ஸ்ரீசனி பகவான் எளிய வழிபாடு வழிபாட்டு முறைகள்
சனி கோர பார்வை ராஜாவை பிச்சைகாரனாகவும், பிச்சைக்காரனை ராஜாவாகவும் மாற்றும் சக்தி வாய்ந்தது. அதனால்தான் “சனியை போல் கொடுப்பாரும் இல்லை கெடுப்பாரும் இல்லை” என்பார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை. ஏனென்றால் சனிபகவான் தான் விரும்பியவர்களுக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்குவார்.
ஆனால் பிறருக்கு கெடுதல், தீமை செய்பவர்கள் மீது சனியின் கோரப்பார்வை சனி பிடிக்கும்போது அவர்களை ஏழரை ஆண்டுகள் சனி பிடித்து ஆட்டி படைப்பார். அப்போது வாழ்க்கை இன்பத்தினை இழந்து, பதவி மற்றும் இருந்த வேலை இழந்து, வாழ்க்கையே வெறுத்து தற்கொலைக்கு தூண்டும் அளவுக்கு துன்பத்தினை அனுபவிப்பார்கள்.
சனி பகவான் பூஜை
சனிக்கிழமை காலை குளித்து சுத்தமான ஆடை உடுத்திக் கொள்ளவும். எள்ளுசாதம், எள்கலந்த பலகாரம், பட்சணங்கள், கசப்பு பதார்த்தகங்கள் படைத்து பழம், தேங்காய் வெற்றிலைப் பாக்கு வைக்கவும். சனிக்கிழமை தோறும் விரதம் இருக்கவும்.
எள்ளை ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் சிறிது போட்டு கட்டி, திரி போல் திரித்து விளக்கில் போட்டு எள்ளு எண்ணை விட்டு தீபம் ஏற்றவும். பூஜை முடிந்ததும், எள்ளு சாதம் முதலியவற்றில் சிறிது எடுத்து ஓர் இலையில் வைத்து காக்கைக்கு சாப்பிட வைக்கவும்.
சனீஸ்வர தீபம்
முக்கூட்டு எண்ணெய் (நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய்)யினால் ஓர் இரும்புச் சட்டியில் வெள்ளை, கறுப்பு, சிவப்பு வண்ண நூல்களைத் திரியாக இட்டு மேற்கு திக்கில் தீபம் ஏற்றி வர வேண்டும். இதற்கு சனீஸ்வர தீபம்.
இந்தத் தீபத்தைச் சனி பகவான் சன்னதியிலும் ஏற்றலாம். இந்த தீபத்தை ஏற்றி நீலோற்பல மலர் – நீலசங்கு புஷ்பம், வன்னி, இலை, வில்வ இலைகளால் தீபத்தைப் பூஜித்து சனி பகவானைச் சாந்தி பரிகாரம் செய்யலாம். இந்த தீப பரிகாரம் தாங்க முடியாத சனி பகவானின் இன்னலிருந்து விடுவித்து சாந்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.
ஸ்ரீசனி பகவான் வழிபாடுகள்
1.உடல் ஊனமுற்றவர்களுக்கு அல்லது அதை சார்ந்த பள்ளிகளுக்கு உதவி செய்தல்.
2.சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல்.
3.அருகில் உள்ள சிவ ஆலயங்களில் சிவ வழிபாடு செய்தல்.
4.சங்கடஹர சதுர்த்தி அன்று மோதகம் வைத்து அருகம்புல் சாற்றி வழிபடுதல்.
5.ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மலை சாற்றி வழிபடுதல்
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post ஸ்ரீசனி பகவான் எளிய வழிபாடு வழிபாட்டு முறைகள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.