சென்னையை அடுத்த புட்லூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம்.இவ்வாலயத்தில் அம்மன் புற்று உருவில் அருள் பாலிக்கிறார் .
அம்மன் உருவான கதை:
ஒரு குடியானவன் செல்வந்தர் ஒருவரிடம் பணம் கடனாகபெற்று அதை திருப்பமுடியாமல் கஷ்ட ஜீவனம் நடத்தி வந்தார். அந்த இரக்கமற்ற செல்வந்தர் அதற்க்கு பதிலாக ஒரு கரடுமுரடான நிலத்தை உழுது செப்பநிடுமாறு அந்த குடியானவனை மிரட்டினார் . அவர் சொல்படி அந்த குடியானவன் நிலத்தை உழுத போது ஓரிடத்திலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. அவ்விடத்தை சுத்தம் செய்து பார்த்த போது அங்கே ஒரு கர்பிணிப்பெண் வடிவில் புற்று ரூபமாக அம்மன் கானக்கிடைக்கப்பெற்றாள். உடனே அவ்வூர்மக்கள் ஒரு கோவிலை எழுப்பி “அங்காளபரமேஸ்வரி” என்ற திருநாமத்துடன் அம்பாளை வழிபடலானார். இதனால் அவ்விடமும் புட்லூர் என்று பெயர் பெற்றது. புற்று அம்மனின் தலைக்குபின்னால் சிவன் லிங்க வடிவிலும் அம்பாள் சிலையும் விநாயகர் சிலையும் பிரதீஷ்டிக்கப்பட்டுள்ளது.
எந்த சக்தி ஸ்தலத்திலும் இல்லாத ஒரு ஆச்சர்யம் இங்கே அமைந்துள்ளது. சிவன் உள்ளே இருப்பதால் சக்தியின் சிம்ம வாகனத்திற்கு பதில் நந்தியை இங்கே காணமுடிகிறது. அம்மனுக்கு இங்கே பக்தர்கள் கொண்டு வரும் மஞ்சளும் குங்குமமும் வளையலும் சாத்தப்படுகிறது. எலுமிச்சையுடன் வேப்பிலையும் சேர்த்து கோர்க்கப்பட்ட மாலை இந்த அம்மனுக்கு மிக விசேஷமாக அணிவிக்கபடுகிறது .அம்மனின் காலடியில் வைத்த எலும்மிச்சை கனியும் வளையல்களும் பிரசாதமாக வழங்கபடுகிறது
குழந்தை பாக்கியம் பெற:
குழந்தை பேறற்ற பெண்கள் இங்கே 9 வாரங்கள் தொடர்ந்து வந்து கோவிலில் நீராடி 11 முறை வெளிப்ரகாரத்தில் அமைந்திருக்கும் புற்றுடன் கூடிய ஸ்தல விருக்க்ஷமான வேப்பமரத்தையும் சேர்த்து சுற்றி வந்து கடைசி சுற்றில் வேப்பமரத்தில் தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் கை மேல் பலனளிப்பாள் இந்த புட்லூரம்மன்..
The post கேட்கும் வரம் தந்து அருளும் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் appeared first on Swasthiktv-Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.