அமிர்த தாரா மஹாமந்திர தீட்சையின் பயன்கள்
காரும், பங்களாவும் வேண்டுமென்று ஆசைப்படவில்லை. அந்த அப்பாவி ஜீவன்கள் பசிக்கும் பட்டினிக்கும் உணவும், உடம்பை மறைக்க ஆடையும், வெயிலுக்கும், மழைக்கும் ஒதுங்க ஒரு குடிசை வேண்டுமென்று நியாயமாக விரும்புகிறார்கள். அவர்களுக்கு அது கிடைக்கவில்லை. வாழ்வதற்கு திண்ணை கூட இல்லாமல், பல்லாயிரம் பேர்கள் தவிக்கும் போது ஒரு மனிதனுக்கு ஒன்பது வீடுகள் இருக்கிறது. இது சமுதாயத்தின் சீர்கேடா? இயற்கையின் சாபமா? ஆண்டவனின் திருவிளையாடலா?
அமிர்த தாரா மந்திரம்
சிலருக்கு சிரிப்பு வரும், சிலருக்கு அவநம்பிக்கை வரும். சிலர் இது எதோ ஏமாற்று வித்தை என்றும் நினைக்கத்தோன்றும். யார் எப்படி நினைத்தாலும் இது சத்தியம். இது உண்மை. நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், எவ்வளவு ஆழமான பள்ளத்தில் கிடந்தாலும், உங்களை தூக்கி நிமிர்த்தி சமுதாயம் என்ற கோபுரத்தின் மேலே, உங்களை உட்கார வைக்கும் ஆற்றல் இந்த மந்திரத்திற்கு உண்டு. இதை நம்பி கெட்டவர்களை விட, நம்பாமல் கெட்டவர்கள் தான் அதிகம். இவ்வளவு உறுதியாக இந்த விஷயத்தை நான் பேசுவதற்கு காரணம் இருக்கிறது. முதலில் மந்திரம் என்றால் என்ன? அது நம்மை எப்படி வழிநடத்தும் என்ற தொழில்நுட்பதை நீங்கள் புரிந்து கொண்டால் அந்த காரணம் உங்களுக்கே தெளிவாகி விடும்.
இயற்கை சக்திகளின் அதிபதிகள் தேவதைகள். மந்திரங்கள் என்பது தேவதைகளின் உருவமாகும். அதாவது உண்மையில் தேவதைகள் என்பதே மந்திரங்கள் தான். கடவுளும், தேவதைகளும் இரண்டு வடிவாக இருப்பதாக நமது ஞானிகள் கூறுகிறார்கள். ஒன்று ஒளி வடிவம். இன்னொன்று ஒலி வடிவம். ஒருவகையில் இரண்டுமே ஒன்றுதான். வெளிச்சம் சத்தமாக வருகிறது எனலாம். மந்திரங்கள் என்பதும் சத்தமாக இருக்கின்ற தேவதைகளே. குறிப்பிட்ட தேவதை, குறிப்பிட்ட வரத்தை கொடுப்பது போன்று குறிப்பிட்ட மந்திரம் குறிப்பிட்ட பலனை தருகிறது.
மந்திரங்கள் என்பது ஓசைகளின் கூட்டமைப்பு. ஓசைகள் இல்லாமல், உலகம் இல்லை. உயிர்கள் இல்லை. உடலும் இல்லை. இந்த உலகில் காணப்படும் அனைத்துமே ஓசையிலிருந்து தான் வந்ததாகும். கிறிஸ்தவ மதமும் கூட, இதை ஒத்துக்கொள்கிறது. விவிலியம் முதலாம் அதிகாரத்தில், ஆதியில் வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனாக இருந்தது என்று வருகிறது. இதைதான் இந்து மதம் விவிலிய காலத்து முன்பே நாத விந்து என்றது. இறைவனை வேத மந்திர சொரூபன் என்றது.
