Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

திருமணத்தில் அருந்ததி பார்ப்பது ஏன்?

$
0
0

 திருமணத்தின் போது திருமணத் தம்பதிகள் அருந்ததி நட்சத்திரத்தைப் பார்ப்பது ஏன் என்பது பற்றி முன்பொரு விளக்கமும் பிரசுரமாகி இருந்தது. அதுபற்றிய அருமையான மற்றுமொரு விளக்கமும் இருக்கிறது. வசிட்ட முனிவரின் மனைவி அருந்ததி மிக அழகானவள். அதனால் அவள் மீது இந்திரனுக்கே கொள்ளை ஆசை இருந்து வந்தது.

 வசிட்ட முனிவர் தினமும் அதிகாலையில் சேவல் கூவும் சத்தத்தினைக் கேட்டு கண் விழித்து எழுந்து ஆற்றங் கரைக்குச் சென்று ஆற்றில் நீராடி தவஞ் செய்வது வழக்கம். இதனை இந்திரன் நன்கு தெரிந்து வைத்திருந்தான். அதனால் ஒருநாள் அதிகாலை இரண்டு மணிக்கு அவன் அவரது பன்னசா லைக்குச் சென்று சேவல் கூவுவது போன்று பலமுறை கூவினான். அதனைக் கேட்ட வசிட்ட முனிவரும் விடிந்து விட்டதாகக் கருதிக் கொண்டு விழித்தெழுந்து ஆற்றங்கரைக்குச் சென்றார்.

 அந்த நேரம் இந்திரன் வசிட்ட முனிவரின் வடிவத்தில் பன்னசாலைக்கு உள்ளே சென்று அருந்ததியை கட்டி அரவணைத்து இன்பம் அனுபவித்தான். அருந்ததியும் கடுகளவேனும் சந்தேகிக்காது அவர் தனது கணவர் தான் என நினைத்துக் கொண்டு ஒத்துழைப்பு நல்கினாள். ஆனால் ஆற்றங்கரைக்குச் சென்ற வசிட்ட முனனிவர் வானத்தில் விடிவெள்ளியைக் காணாததினனால் இன்னும் விடியவில்லை. சேவல் தவறுதலாகக் கூவி விட்டது போலிருக்கிறது என எண்ணிக் கொண்டு நீராடாமல் விரைவாக பன்னசா லைக்குத் திரும்பி வந்தார்.

 வந்த போது அங்கு நடந்த இந்திரனின் திருவிளையாடலைக் கண்டு ஆத்திரமுற்று நீ செய்த பாவத்துக்கு தண்டனையாக “நீ ஒரு ஜோனிக்கு ஆசைப்பட்டதனால் உனது உடல் முழுவதும் ஜோனி ஆகட்டும்” எனச் சாபம் இட்டார். அதனால் அவனது உடல் முழுவதும் ஜோனியாகி விட்டதாம். இதனை அறிவுறுத்தும் வகையிலேயே உடலெல்லாம் ஜோனிகள் இருப்பதைப் போன்ற தோற்றமுடைய முள்முருக்கம் தடியினை திருமணத்தின் போது அரசாணியாக மணவறையின் முன்பாக வைப்பது வழக்கமாகியது. ஜோனியை அம்மணமாகக் காண்பிக்கப்படாது என்பதற்காக முள்முருங்கைத் தடியினை வெள்ளை நிறத் துணியினால் மூடிக் கட்டுவார்கள்.

 அருந்ததி மீதும் ஆத்திரமுற்று நீ கருங்கல்லாகப் போய்விடு எனச் சாபம் போட்டார். அப்போது அருந் ததி மிக்க மனம் வருந்தி சுவாமி நான் நீங்கள் என்று நம்பித் தான் தவறு செய்துவிட்டேன். தெரியா மல் செய்த தவறுக்காக என்னை மன்னித்து விடுங்கள் எனக் கெஞ்சினாள். இல்லை நீ செய்த குற்றம் மன்னிக்க முடியாததாகும் எனக் கூறினார். சரி உங்கள் சாபப்படி நான் கருங்கல்லாகப் போகிறேன். அதிலிருந்து எனக்கு மீட்சி கிடைக்காதா? எனக் கேட்டாள்.

