள்காலம் அமையும்.  ஆனால், பெருமாள் சனிபகவானைக் கட்டுப்படுத்துவராக இருப்பவர்.  சனிக்கு அதிபதி பெருமாள்.  எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது ஆயிற்று.

சனிக்கிழமை விரதம் எளிமையானது.  பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம்.   மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.   புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம் ஆகும்.   இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனிக்கிழமை அன்று விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம் என்பது நம்பிக்கை.  உண்மையான பக்தியே இந்த விரதத்திற்குரிய சிறந்த பலனை தரும்

  அமைவிடம்: கள்ளக்குறிச்சியிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. கள்ளக்குறிச்சி சங்கராபுரம் சாலையில் மாமந்தூர் கைக்காட்டி பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஒரு கி.மீ. தூரத்தில் மோ.வன்னஞ்சூர் வரதராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது.

The post திறம்பட பேச திக்குவாய் உள்ளவர்கள் நன்கு பேசிட! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>