Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

எமனையே காக்க வைக்கும் வைத்தீஸ்வரன்

$
0
0

     நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழிஅடுத்துள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியநாதன் என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் தீராதநோய்கள் மட்டுமல்ல செவ்வாய் தோஷம், மாங்கல்ய தோஷம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.மேலும் யம பயத்தை போக்குவதுடன் எமனையே காக்க வைக்கும் சக்தி படைத்த வைத்தீயநாத சுவாமிசித்தர்கள் முன்காலத்தில் ஓலைச்சுவடிகள் மூலம் பல விதமான மூலிகைகளைப் பற்றியும் நோய்கள் உண்டானால் அதன் காரணம், அதன் தன்மை, அதற்கு நிவாரணம் தரும் மூலிகைகளைப் பற்றியும் எழுதி வைத்துப் போனார்கள், ஆனால் தேவகர்ளோ நோய்கள் அனைத்தையும் போக்கக் கூறிய ஒரே ஒரு மூலிகை உண்டு என்றனா;. அந்த ஒரு மூலிகைதான் சஞ்சீவி மூலிகை எனப்படுவதும் ஆகும்.

   10 ராவணனுக்கு எதிராகராமன் தொடுத்த யுத்தத்தில், ராவணனின் மகனான இந்திரஜித் என்ற யுவராஜ அரக்ககனால் ஏவப்பட்ட பாணத்தில் கட்டுண்டு, ஆதிசேஷனின் வடிவமான லக்குமணரே மூயச்சித்து விழ, அனுமன் சஞ்சீவி மூலிகை இருக்கும் குன்றை எடுத்து வந்து உயிர்ப்பித்தார் என்கிறது இதிகாசம். அந்த அறிய வகை சஞ்சீவி மூலிகை இன்னும் இருக்கின்றது.ஆனால் அதனை உணரக்கூடிய சக்தி பெற்றவார்கள் அநேகமாக இல்லை என்றே சொல்லலாடம். சஞ்சீவி மூலிகையைத் தேடி ஓடவேண்டிய அவசியமில்லை. அதனினும் மேம்பட்ட ஒரு மூலிகையை வானோர்கள் நமக்குத் தந்துள்ளனா;. அதுதான் வைத்தீஸ்வரன் கோயிலில் குடி கொண்டிருக்கும் வைத்தியநாதசுவாமி. இந்த இறைவன் சஞ்சீவி மூலிகை உள்ளிட்ட உடைய லிங்க வடிவம் என்கிறது நாடி. இதனை அகத்தியா; எண்பத்தெட்டு கோடி வகை மூலிகை தம்பலம் கூடியவன் – தைலாம்பிகையை தன்பக்கத்தில் கொண்டான் – குறைவின்றி மாந்தா; பிணி போக்க கொலுவீற்றிருப்பான் புள்ளிருக்குவேளுர் தல்தே” என்கிறார்புள்ளிருக்கவேளுர் என்பது முன்னை வைத்தீஸ்வரன் கோயிலுக்கு இருந்த பெயா;. எப்படிப்பட்ட நோயையும் குணஞ்செய்யும் சக்தி இந்த இறைவனுக்கு உண்டு .யம பயத்தை போக்குவதுடன் காலனைக் காத்திருக்கச் செய்யும் சக்தி படைத்தவன் ஆவான் என்கிறது பழம்பெரும் நூல்.

  கையில் நோயை குணஞ்செய்யும் தைலமதனைக்கொண்டவள் தையல்நாயகியாம்-வைத்தீஸ்வரசுவாமியின் பிராட்டிர். இங்குள்ள புஷ்கரணியை, சித்தாமிர்த தீர்த்த புஷ்கரணீ என்பவா; தேவா;. தேவாமிர்தம் என்பது தேவார்க்கும் அமரார்க்கும் உரித்தது. ஆனால் மானிடா; உய்ய ஒரு அமிர்தம் வேண்டும் என்பது அங்காரக பகவான் தவம் செய்து பெற்றுதுதான் இந்த சித்தாமிர்தம் என்ற தெய்வக் குழம்பு. செவ்வாய் பகவான் இந்த மண்ணில் கலந்துள்ளார் இந்த பொய்கையில் நீராடியபின்னா;தான் வைத்தியநாத சுவாமியை தார்சிக்க வேண்டும் ஆகம விதி சற்று பிசகாது அமைந்துள்ள இந்த சித்தாமிர்த தீர்த்தக் குளத்தில் தேவர்களும் நீராடி புனிதமடைகின்றனா; என்றால் நமக்கு வியப்பு மேலிடுகிறது. இந்த புண்ணிய சேஷத்திரத்தில் குணப்படுத்த அதிக சிரமம் உடைய குஷ்டரோகம் என்ற நோய் முற்றிய நிலையில் வேதனை தாங்காது அங்காரகன் என்று ஜோதிட வல்லுநர்களால் அழைக்கப்படும் செவ்வாய் கிரக அதிபதியே – ஒரு முகூர்த்த காலம் மூழ்கிநீராடி இறைவனை வழிபட, குஷ்டரோகம் முழுவதுமாக விலகிற்று என்கிறது நாடி சாஸ்திரம்.

