ஆவணி மாதம் விசேஷங்களும் விரதங்களும்
ஆகஸ்ட் 17, வியாழன்
தசமி. விஷ்ணுபதி புண்யகாலம். சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
ஆகஸ்ட் 18, வெள்ளி
ஏகாதசி. ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு. திருமோகூர் காளமேகப் பெருமாள் புறப்பாடு. திருச்செந்தூர் ஷண்முகர் சிவப்பு சாத்தி தரிசனம்.
ஆகஸ்ட் 19, சனி
துவாதசி. சனிபிரதோஷம். திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு ஆராதனை. திருச்செந்தூர் ஷண்முகர் பச்சை சாத்தி தரிசனம். பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு.
ஆகஸ்ட் 20, ஞாயிறு
சதுர்த்தசி. சோளிங்கர் லட்சுமிநரசிம்மப் பெருமாள் திருப்பவித்ர உற்சவம்.
ஆகஸ்ட் 21, திங்கள்
அமாவாசை. அமாசோமவாரம். அரசமர பிரதட்சிணம். திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் விபூஷணாழ்வாருக்கு நடையழகு காண்பிக்கும் சேவை. அஸ்வத்தமர பிரதட்சிணம். திருப்பனந்தாள் பொய்கை குளத்தில் பிரம்மனுக்கு சாபம் நீக்கி அருளிய லீலை. திருச்செந்தூர் ஷண்முகர் தேரோட்டம்.
ஆகஸ்ட் 22, செவ்வாய்
பிரதமை. வாஸ்து நாள். பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் மயில்வாகனத்தில் பவனி.
ஆகஸ்ட் 23, புதன்
துவிதியை. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் பவனி. உப்பூர் விநாயகர் திருக்கல்யாணம். கல்கி ஜெயந்தி.
ஆகஸ்ட் 24, வியாழன்
திருதியை. சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஹரிதாளிகா கெளரி விரதம். விபத்தார கெளரி விரதம். திருவாரூர் மடப்புரம் ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் குருபூஜை. உப்பூர் விநாயகர் ரதோற்சவம்.
ஆகஸ்ட் 25, வெள்ளி
சதுர்த்தி விரதம். விநாயகர் சதுர்த்தி. குஜசாந்திபூர்வ சாமோபகர்மா. அஹோபில மடம் 44ம் பட்டம் திருநட்சத்திரம்.
ஆகஸ்ட் 26, சனி
பஞ்சமி. ரிஷி பஞ்சமி விரதம். திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. மகாலட்சுமி விரதம். விருதுநகர் சொக்கநாதர் உற்சவாரம்பம். மதுராந்தகம் பஞ்சசம்ஸ்கார உற்சவம்.
ஆகஸ்ட் 27, ஞாயிறு
சஷ்டி. விருதுநகர் சொக்கநாதர் பூத வாகனத்திலும் அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி. சம்பா சஷ்டி விரதம். ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.
ஆகஸட் 28, திங்கள்
ஸப்தமி. ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு. கும்பகோணம் ராமஸ்வாமி பவித்ரோற்சவம் ஆரம்பம்.
ஆகஸ்ட் 29, செவ்வாய்
தூர்வாஷ்டமி. விருதுநகர் சொக்கநாதர் யானை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் புறப்பாடு. லக்ஷ்மி விரதாரம்பம்.
ஆகஸ்ட் 30, புதன்
நந்த நவமி. கேதார விரதாரம்பம். அஹோபில மடம் ஸ்ரீமத் 2வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திர வைபவம். திருவையாறு சூரிய புஷ்கரணியில் தீர்த்தம். இரவு தெப்பம். வேளூர் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு. திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் புட்டுத் திருவிழா. அக்கரை வட்டம் ஸ்ரீசச்சிதானந்தஸ்வாமி குருபூஜை.
ஆகஸ்ட் 31, வியாழன்
நவமி. கஜலக்ஷ்மி விரதம். ஆவணி மூலம். ஸ்ரீபெரும்புதூர் மணவாளமாமுனிகள் புறப்பாடு.
செப்டம்பர் 1, வெள்ளி
தசமி. குறுக்குத்துறை முருகப்பெருமான் புறப்பாடு.
