1 ஆகாயம் – சிதம்பரேசுவரர்:
சென்னையில் அமைந்திருக்கும் ஆகாய ஸ்தலமாக சிதம்பரேசுவரர் ஆலயம் ஆகும். இதன் மூலவர்திருமூலநாதசுவாமி ஆவார். மிகவும் பழுதடைந்த கோவில். தினமும் காலை 6 மணிமுதல் 11.30 வரையிலும், மாலை 5 மணி முதல் 9 மணிவரையிலும் கோவில் திறந்திருக்கும். 1994 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்ற இத்திருக்கோவிலின் தல மரம் வில்வம் ஆகும்தில்லை சிதம்பரம் போன்றே இங்கும் ஸ்படிக லிங்க பூஜை தினமும் காலை மற்றும் இரவு8.30க்கு நடைபெற்றுவருகிறது.
2 மண் – ஏகாம்பரேஸ்வரர்:
சென்னையின் மண் ஸ்தலமாக அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் ஆகும். தலமரமாக வன்னிமரம் அமைந்திருக்கிறது.சென்னையில்வன்னிமரத்தடியிலும், அரசமரத்தடியிலும் சிவலிங்கம் அமைந்திருப்பது இங்கே மட்டுமே! மண் ராசிகளான ரிஷபம்,கன்னி,மகர ராசிகள் மற்றும் ரிஷப லக்னம்,கன்னி லக்னம், மகரலக்னத்தில் பிறந்தவர்களுக்கு விரைவான சிவ அருள் இங்கே வந்து அடிக்கடி வழிபட,அல்லது இங்கே வந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்ய கிட்டும்.
3 நீர் – கங்காதரேசுவரர்:
சென்னையின் நீர் ஸ்தலமான கங்காதரேசுவரர்,தாமரைத்தாய் மற்றும் பங்கஜாம்பாளுடன் அருள்புரிந்து கொண்டிருக்கிறார். கடக லக்னம் அல்லது கடகராசி, விருச்சிக லக்னம் அல்லது விருச்சிக ராசி,மீன லக்னம்அல்லது மீன ராசியில் பிறந்தவர்கள் இந்த ஆலயத்துக்கு அடிக்கடி வருகை தந்து சிவ அபிஷேகம் அல்லது ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்து வர அவர்களின் நியாயமான நோக்கங்கள் நிறைவேறும்.ஏனெனில்,இந்த ராசி மற்றும் லக்னமானது நீர் ராசியைச் சேர்ந்தது ஆகும்.
4 நெருப்பு – அருணாச்சலேசுவரர்,அபிதகுலசாம்பாள்:
சென்னையின் நெருப்பு ஸ்தலமாக அருணாச்சலேசுவரர்+அபிதகுலசாம்பாள் திருக்கோவில் திகழுகிறது.நெருப்பு ஸ்தலமான அண்ணாமலைச் சமமான இத்திருக்கோவில் சவுகார்ப்பேட்டையில் அமைந்திருக்கிறது. ஜீவகாருண்யத்தை நமக்குப் போதித்த ராமலிங்க வள்ளலார் வழிபட்ட ஆலயம் இது. இங்கேபெரிய சிவலிங்கத் திருமேனி அம்பாள் 6 அடி உயரத்தில் அருள்பாலித்து வருகிறார். மேஷ லக்னம் மற்றும் மேஷ ராசி,சிம்ம லக்னம் மற்றும் சிம்ம ராசி,தனுசு லக்னம் மற்றும்தனுசு ராசியில் பிறந்தவர்கள் அடிக்கடி இங்கே வந்து வழிபட அவர்களின் நியாயமானநோக்கங்கள் நிறைவேறும்;தகுந்த ஆன்மீக குருவை அடையலாம்;மற்ற ராசிக்காரர்களும்இங்கே வந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்து வர மிகுந்த ஆன்மீக வளர்ச்சியைப் பெறுவார்கள்.
5 வாயு – காளத்தீசுவரர்,ஞானபிரசன்னாம்பிகை:
சென்னையின் வாயு ஸ்தலமான அருள்நிறை காளத்தீசுவரர்+ஞானபிரசன்னாம்பிகை அம்மன் திருக்கோவில், மிதுன லக்னம் அல்லது மிதுன ராசி,துலாம் லக்னம் அல்லது துலாம் ராசி,கும்ப லக்னம்அல்லது கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சிவகடாட்சம் இங்கே கிடைத்துக் கொண்டேஇருக்கும்;யாரெல்லாம் இங்கே வந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு அல்லது சிவ வழிபாடு செய்து வருகிறார்களோ அவர்களுக்கு சிவகடாட்சமும்,பைரவ கடாட்சமும் எளிதில் கிட்டும்.
The post சென்னையில் அமைந்திருக்கும் பஞ்சபூத ஸ்தலங்கள் appeared first on SWASTHIKTV.COM.