Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

நவக்கிரக பைரவரின் வடிவங்கள் உணர்த்தும் பலன்கள்

$
0
0

நவக்கிரக பைரவரின் வடிவங்கள் உணர்த்தும் பலன்கள்

நவக்கிரகங்கள் – பிராண பைரவர் – பைரவரின் உபசக்தி
1. சூரியன் – சுவர்ணாகர்ஷணபைரவர் – பைரவி
2. சந்திரன் – கபால பைரவர் – இந்திராணி
3. செவ்வாய் – சண்ட பைரவர் – கௌமாரி
4. புதன் – உன்மத்த பைரவர் – வராஹி
5. குரு – அசிதாங்க பைரவர் – பிராமஹி
6. சுக்கிரன் – ருரு பைரவர் – மகேஸ்வரி
7. சனி – குரோதன பைரவர் – வைஷ்ணவி
8. ராகு – சம்ஹார பைரவர் – சண்டிகை
9. கேது – பீஷண பைரவர் – சாமுண்டி

பைரவரின் சிறப்பு வடிவங்கள்:

பைரவர் நீலநிற மேனியராய் சிலம்பொலிக்கும் திருவடிகளை உடையவராய், பாம்புகள் பொருந்திய திருஅரையும், தலை மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், மழு, பாசம், உடுக்கை இவைகள் ஏந்திய திருக்கரங்களையும் சிவபெருமான் போன்றே மூன்று கண்களையும், இரண்டு கோரைப்பற்களை உடையவராய், செஞ்சடை உடையவராய், கோபச் சிரிப்பும், உக்கிர வடிவமும் உடையவராய் காட்சியளிப்பார் என்று பைரவரின் தோற்றத்தை புராணங்கள் கூறுகின்றன. உடற்பற்றை நீக்கியபடியால் பைரவர் நிர்வாண கோலத்துடன் காட்சியளிக்கின்றார்.

பன்னிரண்டு ராசிகளுக்கான காலபைரவர்

பைரவர் காவல் தெய்வமாகையால் காவல் குறியீடான நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். இந்த நாயாவது பைரவருக்குப் பின்புறம் குறுக்காகவும், அவருக்கு இடப்புறம் நேராகவும் நிற்கின்றது. நகரத்தார் கோயில்களில் காணப்படும் பைரவர் வடிவத்தில் பெரும்பாலும் இரு நாய் வாகனங்களே காணப்படுகின்றன. அஷ்ட பைரவ வடிவங்களில் இந்த நாய் வாகனம் வேறு வாகனங்களாகக் காட்சியளிக்கிறது.

பைரவர் – பைரவரின் சக்தி – வாகனம்
1. அசிதாங்க பைரவர் – பிராமி – அன்னம்
2. ருரு பைரவர் – மகேஸ்வரி – ரிஷபம்
3. சண்ட பைரவர் – கௌமாரி – மயில்
4. குரோதன பைரவர் – வைஷ்ணவி – கருடன்
5. உன்மத்த பைரவர் – வராகி – குதிரை
6. கபால பைரவர் – இந்திராணி – யானை
7. பீஷண பைரவர் – சாமுண்டி – சிம்மம் (மனித பிரேதமும் உண்டு)
8. சம்ஹார பைரவர் – சண்டிகை (இலக்குமியுடன் சேர்த்து சப்த மாதர்கள்) – நாய்

ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்,swasthik, bhairavar,temple,kovil,

இவ்வாறு விதவிதமான வாகனங்களில் காணப்படும் பைரவர் ஒரு சில ஆலயங்களில் எவ்வித வாகனமும் இன்றி தனியராய் காட்சியளிக்கிறார். திருவான்மியூர், பேரூர், வேதாரண்யம், திருவிற்கோலம் ஆகிய தலங்களில் உள்ள பைரவ வடிவங்களில் நாய் வாகனம் காணப்படவில்லை.
எண்ணிலாக் கரங்களும், எண்ணிலாத் தலைகளும், எண்ணிலா கால்களும் கொண்ட காட்சிக்கு மிக மிக அரிதான வஜ்ர பைரவரின் திருவடிவம் ஒன்று புதுச்சேரி பிரஞ்சிந்திய பண்பாட்டுக் கழகத்தில் காணப்படுகிறது. மூன்று கால்களைக் கொண்ட அபூர்வ பைரவர் சிருங்கேரியில் காணப்படுகிறார்.
சூரக்குடியில் பைரவர் கதாயுதத்துடனும், திருவாரூரில் பைரவர் கையில் கட்டுவாங்கத்தையும் ஏந்தி அபூர்வ பைரவராகக் காட்சியளிக்கிறார்.
திருப்பத்தூருக்கு அருகில் பெரிச்சி கோயிலில் உள்ள பைரவத் திருவடிவம் எட்டுத் திருக்கரங்கள் கொண்டதாய் ஒரு கரத்தில் அறுபட்ட நிலையில் தலையொன்றை முடிக்கற்றையுடன் பிடித்தவண்ணம் காணப்படுகிறது. இன்னொரு வகையில் பிணத்தைக் குத்தி ஏந்திய நிலையில் கங்களாத்தண்டு உள்ளது. இவரருகே உள்ள நாய் இரண்டாம் இடக்கையில் தொங்கும் தலையின் தசைப்பகுதியை சுவைத்துக் கொண்டிருக்கிறது.

The post நவக்கிரக பைரவரின் வடிவங்கள் உணர்த்தும் பலன்கள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!