என் பார்வையிலிருந்து எவருமே தப்ப முடியாது
இந்திரனையும் விட்டு வைக்காத சனீஸ்வரன்:
ஒரு சமயம் தேவேந்திரன் தன்னை சனி பிடிக்கப் போகிறார் என்பதை அறிந்து, சனியைக் கூப்பிட்டு “நான் தேவர்களுக் கெல்லாம் தலைவன் என்னை எப்படி நீ பிடிக்கலாம்?” என்று கேட்டார். அதற்கு சனி பகவான் “என் பார்வையிலிருந்து எவருமே தப்ப முடியாது” எனப்பதிலளித்தார். “அப்படியானால் நீ என்னைப்பிடிக்கும் நேரத்தைச் சொல்லி விடு” என்று தேவேந்திரன் கேட்டார்.
சனி பகவானும் அதைக் கூறினார். அந்நேரம் வந்ததும் இந்திரன் பெருச்சாளி உருவம் எடுத்து சாக்கடையில் ஒளிந்து கொண்டான். சனி அந்த இடத்தில் தேட மாட்டார் என்று நினைத்தார். அவர் நினைத்தப்படியே குறிப்பிட்ட நேரம் கடந்தது. சனி பார்வை தன் மீது படவில்லை என்று இந்திரன் மகிழ்ந்தார்.
சிறிது நேரம் கழிந்ததும் இந்திரன் வெளியே வந்து சனி பகவானைக் கூப்பிட்டு, தான் தப்பித்துக் விட்டதாக பெருமையாக கூறினார். உடனே சனீஸ்வரன் சிரித்துக் கொண்டே நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் சில நாழிகை இருந்ததே என் பீடிப்பினால் தான்! என்றார் எங்கு சென்று ஒளிந்து கொண்டாலும் சனியின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
சனி பகவான் பூஜை:
சனிக்கிழமை காலை குளித்து சுத்தமான ஆடை உடுத்திக் கொள்ளவும். எள்ளுசாதம், எள்கலந்த பலகாரம், பட்சணங்கள், கசப்பு பதார்த்தகங்கள் படைத்து பழம், தேங்காய் வெற்றிலைப் பாக்கு வைக்கவும். சனிக்கிழமை தோறும் விரதம் இருக்கவும்.
எள்ளை ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் சிறிது போட்டு கட்டி, திரி போல் திரித்து விளக்கில் போட்டு எள்ளு எண்ணை விட்டு தீபம் ஏற்றவும். பூஜை முடிந்ததும், எள்ளு சாதம் முதலியவற்றில் சிறிது எடுத்து ஓர் இலையில் வைத்து காக்கைக்கு சாப்பிட வைக்கவும்.
சனிபகவானும் நோய் பாதிப்பும்
ஜாதகத்தில் சனி பகவான் பலம் குன்றியவர்களுக்கு நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்ட வியாதிகளான வாயு, கை- கால் தொடர் நடுக்கம் என்கிற வியாதி, சிறுநீரகக் கோளாறு அடிவயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் போன்றவை உண்டாகின்றன. ஒருவருக்கு ஏழரைச் சனி வந்தால் அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு குறைந்த அளவிலாவது ஏற்படும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்.
இது ஏழரைச் சனிக்கு மட்டுமின்றி அஷ்ட மச்சனி, சனி தசைக்கும் பொருந்தும், அது போன்ற நிலையில் உள்ளவர்கள் சொகுசாக வாகனங்களில் செல்வதைத் தவிர்த்து அதிகளவில் நடந்து செல்ல பழக வேண்டும். சனி எளிமைக்கு உரிய கிரகம் என்பதே அதற்கு காரணம். சனியின் ஆதிக்கத்திற்கு உட்படும் போது நடை பயணம் செய்வதன் மூலமே சர்க்கரை நோயில் இருந்து தப்ப முடியும்.
For Details and news updates contact:
முனைவர் முருகு பாலமுருகன்
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post என் பார்வையிலிருந்து எவருமே தப்ப முடியாது appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.