தர்மபுர ஆதீன சமயப் பிரசார நிலையம் சென்னை ஸ்ரீ கந்த சஷ்டி விழா அழைப்பிதழ்
தருமபுர ஆதீன சமய பிரசார நிலையம் சென்னை
வேளூர் தேவஸ்தான இறைபணி மன்றம்,
வடக்கு உஸ்மான் சாலை, தியாகராயநகர், சென்னை
ஸ்ரீ கந்த சஷ்டி விழா அழைப்பிதழ்
அன்புடையீர்:
ஸ்ரீ செந்தமிழ்ச்சொக்கர் திருவருளாலும், ஆயிரம் பிரைக்கண்டு கனகாபிஷேகம் கொண்டருளிய தருமையாதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமஹாசந்நிதானம் அவர்களின் அருளாசியாலும் நமது நிலைய முத்தையா மணிவிழா மண்டபத்தில் 20.10.2017 வெள்ளிக்கிழமை முதல் 27.10.2017 வெள்ளிக்கிழமை வரை எட்டு நாட்களும் நாள்தோறும் காலை 9.00 மணிமுதல் 10.00 மணிவரை ஸ்ரீ சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனையும் மாலை 6.00 மணிமுதல் ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கு வழிபாட்டுடன் தொடங்கி, சொற்பொழிவுகளும் இசை, கலை நிகழ்ச்சிகளும், இரவு 8.30 மணிவரை நிகழ்ச்சி நிரலில் உள்ளவாறு சிறப்புற நடைபெறும்.
அனைவரும் வருக! திருவருள் பெறுக!
ஸ்ரீலஸ்ரீ குருமஹாசந்நிதானத்தின் உத்தரவுப்படி,
ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள்
தருமை ஆதினம் இளைய சந்நிதானம்
சென்னை- 600017
தொடர்ப்புக்கு: 96266 14594, 9444887769
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post தர்மபுர ஆதீன சமயப் பிரசார நிலையம் சென்னை ஸ்ரீ கந்த சஷ்டி விழா அழைப்பிதழ் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.