அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் வர்ணனை கண்டு வருகிறோம்.
இனி : குருமண்டலம்
ஹயக்ரீவர் : ஹே கும்பஸம்பவரே! ஸமயேசிகளின் பிரகாரத்திற்கு மேல் நாதாந்தரமெனும் குருமண்டலம் விளங்குகிறது.
இதுவும் முற்கூறிய பிரகாரங்களை போலவே 20 முழம் உயரமும், 1600 முழம் விசாலமும் உள்ளது. படிக்கட்டுகளால் அலங்கரிக்கப் பெற்றது.
அங்கே பரதேவதையின் யோக சாஸ்திரத்தை நன்கு விருத்தி செய்பவர்களாகவும், லோக ரக்ஷணத்தின் பொருட்டு மஹா காமேஸ்வரரால் சிருஷ்டிக்கப்பட்ட 4 யுகநாதர்கள் இருக்கின்றனர்.
நித்யா மண்டலம்
நாதாந்தர பிரகாரத்திற்கு மேல் 20 முழம் உயரமும், முழம் விசாலமும் உடைய நித்யாந்தரம் என்னும் உத்தமமான பிரகாரம் இருக்கிறது.
அதில் மஹாபல பராக்கிரமம் வாய்ந்த திதி தேவதைகளான 15 சக்திகள் மூவுலகையும் வியாபித்து கொண்டு காலரூபிகளாய் விளங்கி தேவியின் ஆக்ஞையை பரிபாலிக்கின்றனர்.
ஷடங்க தேவிகள்
நித்யாந்தர பிரகாரத்திற்கு மேல் 20 முழம் உயரமும், 1600 முழம் விசாலமும், படிக்கட்டுகளால் அலங்கரிக்கப் பெற்ற அங்கதேவிகளின் பிரகாரம் இருக்கிறது.
அங்கு ஸ்ரீலலிதையின் அங்கங்களை ரக்ஷிக்கும் 6 சக்திகள் அன்னை வசிக்கும் பிந்து பீடத்திற்கு நாற்புறமும் பிரகாசமான சரீரத்துடன் சுற்றி கொண்டிருக்கின்றனர்.
இவர்களே காமேஸ்வரிக்கு மிகவும் சமீபத்தில் இருப்பவர்கள். புத்தழகு வாய்ந்த இவர்கள் எப்போதும் ஊக்கத்துடன் ஆயுதங்களை தரிப்பவர்கள்.
தொடரும்…
The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 80) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.