ஓசைகள் ஒன்று என்றாலும், சமுத்திரத்தில் பல துளிகள் சேர்ந்து ஒரு பேரலையை உற்பத்தி செய்வது போல, ஓசையிலும் பல சிறிய ஓசைகள் உண்டு. அவைகள் எண்ணிக்கையில் அடங்காதவைகள். நேற்று பிறந்த, இன்று பிறந்திருக்கிற, நாளை பிறக்கப்போகிற அனைத்து மனிதர்களுக்குமே தனித்தனியான பிரத்தியேகமான ஓசைகள் இருக்கின்றன. இப்படி நான் மட்டும் கூறவில்லை. நமது வேதங்களும், சாஸ்திரங்களும் கூறுகின்றன. வாடகை வீடுகள் ஆயிரம் இருந்தாலும், நமக்கென்று உள்ள சொந்த குடிசையில் கிடைக்கின்ற சுதந்திரமும் சுகமும் வேறு எதிலும் கிடைக்காது அல்லவா? அதைப்போல ஆயிரம் மந்திரங்கள் இருந்தாலும், நமக்கென்று தனியாக இருக்கும் மந்திரத்தை தேர்ந்தெடுத்து சொன்னால் தான் நமது சொந்த தேவைகள் பூர்த்தியாகும்.
ராஜசம், தாமசம், சத்வசம் ஆகிய மூன்று குணங்களும் தனித்தனியாகவோ ஒருங்கினைந்தோ செயல்படுவது கிடையாது. ராஜசத்திற்குள் சத்வசமும், சத்வசத்திற்குள் தாமசமும் கலக்கின்றன. அப்படி கலக்கும் போது, விகிதாசாரங்கள் மாறுபட்டு, பல்லாயிரக்கணக்கான குணங்களாக சுபாவங்களாக உருவெடுக்கின்றன. அப்படி பலகோடி குணங்கள் உருவானாலும், அவற்றின் வேர்களாக இருப்பது முக்குணங்களே ஆகும்.
மனித குணங்கள் மூன்று என்று தரம்பிரித்த நமது முன்னோர்கள், மனிதனின் லெளகீக தேவைகளை பூர்த்தி செய்யும் மந்திரங்களையும் மூன்று பகுதிகளாக பிரித்தார்கள். புலன்கள் ஒவ்வொன்றிற்கும் ஒன்றோடு ஒன்று கலந்து பல்வேறுபட்ட கலவைகள் இருப்பது போலவே மந்திரங்களுக்கும், லட்சக்கணக்கான கலவைகள் உண்டு. அந்த கலவைகளின் சூத்திரத்தை கற்றவர்களுக்கு இன்னாருக்கு இந்த மந்திரம் சொந்தமானது என்று முடிவுக்கு வந்து விட முடியும். இந்த இடத்தில் தான் மந்திர சாஸ்திரம் பயில்வதற்கு குரு ஒருவரின் ஒத்தாசை அவசியமாகிறது.
அமிர்த தாரா மந்திர தீட்சை
அமிர்த தாரா மஹாமந்திர தீட்சையின் பயன்கள்:
செல்வமும், செல்வாக்கும் பெருகும்.
வியாபாரம் அபிவிருத்தியாகி, கோடிஸ்வர யோகம் தரும்.
குடும்பத்தில் அமைதி நிலவும்.
கணவன்-மனைவி சிக்கல்கள் தீரும்.
நல்ல திருமண வாழ்க்கை உடனடியாக அமையும்.
குழந்தை பாக்கியத்தை பெறலாம்.
குழந்தைகள் வளர்ச்சி காண்பார்கள்.
கல்வி தடையில்லாமல் வளரும்.
வேலை கிடைக்கும். அயல்நாட்டு யோகம் வரும்.
நவக்கிரஹ தோஷங்கள் விலகும்.
செவ்வாய் தோஷம் தீர்வுக்கு வரும்.
சனி மற்றும் ராகு-கேது தோஷம் தீரும்.
நீண்ட நாள் நோய்கள் விலகும்.
தீய சக்திகளின் பாதிப்புகள் அகலும்.
தெய்வ அனுக்ரஹம் கிடைக்கும்.
அமிர்த தாரா மஹாமந்திர தீட்சை அக்டோபர் 22 ஞாயிறு அன்று கொடுக்க படுகிறது மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
Cell:- 8110088846 / 9442426434
www.ujiladevi.in
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post அமிர்த தாரா மஹாமந்திர தீட்சையின் பயன்கள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.