 கருங்கல்லாகப் போகும் உன்மீது யாராவது புண்ணிவானின் பாதம் பட்டால் நீ மீணடும் உனது சுய ரூபத்தினைப் பெறுவாய் என உத்தரவிட்டராராம். அதே போன்று சில காலத்தின் பின்னர் வனவாசத்தை அனுபவித்துக் கொண்டிருந்த இராமபிரான் வனத்தின் ஊடாக நடந்து சென்ற போது வனத்தில் கிடந்த கருங்கல்லின் மீது அவரது பாதம் பட்டதும் அருந்ததி தனது சுயரூபத்தினைப் பெற்றாள். அவளது சோகமான கதையினக் கேட்ட இராமபிரான் குற்றமற்றவளான நீ என்றும் வானத்தில் ஒளி வீசும் நட்சத் திரமாகத் திகழ்வாய் எனக் கூறி ஆசீர்வாதம் வழங்கினாராம்.

 அதனால் தான் திருமணம் செய்யும் தம்பதிகள் கற்பு நெறி தவறாது வாழ வேண்டும் என்பதனை நினைவுறுத்தும் வகையிலேயே இன்றும் அருந்ததி நட்சத்திரத்தினைப் பார்த்து வருகின்றனர்.

 அத்துடன் மணப் பெண் திருமண வைபவத்தின் போது அம்மி மிதிப்பதும் கற்பு நெறி பிறழ்ந்தால் அருந்ததிக்கு ஏற்பட்ட கதி தான் ஏற்படும் என்பதனை நினைவுறுத்துவதற்காகும்.

சொர்க்கவாசல் உருவான கதை

 விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்க முடியாமல் திணறினர் தேவர்கள். அதனால் விஷ்ணுவின் சக்தியால் உருவான இந்த அசுரர்களை விஷ்ணுபகவான் ஒருவரே அடக்க முடியும் என்ற முடிவில் பகவானிடம் தேவர்கள் முறையிட, பெருமாள் மது, கைடபருடன் போர் செய்தார். ஸ்ரீமந் நாராயணனிடம் யுத்தம் செய்ய முடியாமல் அவரிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள். “பகவானே…தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால் எங்களுக்கு நீங்கள் கருனை காட்ட வேண்டும்.” என்ற பணிவாக கூறி வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தையும் பெற்றார்கள் இந்த அசுர சகோதரர்கள்.

 தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று என்னி அசுரர்களாக இருந்தாலும் நல்ல மனதுடன் பெருமாளிடம் வேண்டினர். “எம்பெருமானே…தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் (மனித வடிவம்) தாங்கள் வெளிவரும்போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களுக்கும், அவர்கள் தெரிந்து செய்த பாவங்கள், அறியாமல் செய்த பாவங்கள் யாவும் நீங்கி அவர்களுக்கு முக்தி #அளிக்க வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள்.

 அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி இனிதே நடைபெறுகிறது. இந்த ஏகாதசி நன்னாளில், “ஓம்நமோ நாராயணாய” என்று உச்சரித்து, பெருமாளை தரிசித்து பாவங்கள் நீங்கி, ஸ்ரீமகாலஷ்மியின் அருளையும் பெறுவோம்.
ஸ்ரீராமஜயம்

 அசுரர்களுக்காகத் திறந்த சொர்க்கவாசல் ‘இறைவா! வைகுண்ட ஏகாதசி அன்று உங்களைத் தரிசிக்கும் அனைவருக்கும் மோட்சம் கிடைக்க வேண்டும்’ என்று வேண்டினர். அதனை இறைவனும் ஏற்றுக்கொண்டார் என்று புராணக் கதை ஒன்று சொல்கிறது.

