உலகெங்கும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ஸ்வஸ்திக் டிவி.காம் நேயர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு பரிகாரமும்,பலன்களும் என்ற இந்த அருமையான ஒரு பகுதியில் ஒருவருடைய ஜனன காலத்தில் சந்திரனுடைய ஆட்சி நேரம் சுமார் பத்து வருட காலம். சந்திரனின் மறைவிடமான 6,8,12இல் மறைந்தால் அந்த விருச்சிகத்திலே சந்திரன் நீச்சம் பெற்றால் அந்த கேடு அல்லது ராகு போன்ற பகை கிரகங்களோடு கலந்தால் மேலும் சந்திரன் பாகுபட்டிருந்தால் அப்பொழுது தாயாருக்கும், மகனுக்கும் அங்கே எப்பொழுதும் பிரச்சனை இருந்து கொண்டிருக்கும். தாயார் மூலம் கிடைக்கின்ற நன்மைகள் அனைத்தும் பழுதுபடும் நின்றுவிடும். தாயாருக்கும் தனயனுக்கும் எப்பொழுதும் வாஸ்தானம் கசப்பு ருசி ஏற்படுத்தும் சலித்தொல்லை ஏற்படும். சந்திரனால் அவர்கள் பாதிக்கப்பட்டால் மாமியாரால் கிடைக்கக்கூடிய சுகங்கள் கிடைக்காது. பெண்களால் அவர்களுக்கு அவமானமும் அசிங்கமும் வர நேரிடும். மேலும் சந்திரனுடைய தாரத்துவமாக இருக்கின்ற திரவ விரபாகங்களில் நஷ்டத்தை அடைவார்கள்,கஷ்டத்தைப் பெறுவார்கள். இப்படிப்பட்ட நிலையெல்லாம் நாம் மாற்றி அமைக்க நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் சந்திரனுக்குரிய தாந்திரிக பரிகாரங்களை நாம் செய்து வர வேண்டும்.
தாந்திரிக பரிகாரம் என்றால் சுலபமாக செய்யக்கூடிய பரிகாரம். சந்திரன் வசியமாகி இருக்கிற நெல்லை நீங்கள் ஒரு தாம்பாளத் தட்டில் திங்களன்று நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால் அந்த நெல்லை பரப்பி அதன் மீது கற்பூரம் ஏற்றி வைத்து இரவு நேரங்களில் சந்திரனை வணங்கி வர வேண்டும். இரண்டாவதாக பௌர்ணமி தினங்களிலே சந்திரனை வசியம் செய்ய நாம் இரவு நேரங்களிலே சந்திரனை நோக்கி நாம் பூஜை செய்ய வேண்டும். முடிந்தால் அன்றைய தினத்திலே திருவண்ணாமலையிலே கிரிவலம் செய்வது சாலச் சிறந்தது. மேலும் திங்கட்கிழமையிலே 6 மணியிலிருந்து 7 மணி வரை சந்திர ஓரை ஓடிக்கொண்டிருக்கின்ற அந்த நேரத்திலே தாம்பாளத் தட்டில் நெல்லை பரப்பி அதன் மீது ஒன்பது வெற்றிலை ஒன்பது பாக்கு ஒன்பது ஒரு ருபாய் நாணயங்களை வைத்து நீங்கள் சந்திரனின் பாகமான அக்னியை நின்று வணங்க வேண்டும். மேலும் சந்திரனை வசியப்படுத்த திங்களன்று பால்,தயிர்,வெண்ணெய் போன்ற திரவங்களை வைத்து பூஜையிலே நீங்கள் சந்திரனை வசப்படுத்த ஒவ்வொரு திங்களன்று 6 மணியிலிருந்து 7 மணியளவில் இந்த பூஜைகளை செய்து நாம் சந்திரனை கவர்ச்சி செய்யலாம்.
அம்மா,சித்தி,பெரியம்மா என்று அம்மா வகையிலே இருக்கின்ற அம்மாவைப் போன்ற மரியாதைக் குரிய பெண்மணிகளை நாம் வணக்கம் செய்து அவர்களுக்கு வஸ்த்ர தானம் செய்ய சந்திரன் வசப்படுகின்ற அந்த ஒரு சூழ்நிலை நமக்கு வரும். மேலும் சந்திரனின் ஆதிக்கத்திலே இருக்கின்ற அந்த குளிர்ச்சியான நேரம் என்று சொல்லுகின்ற அந்த இரவு நேரத்திலே ஒரு திங்களன்று ஒரு கைப் பிடி நெல்லை எடுத்து அதை ஒரு வெள்ளைத் துணியிலே முடிந்து அதை தலையனைக் கீழே வைத்து ஒன்பது நாள் அதாவது ஒரு திங்கட்கிழமை ஆரம்பித்து செய்வாய்க்கிழமை முடிகின்ற அந்த தருணத்தில் அதை ஓடுகின்ற நீரில் ஆறிலே,அல்லது ஓடையிலே அல்லது கடலிலே கலந்துவிட சந்திரனின் அருளாசி வரும் மேலும் சந்திரனை வசப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் அம்மனுக்கும் அம்பாளுக்கும் திங்கள் மாலையன்று நெய் தீபம் போட்டு வர ஆலயங்களிலே சந்திரன் வசப்படுவான். சந்திரனைக் கட்டிப் போட பார்வதி தேவியை நீங்கள் வணங்கி வர இந்த 10 வருட காலங்களில் உங்களுக்கு அபாயம் இருந்தாலும் இந்த தாந்திரிக பரிகாரங்களில் ஏதாவது ஒன்றைக் கடைபிடித்து நீங்கள் செய்து வர சந்திரனால் பெறுகின்ற கஷ்டங்கள் தவிர்த்து அதனால் பெறுகின்ற நன்மைகள் இந்த பத்து வருட காலம் உங்களை வந்து எட்டும் என்றால் அதில் எந்தவித வியப்பும் இல்லை. நம் முன்னவர்கள் இப்படிப்பட்ட தாந்திரிக பரிகாரங்களை எல்லாம் நமக்கு அழகாகச் சொல்லி நமக்கு வழி நடத்திச் சென்றார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் சந்திர தசை ஒரு மனிதனுக்கு விருச்சிகத்தில் நீச்சமான இடத்திலிருந்து நடந்தால் நான் சொன்ன இந்த பரிகாரங்களில் ஒன்றை நீங்கள் கடைபிடித்து வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட வேண்டும் என்று சொல்லி இந்த பகுதியை பூர்த்தி செய்து நாளைய தினம் செவ்வாய் அதற்குரிய தாந்திரிக பரிகாரங்கள் என்பது என்ன எல்லாம் விரிவாக பார்க்க இருக்கிறோம் என்று சொல்லி இந்த பகுதியை பூர்த்தி செய்து நாளைய தினம் உங்களை சந்திக்க இருக்கிறேன்.நன்றி,வணக்கம்.
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்
9962081424
The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 29/04/2016 appeared first on Swasthiktv.