     இந்தப் பொய்கையில் நீராடி இறைவனை வழிப்பட்டால் நோய் மட்டும் நீங்கும் எனஎண்ணாதீர் … செவ்வாய் தோஷம், மாங்கல்யதோஷம் எல்லாமும் கண்டிப்பாக நீங்கும். ஆயுள்வலுப்பெறும். அன்று பிரம்மன் எழுதிய ஆயுட்காலம் முடிந்தாலும் மார்க்கண்டேய மகாரிஷிக்கு கிட்டிய பேறு நமக்கு கிட்டுகிறது. ஆயுள்காலம் முடிந்தாலும் மார்க்கண்டேய மகாரிஷிக்கு கிட்டிய பேறு நமக்கும் கிட்டுகிறது. ஆயுலை நீடிக்கும் இதனையே, “ காலனும் காத்திருப்பான்” என்கிறது பாடல். இந்த தலத்திருப்பான் ஜடாயு குண்டம் என்று ஒக்று இருக்கிறது. சீதாப்பிராட்டியாரை ராவணேஸ்வரன் சிறை எடுத்துச் செல்கையில் அவனைத் தடுக்க முற்பட்ட ஜடாயு என்ற பட்சி ராஜனை ராவணன் தூக்கி வீச ஜடாயு என்ற பட்சி ராஜனை ராவணன் தூக்கி வீச ஜடாயு விழுந்த இடம்தான் இந்த வைத்தீஸ்வரன் கோயில், முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பலனால் ஜடாயு, ராம-லட்சுமணரை தரிசித்தான். ராவணனோ சீதையை சிறை எடுத்து தெற்கு நோக்கிச் சென்றான் என்ற செய்தியை ராமபிரானுக்கு உரைத்து, பிறகு உயிரை விட்ட இடம் இது. உலகத்தையே உண்டு உமிழ்ந்து அளந்த அந்த சினுதனுசுவை முறித்த இறைவனே தனது பொற்கரங்களால் பட்சிராஜனாம் ஜடாயுவிற்கு ஈமக்கிரியை செய்து முடித்தான். ஜடாயுவின்அஸ்தியைக் கொண்ட கலசம் புதையுண்ட தலமே ஜடாயு குண்டம் என்பது, பக்தி, தியாகம், சத்தியம் போன்ற வற்றின் இருப்பிடமான இந்த ஜடாயு ஆழ்வானை நெஞ்சார துதிப்போரிக்கு, எப்படிப்பட்ட பாவியாயினும் மோட்சம் கிட்டும் என்கிறாரி அகத்தியாரி

  ஆறுமுகமான முருகப் பெருமான் சூரபத்மனை வதைக்க அவனுடன் யுத்தம் செய்தபோது பலவிதமான காயங்களுடன் அவதிப்பட்டு, இங்குள்ள புஷ்கரணியில் மூழ்கி, வைத்தியநாத சுவாமியை வழிபட காயங்கள் மறைந்து முத்துக்குமார சுவாமியாய் இன்றும் இங்கு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.செவ்வாய் கிழமை ராகு காலம் மற்றும் அஸ்தமன சமயகளில் இறைவனைத்தொழுபவர்; வாழ்வில் எவ்வளவு வடுக்கள் வந்தாலும் மறையும் என்கிறது நாடி சாஸ்திரம்.

அமைவீடம் ;

       சிதம்பரத்தில் இருந்தும் நாகப்பட்டினத்தில் இருந்து பஸ்வசதிவுள்ளது

தொடர்புக்கு : 9952233899

   செய்தி : ப.பரசுராமன்

   படம் : ப.வசந்த்

The post எமனையே காக்க வைக்கும் வைத்தீஸ்வரன் appeared first on SWASTHIKTV.COM.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>