Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 79)

$
0
0

அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் வர்ணனை கண்டு வருகிறோம்.

இனி : எட்டாவது ஆவரணம் (ஆயுதமண்டலம்)
ஹயக்ரீவர் : ஓ விந்திய மலையின் செருக்கை அடக்கியவரே! வசின்யாதி பிரகாரத்திற்கு மேல் 20 முழம் உயரமும், 1600 முழம் விசாலமும் உடைய அஸ்திர சக்ரம் விளங்குகிறது.

அங்கே பாணாதி அஸ்திரங்களுக்கு அதிஷ்டான தேவதைகள் இருக்கின்றனர்.

ஆதி ஸ்த்ரீயும், ஆதி புருஷனுமாகிய காமேஸ்வரி மற்றும் காமேஸ்வரரின் ஆயுதங்கள் மிக்க பிரகாசத்தோடு அங்கே விளங்குகின்றன.

காமேஸ்வரியின் ஆயுதங்கள் 4, காமேஸ்வரரின் ஆயுதங்கள் 4 என மொத்தம் 8 ஆயுதங்கள் அங்கே பிரகாசிக்கின்றனர்.

பண்டாசுர மஹாயுத்தத்தில் தானவர்களின் ரத்தத்தை பானஞ் செய்து களிப்படைந்து பிரகாசிக்கும் அந்த திவ்யாஸ்திரங்களுக்கு பரிவாரமான ஆயுதங்கள் கோடிக்கணக்காய் இருக்கின்றன.

அந்த கோடிக்கணக்கான பரிவார ஆயுதங்கள் முற்கூறிய பிரதான ஆயுதங்களை சேவிக்கின்றன.
ஓ அகத்தியரே! சஸ்திர பிரகாரத்திற்கு மேலே 20 முழம் உயரமும், 1600 முழம் விசாலமும் உள்ள ஒரு கிருஹம் இருக்கின்றது.

அது நான்கு ஸமயேசிகளின் இருப்பிடமாகும். அவர்களில் மூன்று ஸமயேசிகளுடன் நான்காவது ஸமயேசியாக ஸ்ரீலலிதேஸ்வரியே விளங்குகிறாள். இவளே சகலத்தையும் சிருஷ்டித்த மாதா ஆவாள்.

ஸ்ரீகாமேஸ்வரரின் இடது தொடையில் அமர்ந்துள்ள லலிதாம்பிகை என்னும் ஸ்ரீதேவியானவள் இங்கு இதுவரை கூறப்பட்ட சக்ரேசிகள் மற்றும் யோகினிகளின் பிரசங்கத்திலும் அவர்களை பூர்த்தி செய்பவளாகவும் இருக்கிறாள்.

அஃதெங்ஙனமெனின் ஸமயேசிகளில் நான்காவதாகவும், யோகினி சக்ரேஸ்வரிகளில் ஒன்பதாவதாகவும், நித்யைகளில் பதினாறாவதாகவும் ஸ்ரீதேவி இருக்கிறாள்.
தொடரும்…

The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 79) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>