நவராத்திரி சமயங்களிலும்,பண்டிகை காலத்திலும் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் வைத்து கொடுப்பர்.கொடுக்கும் சுமங்கலி முப்பெரும் தேவியரான துர்க்கா,லக்ஷ்மி,சரஸ்வதியாகவும் அதை வாங்கும் சுமங்கலியும் 3தேவியராகவும் இருக்கின்றன. நாம் கொடுக்கும் தாம்பூலத்துடன் மற்ற பொருட்களையும் கொடுப்பது வழக்கம்.அவ்வாறு கொடுக்கும் தேங்காய், மட்டையுடன் இருக்கும் தேங்காயாக கொடுக்க வேண்டும்.இந்த மட்டை தேங்காய்க்குள் ஒரு தத்துவம் அடங்கியுள்ளது.அதாவது நாம் ஆணவம்,மாயை,வன்மம் இவற்றை அகற்ற வேண்டும்.
ஆணவம் மட்டை தேங்காய்,மாயை அதன் நார்,வன்மம் ஓடு இவையெல்லாம் நீக்கினால் தான் வெண்மையான தேங்காய் கிடைக்கும்.கொடுக்கும் சுமங்கலி நாருடன் கூடிய தேங்காயில் மஞ்சள் தடவி பூவை சுற்றி இருகைகளால் வாங்கும் சுமங்கலி பெண்ணுக்கு கொடுக்க வேண்டும்.வாங்கும் சுமங்கலிகள் மடி ஏந்தி வாங்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
கொடுக்கும் சுமங்கலியிடமும்,பெறும் சுமங்கலியிடமும் மூன்று தேவியரும் வாசம் செய்வதால் நாம் நினைக்கும் காரியங்களை,வரங்களை தேவியர் மூவரும் தங்கு தடையின்றி நமக்கு அருள்கின்றன.
தாம்பூலத்தை கொடுப்பதிலும்,வாங்குவதிலும் நன்மையே ஏற்படும்.ஆகையால் நவராத்திரி சமயங்களில் ஒவ்வொரு சுமங்கலி பெண்ணிடமும் அம்பாள் இருக்கிறாள் என்றும்,அம்பாளே பெண் உருவில் வந்து வாங்குகிறாள் என்றும் சொல்கிறார்கள்.ஆகையால் தாம்பூலம் வாங்க கூப்பிட்டால் சந்தோஷமாக வாங்க சென்று நம் கோரிக்கைகளும் நிறைவேற அம்பாளை பிரார்த்திக்க வேண்டும்.
இந்த முறையில் தாம்பூலம் கொடுக்கிற சுமங்கலிகளையும்,வாங்கும் சுமங்கலியும் கடைபிடிக்கும் போது மூன்று தேவியரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த முறையை நானும் தெரிந்து உங்களுக்கும் பகிர்ந்து கொண்டது அம்பாளின் அனுக்கிரகம் என்றே சொல்லலாம்.
நாமும் சந்தோஷமாக இருப்போம்.நம்மை சுற்றி உள்ளவர்களையும் சந்தோஷப்படுத்துவோம்
The post சுமங்கலிகள் எவ்வாறு தாம்பூலம் பெற்று கொள்ள வேண்டும் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.