செப்டம்பர் 2, சனி
பரிவர்த்தன ஏகாதசி. குருபெயர்ச்சி. காலை 9.31க்கு கன்யா ராசியிலிருந்து துலா ராசிக்கு பெயர்ச்சியாகிறார். ஆலங்குடி குருபகவான் விசேஷ அபிஷேகம். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு. சென்னை பைராகி மடம் திருப்பவித்ரோற்சவம்.
செப்டம்பர் 3, ஞாயிறு
துவாதசி. பிரதோஷம். வாமன ஜெயந்தி. சாத்தூர் வெங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி. திருவோண விரதம். மாதா புவனேஸ்வரி ஜெயந்தி.
செப்டம்பர் 4, திங்கள்
திரயோதசி. நடராஜர் அபிஷேகம். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சட்டத்தேரில் பவனி. இரவு ஸப்தாவரணம். ஓணம் பண்டிகை. கதலீ கெளரீ விரதம். உத்தரகெளரீ விரதம். ஹயக்ரீவர் ஜெயந்தி. திருவள்ளூர் வீரராகவர் பவித்ரோற்சவம். திருவஹீந்திரபுரம் தேவநாதபெருமாள் சேவை சாத்துமுறை. கும்பகோணம் ராமஸ்வாமி திருப்பவித்ர உற்சவ கருடசேவை.
செப்டம்பர் 5, செவ்வாய்
சதுர்த்தசி.அனந்த விரதம்.
செப்டம்பர் 6, புதன்
பெளர்ணமி. மகாளயபக்ஷம் ஆரம்பம். யஜுர் உபாகர்மா. உமாமஹேஸ்வர விரதம். குறுக்குத்துறை முருகப்பெருமான் தீர்த்தவாரி. திருவேடகம் ஏடகநாதஸ்வாமி திருப்பாசுர ஏடுஎதிர் ஏறிய லீலை. சென்னை பைராகிமடம் பவித்ரோற்சவம் பூர்ணாஹுதி. காஞ்சி வரதர் பவித்ரோற்சவம்.
செப்டம்பர் 7, வியாழன்
பாத்ரபத பகுள ப்ரதமை. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
செப்டம்பர் 8, வெள்ளி
துவிதியை. திருப்பதி திருமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். ப்ரஹதிகெளரீ விரதம்.
செப்டம்பர் 9, சனி
திருதியை. சங்கடஹரசதுர்த்தி. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் புறப்பாடு. சிறப்பு அபிஷேகம். ஆராதனை. திண்டுக்கல் சத்குரு கருணாம்பிகை அம்மையார் குருபூஜை.
செப்டம்பர் 10, ஞாயிறு
சதுர்த்தி. மகாபரணி. கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் ஹனுமாருக்கு திருமஞ்சன சேவை. புன்னைநல்லூர் மாரியம்மன் தேர்.
செப்டம்பர் 11, திங்கள்
பஞ்சமி. சஷ்டி. கிருத்திகை. கார்த்திகை விரதம். திருப்போரூர் முருகப் பெருமான் அபிஷேகம். பழநி முருகன் புறப்பாடு. வலங்கைமான் மகாமாரியம்மன் தெப்பம்.
செப்டம்பர் 12, செவ்வாய்
ஸப்தமி. மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி புறப்பாடு. குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு.
செப்டம்பர் 13, புதன்
அஷ்டமி. பாஞ்சராத்ர ஜெயந்தி. மத்யாஷ்டமி. மதுரை நவநீத கிருஷ்ணஸ்வாமி உற்சவம். லட்சுமி பூஜை.
செப்டம்பர் 14, வியாழன்
நவமி. மஹாவ்யதீபாதம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
செப்டம்பர் 15, வெள்ளி
தசமி. திருவிடைமருதூர் பிரஹத்குஜாம்பிகை புறப்பாடு. கும்பகோணம் ராமர் திருக்கல்யாணம்.
செப்டம்பர் 16, சனி
ஸர்வ ஏகாதசி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரெங்க மன்னார் கண்ணாடி மாளிைகக்கு எழுந்தருளல். செருத்துணையார் முக்தி தினம்.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post ஆவணி மாதம் விசேஷங்களும் விரதங்களும் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.