அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் வர்ணனை கண்டு வருகிறோம்.
இனி : சிருங்கார கோட்டை சந்திர பிம்ப கோட்டைக்கு ஏழாவது யோஜனை தூரத்தில் நான்கு யோஜனை உயரமுள்ள சிருங்கார கோட்டை ஒன்றிருக்கிறது.
அது சிருங்கார அநுராக(சிவப்பு) நிறமான கௌஸ்துப மணிகளால் ஆக்கப்பட்டுள்ளது. அதன் உட்பிரதேசமானது மஹா சிருங்கார பரிகை என்னும் அகழை உடையதாகும்.
அதில் பல்வேறு அழகிய ஆபரணங்களை அணிந்த சக்திகள் ஆயிரக்கணக்கான ஓடங்களில் சஞ்சரித்துக் கொண்டு, அக்கோட்டையை ரக்ஷிக்கும் மன்மதனை உபாசிக்கின்றனர்.
ஸ்ரீலலிதையின் ஆக்ஞைக்கு உட்பட்ட மன்மதன் தனது பாணங்களினால் சகல உலகங்களையும் மோஹிக்க செய்கிறார். இதனால் எவரும் அந்த மஹா பத்மாடவீயின் அருகில் கூட செல்ல சக்தியற்றவர்கள் ஆகின்றனர்.
இயற்கையிலேயே சுத்த சித்தர்களான பிரம்மா, விஷ்ணு, மஹேஸ்வரரும் மன்மதனின் ஆக்ஞையை பெற்றே அங்கு செல்கின்றனர்.
அவர்கள் செல்லும் போது ஸ்ரீலலிதையின் மீது பக்தி நிறைந்தவர்களாகவும், வணக்கம் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.
மஹா பத்மாடவீ வர்ணனை
சிருங்கார கோட்டைக்கு ஏழாவது யோஜனை தூரத்தில் சக்ரராஜம் என்னும் ஸ்ரீசக்கரத்திற்கு மகத்தான ஆலய வடிவமாயுள்ள சிந்தாமணி கிருஹம் இருக்கிறது.
அதன் நடுவிடமானது நாற்புறமும் ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதற்கு மஹா பத்மாடவீ என்று பெயர். இது சகல சௌபாக்கியங்களையும் அளிக்க வல்லது.
ஆங்குள்ள சிருங்கார கோட்டை வரையில் கோபுரங்கள் நிறைந்துள்ளது. இங்ஙனம் நான்கு திக்குகளிலும் சேர்த்து நூறு கோபுரங்களும், 25 கோட்டைகளும் இருக்கின்றன.
மஹா பத்மாடவீ பிரதேசத்தினை பற்றி விவரமாகக் கூறுகிறேன். கவனமாகக் கேட்பீராக!!
எல்லா ரத்னங்களாலும் இழைக்கப்பட்டு ஆறு யோஜனை தூரம் விஸ்தாரமான அப்பத்மாடவீ பிரதேசத்தில் ஸ்தலத் தாமரைகள் இருக்கின்றன.
அவற்றின் தண்டுகள் ஒரு யோஜனை நீளமுள்ளனவாயும், மிருதுவான முட்களுடன் கூடியனவாயும் இருக்கின்றன.
அவற்றின் இலைகள் பத்து பனைமரம் உயரமுள்ளவைகளாகவும், கேஸரங்கள் ஐந்து பனைமரம் உயரமுள்ளவைகளாகவும், கர்ணிகைகள் நூறு முழம் உயரமுள்ளவைகளாகவும், இருக்கிறது.
வெகு கோமளமாகவும், சதா மலர்ந்து அழகு பொருந்தியதாகவும், மனோகரமான நறுமணத்துடன், விசாலமான தளங்கள் உள்ளதாகவும் இருக்கும் தாமரை மலர்கள் எண்ணிறந்தன அங்கே விளங்குகிறன்றன.
தொடரும்…
The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 74) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.