 பிரம்மதேவனை தன்னுடைய நாபிக் கமலத்தில் இருந்து படைத்தார், திருமால். இறைவனின் உடலில் இருந்து வெளிப்பட்டதை நினைத்து, பிரம்மனுக்கு அகங்காரம் ஏற்பட்டது. அதே நேரம், திருமாலின் காதுகளில் இருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டனர். அவர்கள் இருவரும், அகங்காரத்தில் இருந்த பிரம்மனை கொல்ல முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய திருமால், ‘பிரம்மனைக் கொல்ல வேண்டாம். உங்களுக்கு வேண்டிய வரத்தை நான் தருகிறேன்’ என்றார்.

 அதைக் கேட்ட அசுரர்கள் இருவரும், ‘நீ என்ன எங்களுக்கு வரம் கொடுப்பது? நாங்களே உங்களுக்கு வரம் தருகிறோம்’ என்றனர்.

 அவர்களின் அறியாமையை நினைத்து சிரித்த திருமால், ‘சரி! இப்படி அகங்காரம் கொண்ட நீங்கள், என்னால் வதம் செய்யப்பட வேண்டும். அதன் பிறகு ராட்சசர்களாகவே பிறக்க வேண்டும்’ என்றார்.

 அசுரர்கள் திகைத்தனர். தங்களின் அறியாமையை எண்ணி வருந்தினர். ‘இறைவா! எங்களுக்கு இந்த தண்டனை வேண்டாம். உங்களோடு நாங்கள் ஒரு மாத காலம் போரிட வேண்டும். அதன்பிறகு வதம் செய்யப்பட்டு, சித்தியடைய வேண்டும்’ என்று திருமாலை வேண்டினர்.

 அவர்களின் வேண்டுதல்படியே, அசுரர்களிடம் போரிட்ட திருமால், இறுதியில் அவர்களை வதம் செய்தார். வதம் செய்யப்படும்போது, ‘இறைவா! தங்கள் பரம பதத்தில் நாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும்’ என்று அசுரர்கள் இருவரும் வேண்டினர்.

 அதன்படி அவர்கள் இறந்தபிறகு, மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று, வைகுண்டத்தில் வடக்கு வாசலைத் திறந்த திருமால், அதன் வழியாக அவர்களை உள்ளே அனுமதித்தார். அங்கே ஆதிசேஷன் மீது அருள்புரியும் அனந்தனின் திவ்விய மங்கல வடிவைக் கண்டு, அசுரர்கள் இருவரும் ஆனந்தம் அடைந்தனர்.

 பின்னர் தங்களுக்குக் கிடைத்த இந்த பெரும்பேறு, உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்த அவர்கள், ‘இறைவா! வைகுண்ட ஏகாதசி அன்று உங்களைத் தரிசிக்கும் அனைவருக்கும் மோட்சம் கிடைக்க வேண்டும்’ என்று வேண்டினர். அதனை இறைவனும் ஏற்றுக்கொண்டார் என்று புராணக் கதை ஒன்று சொல்கிறது.

 வைகுண்ட ஏகாதசி தினத்தில் இல்லத்தில் விரதம் இருந்து வழிபடுவதுடன், பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், இவ்வுலக வாழ்வு செழிப்படையும். மறுமை வாழ்வும் மகிழ்வும் வகையில் அமையும்…

The post திருமணத்தில் அருந்ததி பார்ப்பது ஏன்? appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


வேலூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு முலாம் பழம் கிலோ ரூ.30 க்கு விற்பனை


வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்


சித்தன் அருள் - 1883 - கேள்விகளுக்கு அகத்தியப் பெருமானின் பதில்கள்!


கார் கவிழ்ந்தது பாண்டி ரவி படுகாயம்


பதினேழு வயதுக் கிராமத்துப் பெண்


கணவன் கண் முன்னே துப்பாக்கி முனையில் மனைவி கூட்டு பலாத்காரம்..!


பட்டைய கிளப்பும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் 2வது டிரைலர்


திருமூலர் அருளிய உயிர்காக்கும் ரகசிய மந்திரம்


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>