பிரமிப்புயூட்டும் அதிசய சிவலிங்க ஸ்தலங்கள்
சோழ மன்னர்களால் கட்டப்பட்ட தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோவில்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் தியாகராஜ சுவாமி கோவிலின் சன்னதியில் லிங்கத்திற்கு பதிலாக ஒரு புற்று நிறுவப்பட்டுள்ளது. இக்கோவிலில் புற்று வடிவில் சிவன் காட்சி தருகிறார்.
கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் 5 அடி உயரம் உடைய பசுபதீஸ்வரர் லிங்கம் உள்ளது. ஒரு பசுவின் காம்பில் இருந்து வடியும் பாலில் குளிப்பது போன்று லிங்கம் கர்ப்பகிரகத்தில் சிவபெருமான் காட்சியளிக்கிறது.
பஞ்சபுத ஸ்தலங்களில் திருவானைக்கால் ஸ்தலம் நீர்த்தலம் ஆகும். மூலஸ்தான லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.
சென்னை அம்பத்தூருக்கு அருகிலுள்ள திருமுல்லைவாயிலில் உள்ள மாசில்லாமணீஸ்வரர் கோவிலில் வழக்கத்திற்கு மாறாக நந்தி சிலை சிவபெருமானை நேராகப் பார்த்து இருக்காமல், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
கேரளா மாநிலம் திருச்சுரில் அமைந்துள்ள வடக்கும்நாதர் சிவன் கோவிலில் எத்தனையோ தலை முறையாக, வருடங்களாக ஒரு சிவலிங்கத்திற்கு நெய் அபிஷேகம் செய்து வர, அந்த நெய் உறைந்து சிவலிங்கத்தை மூடிவிட்டது.
உறைந்த நெய்யின் உயரமே நான்கு அடி உயரம் இருக்கும். எத்தனை விளக்குகள் ஏற்றி வைத்தாலும் கூட, அந்த விளக்குகளின் சூட்டிலும் சரி, வெயில் காலத்தின் சூட்டிலும் சரி, அந்த லிங்கத்தின் மேல் உறைந்த நெய்யானது உருகுவதில்லை. இன்றும் தொடர்ந்து நெய் அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு மாவட்டம், காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவிலில் உள்ள குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபுதி தோன்றுகிறது. இது இந்த காலத்திலும் நடக்கும் ஒரு அதிசயம் ஆகும். அந்த குளத்தை சிவபெருமான் தன் விரல் நகத்தால் மண்ணில் கிழித்து உருவாக்கினாராம். மிக உயரமான கல் விளக்கு இந்த கோவிலில் காணப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சால்மலா ஆற்றில் 1000த்திற்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடம் சஹஸ்கர ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள இந்த லிங்களுக்கு அருவியிலிருந்து வழியும் நீரால் இயற்கையாகவே அபிஷேகம் செய்யப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் தங்க சுரங்கத்திற்கு புகழ்பெற்ற கோலார் மாவட்டத்தில் உள்ள கம்மசந்திரா என்ற ஊரில் கோடிலிங்கேஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் பல்வேறு அளவுகளிலான கிட்டத்தட்ட ஒரு கோடி சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதனாலேயே இக்கோவிலுக்கு கோடிலிங்கேஸ்வரர் கோவில் என்ற பெயர் வந்துள்ளது.
சிவகங்கை, திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் பூங்குழலியம்மை சமேத திருநோக்கிய அழகியநாதர் ஆலயம் உள்ளது. தனது குறைகளை போக்க வேண்டி இறைவி இத்தலத்தில் துளசி தளங்களால் ஈசனை வழிபட்டாளாம். அதனால் திங்கட்கிழமைகளில் இத்தல ஈசனுக்கு துளசித்தள அர்ச்சனை நடைபெறுகிறது. மணப்பேறு கிட்டவும் பிரிந்த தம்பதியர் மீண்டும் சேரவும் இத்தலத்திற்கு வந்து தரிசித்து பயனடைகின்றனர். இங்கு பிரதோஷ காலங்களில் மட்டும் இரு மரகத லிங்கங்கள் வெளியே எடுக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றன.
மதுரையிலிருந்து துவரிமான், தேனூர் வழியே சோழவந்தான் பேருந்து பாதையில் 18 கி.மீ. தொலைவில், திருவேடகம் இருக்கிறது. இறைவன் ஏடகநாதர், மந்திர மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். அனைத்து பில்லி, சூன்யங்களும் இவ்வாலய மூர்த்தியைத் தரிசித்ததும் நீங்கி விடுகின்றன. இங்கே எழுந்த ருளி அருள்பாலிக்கும் அம்பாள் ஏலவார் குழலி, பெண்களின் குறைகளைக் கேட்டு அவற்றை நீக்கித் தருகிறாள். இங்குள்ள ஸ்தல விருட்சமான வி ல்வ மரம் சக்தி படைத்தது. இத்தலத்தில் பிரம்ம தீர்த்தக்குளம் உள்ளது. இக்குளத்து நீரையே இறைவனுக்கு அபிஷேகத்தின் போது பயன்படுத்துகிறார்கள்.
The post பிரமிப்புயூட்டும் அதிசய சிவலிங்க ஸ்தலங்கள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.