தொழில் பதவி சிறக்க சஸ்திர பந்தம், எப்படி செய்ய வேண்டும்? – ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள் அருளிய சஸ்திர பந்தம் பற்றி பாப்போம்.
தினமும் சஸ்திர பந்த ஸ்லோகத்தை சொல்லி வர வியாபாரம்,தொழில்,பதவி சிறக்கவும்,எதிர்மறை எண்ணங்கள் மறையவும் கவசமாக திகழ்வது சஸ்திர பந்தமாம்.
பக்தியுடன் செய்து பயன் பெருக!
சஸ்திர பந்தம் :
வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா
மாலைபூ ணேமதிற மால் வலர்தே – சாலவ
மாபாசம் போக மதிதேசார் மாபூதம்
வாபாதந் தாவேலவா.
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 27 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 27 முறை பாராயணம் செய்யவும்.
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 27 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 27 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும்.
நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் பஞ்சபூதங்களில் ஒன்றாம் தண்ணீரில் நனைத்து விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.
வேல்வாங்க இயலாதவர்கள் மேற்கண்ட சஸ்திர பந்தம் படத்தை ஸ்டிக்கர் தாளில் அச்சிட்டு தொழில் / வியாபாரம் செய்யும் இடத்தில் ஒட்டிவிடவும். சிறிய அளவில் அச்சிட்டு சட்டைப்பையில் வைத்துக்கொள்ளவும்.
ஐந்து எண்ணெய் ஊற்றி தாமரை தண்டு நூல் போட்டு இரண்டு தீபங்கள் ஏற்றி பாராயணம் செய்யவும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். எங்கு சென்றாலும் பூசை செய்த வேலை கூடவே எடுத்து செல்லாம். முருகன் அருள் கூடவே வந்து நிற்கும்.
தினமும் 27 முறை பாராயணம் செய்யவும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி தொழில், வியாபாரம், பதவி சிறக்கப்பெற்று என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.
The post தொழில் பதவி சிறக்க சஸ்திர பந்தம் appeared first on Swasthiktv.