Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன்?

$
0
0

எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன்?

அம்மனின் அருளைத் தரும் கிழமைகளுக்கான விரதங்கள்!

விரதங்களில் மிக முக்கியமாக கடைபிடிக்கப்படுவது அம்மனுக்கான விரதங்கள் ஆகும். ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டு அருளைப் பெறலாம். அதன்படி எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன்.

விரதங்கள் கிழமைகளும் பலன்களும் :

ஞாயிற்றுக்கிழமை :

மாங்காட்டு அம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை விரதமிருந்து வழிபட்டு வந்தால் வாழ்வில் முன்னேற்றம் காணலாம். மனதில் உள்ள பயம் நீங்கி அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். பெயர் புகழுடன் வாழ்வர்.

திங்கட்கிழமை :

திங்கட்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வழிபட்டு வந்தால் வாழ்வில் உள்ள இடையு றுகள் நீங்கி நன்மை பெறுவர். இந்த கிழமையில் அம்மனை வழிபட்டு வந்தால் உடல்நல குறைவிலிருந்து தப்பி நீண்ட ஆயுள் கிடைக்கும்.

செவ்வாய்க்கிழமை :

செவ்வாய்க்கிழமைகளில் காஞ்சி காமாட்சியை வழிபட்டு விரதமிருந்து வந்தால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி மங்கலம் உண்டாகும். நீண்ட காலமாக திருமணத்தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமையில் அம்மனுக்கு விரதமிருந்து வந்தால் திருமணத் தடை நீங்கும். பில்லி, சு னிய பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் இந்நாளில் விரதமிருந்து பலன் அடையலாம்.

புதன் கிழமை :

புதன் கிழமைகளில் அம்மனை விரதமிருந்து தரிசித்து வந்தால் அறிவுக் கூர்மை பெருகும். கல்வியில் அதிக நாட்டம் உண்டாகும். கவிஞர்கள், வணிகர்கள், ஜோதிடர்கள், கலைத்துறையில் உள்ளவர்கள் இந்த கிழமையில் பராசக்தி அம்மனை மனமுருகி வழிபட்டு வந்தால் மேன்மை அடையாலாம்.

வியாழக்கிழமை :

வாழ்வில் உள்ள எதிரிகள் தொல்லைகள் நீங்கவும், உறவினர்கள் தொல்லைகள் நீங்கவும் வியாழக்கிழமைகளில் அம்மனுக்கு விரதமிருந்து வழிபட்டு வர அனைத்து தொல்லைகளும் நீங்கி சுகம் பெறுவர். பொன் பொருள் சேர்க்கை உண்டாக அம்மனுக்கு இந்நாளில் விரதமிருப்பது சிறப்பு.

வெள்ளிக்கிழமை :

திருமணம் கைகூடவும், தம்பதி ஒற்றுமை பெருகவும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு விரதமிருந்து வழிபடலாம். புத்திர பாக்கியம் கிடைக்கவும் இந்நாளில் விரதமிருக்கலாம். வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகும். இந்நாளில் அம்மனை தரிசித்தால் வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்.

சனிக்கிழமை :

வழக்குகளில் வெற்றி பெற, விரோதிகளின் தொந்தரவு நீங்கவும் அம்மனுக்கு சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடலாம். இந்த கிழமையில் அம்மனை வழிபட நீண்ட ஆயுள் பெறலாம

The post எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன்? appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>