இன்று சனிப்பிரதோஷம்
முன் ஜென்ம பாவவினைகள் கரைந்தோடும் சனிப்பிரதோஷம்
சிவாலயத்தில் பிரதோஷ தரிசனம் தொடர்ந்து செய்துவந்தால் முன் ஜென்ம பாவ வினைகள் கரைந்தோடும்.
பிரதோஷம் என்பது மாதம் இரண்டு முறை ஆலயங்களில் அனுஷ்டிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை திரயோதசி, மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் ஆறு மணிவரை பிரதோஷ காலம் என்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த திரயோதசி திதி கார்த்திகை மாதத்தில் சனிக்கிழமைகளில் வந்தால் சனிமஹாப்பிரதோஷம் என்று சொல்லப்படுகிறது. அன்றுதான் சிவன் ஆலகால விஷத்தை உண்டதாக புராணங்கள் கூறுகின்றன.
எனவே சனிக்கிழமைகளில் பிரதோஷம் என்பது சனிப்பிரதோஷம் என்று சிறப்பாக வழிபாடு செய்யப்படுகின்றது. இருபது வகையான பிரதோஷ வழிப்பாட்டு முறைகள் ஆகமங்களில் கூறப்படுகிறது. இருப்பினை மாதப்பிரதோஷமும் அதிலும் சனிப்பிரதோஷமும் ஆலயங்களில் விமரிசையாக வழிபாடு நடத்தப்படுகின்றது.
வளர்பிறை தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசிதிதியன்று அதிகாலையில் எழுந்து நீராடி நித்தியக் கடன்களைமுடிக்கவேண்டும். சிவாலயம் சென்று வழிபடவேண்டும். அன்று முழுவதும்உணவின்றி உபவாசம் இருக்கவேண்டும். திருமுறைகளை ஓத வேண்டும்.பிரதோஷநேரம் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை. இந்நேரத்தில் சிவாலயம்சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாயநம) ஓதி வழிபட வேண்டும்.வசதி உள்ளவர்கள் சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேக ஆராதனைகள்செய்தல் அவசியமாகும். சிவபெருமானுக்கு ருத்ரன் என்றொரு பெயரும்உண்டு. ருத் – என்றால் துக்கம். ரன் – என்றால் ஓட்டுபவன். ருத்ரன் – என்றால்துக்கத்தை விரட்டுபவன் என்று பொருள்.
பிரதோஷகாலத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போட்டு நெய்விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் கலந்து வைத்து பூஜை செய்கிறார்கள். எனவே, பிரதோஷ தினத்தன்று மறவாமல் நந்திகேஸ்வர வழிபாடு செய்யவேண்டும்.
The post முன் ஜென்ம பாவவினைகள் கரைந்தோடும் சனிப்பிரதோஷம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.