Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

திருவடிசூலம் ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

$
0
0

திருவடிசூலம் ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

 பைரவசக்தி என்பது காலம் காலமாய் தொடர்ந்து இம்மண்ணுலகில் வாழும் உயிர்களை காத்துக்கொண்டிருக்கிறது. இந்த சக்தியின் வேகம் ,இதன் மயிர்கூச்செறியும் ஆற்றல், அதனால் உடலில்,உள்ளத்தில் ஏற்படும் மாற்றம் பிரமிக்கவைக்கிறது.

 எவர் தம்மை அழைத்தாலும் பாரபட்சமின்றி நொடிப்பொழுதில் தம் தன்மையை காண்பிக்கும் இதன் வல்லமை ,நினைக்கவே பிரம்மாண்டமாய் உள்ளது.பைரவரை வழிபாடு செய்பவர்கள் கண்டிப்பாக  பைரவர் தரும் பலன்களை அனுபவித்தே ஆகவேண்டும்.இது யாம் எமது அனுபவத்தில் கண்டஉண்மை.பைரவரின் சக்தியை உணர்ந்தே ஆவர்கள்.

 பைரவரின் அருள் ஆசி இருந்தால் மட்டுமே மூலிகை பற்றிய ரகசியங்கள் புரியும்.இல்லை எனில் ஏட்டுசுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல ஆகிவிடுகிறது.அதுமட்டுமல்ல பொருள் வளத்திற்கும் பைரவசக்தி மிக சிறந்தமுறையில் உதவுகிறது.

 வாழ்வின் தேவைகள் நிறைவேற்றிக்கொள்ள ஸ்வர்ணம் மிக அவசியமாகிறது. ஸ்வர்ணம் இல்லாமல் அதுவும் இன்றைய காலகட்டத்தில் வாழ்வது மிக கடினமாகிறது.கடின உழைப்பின் மூலம் இதனை பெறவேண்டிய நிர்பந்தம் உள்ளது.

   எல்லாம் கர்மவினையும் கோள்கள் ஆட்சிபுலமும் மிக முக்கியபங்கு வகிக்கிறது.இருந்தாலும் இவை எளிதில் பெற ,தடைகள் எளிதாய் அகன்று வேண்டியவை வேண்டியவாறு பெற ஒரு சக்தி தேவைப்படுகிறதல்லவா ..? பைரவர் அருள் இதற்கு சிறந்த முறையில் வழிகாட்டுகிறது. ஸ்ரீ ஸ்வர்ணஆகர்ஷன பைரவர், வாழ்வின் மிக முக்கிய தேவையான ஸ்வர்ணங்களை அள்ளிதரும் ஒரு அற்புத சக்தி.

பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர்என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் – அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்சஉயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில்உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்தக் கடவுளே ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் காலபைரவராக உலகை காக்கின்றார்.

பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர்விளங்குகின்றார். அதனால் தான் பைரவர் வழிபாட்டின் பலனைக் குறிக்க இந்தப் பழமொழி வழங்கப்பட்டது. நவக்கிரகங்களின் வக்கிரத்தால் பலர்வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தை அடைகிறார்கள். அதுவே அவர்களின் நல்ல பார்வையால் சிலர் எதிர்பாராத நன்மைகளையும், புகழையும்அடைகிறார்கள். நன்மைகள் கிடைத்தால் சரி, ஆனால், வரும் துன்பங்களிலிருந்து மீள என்ன வழி என்று கேட்டால் பைரவர் பூசை செய்யுங்கள்என்று தான் சொல்ல வேண்டும்.

தொடர்புக்கு:

ஸ்ரீ மகா பைரவர் வீடு
(ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம்)
ஸ்ரீ பைரவர் நகர்,

திருவடிசூலம்,

ஈச்சங்கருணை,

செங்கல்பட்டு

+91-9941510000 / +91-8124516666

For Details and news updates contact:

 Send Your Feedback at : editor@swasthiktv.com

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post திருவடிசூலம் ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>