மூலவர்பழனியாண்டவர்தனியாகவேடன்ரூபத்தில்நின்றகோலத்தில்அருள்பாலிக்கிறார். மூலவரைநேருக்குநேராகநின்றுவணங்கினால்வேடனைப்போலவும், வலதுபுறம்நின்றுவணங்கினால்ஆண்வடிவமாகவும், இடதுபுறமாகநின்றுவணங்கினால்பெண்வடிவமாகவும்காட்சிதரும்சிறப்புகளைகொண்டபழனியப்பர்திருக்கோவில்நாமக்கல்மாவட்டம்பேளுக்குறிச்சியில்அமைந்துள்ளது.
மூலவர் : பழனியாண்டவர்.
தீர்த்தம் : யானைப்பாழிதீர்த்தம்.
பழமை : 1000-2000 வருடங்களுக்குமுன்.
ஊர் : பேளுக்குறிச்சி.
மாவட்டம் : நாமக்கல்.
தலவரலாறு :
படைப்புக்குரியமூலமானஓம்என்னும்பிரணவமந்திரத்திற்குரியபொருளைபிரம்மா, விஷ்ணு, சிவன்ஆகியோரிடம்முருகப்பெருமான்கேட்டார். மூவராலும்சரியாகபதில்கூறமுடியவில்லை. இதனால்மூவரையும்தன்கட்டுப்பாட்டுக்குள்அடக்கியமுருகன், பிரம்மசாஸ்தாஎன்னும்பெயருடன்பூலோகம்வந்தார்.
கொல்லிமலைஅடிவாரத்திலுள்ளகூவைமலைஎன்னும்குன்றில்தங்கினார். கூவைஎன்றால்பருந்து. கொல்லிமலையின்மேலிருந்துகூவைமலையைப்பார்த்தால்கழுகுசிறகைவிரித்திருப்பதுபோன்றதோற்றம்இருக்கும். எனவேஇப்பெயர்ஏற்பட்டது.
படைத்தல், காத்தல், அழித்தல்ஆகியமும்மூர்த்திகளுக்குரியதொழில்களையும், முருகப்பெருமான்தன்வசம்எடுத்துக்கொண்டார். பிறவியைத்தருவதற்கும், முடிப்பதற்கும்உரியசகலஅதிகாரமும்இவரிடம்உள்ளது.
தலபெருமை :
சேரமன்னானவல்வில்ஓரிஆட்சிக்குட்பட்டசேந்தமங்கலம், அறப்பள்ளி, சிங்களாந்தபுரம், ராசிபுரம், கல்குறிச்சிஆகியஇடங்களில்சிவாலயமும், பேளுக்குறிச்சியில்முருகன்கோவிலும்கட்டினான்.
முருகப்பெருமான், சிவன்-பார்வதிஅம்சமாகஇருப்பதால்சிவனைகுறிக்கும்வகையில்இங்குள்ளமூலவர்பழனியாண்டவர்மூன்றுபட்டைவடிவில்நெற்றியில்திருநீறும், தியைகுறிக்கும்வகையில்நெற்றியில்பொட்டும்காணப்படுகிறது.
அருணகிரிநாதரால்பாடல்பெற்றதும், அகத்தியர்பூஜித்தபெருமைபெற்றதுமானஇத்தலம்சிறந்தபிரார்த்தனைதலமாகவிளங்குகிறது.
முருகனின்கையில்சேவல் : பத்மாசுரன்முருகனால்வதம்செய்யப்பட்டதும், அவனைமுருகன்சேவலாகவும், மயிலாகவும்மாற்றினார். இந்தச்சேவலைதனதுகையில்வைத்திருக்கிறார். மற்றமுருகன்கோவில்களில்சேவல்சின்னம்கொடியில்இருக்கும். இங்கே, சேவலைமுருகன்கையிலேயேஅடக்கிவைத்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
நோய்தீர்க்கும்தீர்த்தம் : மலையடிவாரத்தில்பாறைகளுக்குஇடையேயானைவடிவிலானவற்றாதசுனைகாணப்படுகிறது. இதையானைப்பாழிதீர்த்தம்என்கின்றனர். இதில்நீராடுவதால், தோல்மற்றும்எலும்புநோய்கள்தீர்வதாகநம்பிக்கை.
இடும்பன்சன்னதி : அகத்தியரின்உத்தரவுப்படிசிவகிரி, திகிரிஎன்னும்மலைகளைஇமயமலையில்இருந்துஒருதண்டத்தின்இருபுறமும்கட்டிதூக்கிவந்தவன்இடும்பன்என்னும்அசுரன். பார்ப்பதற்குஇதுகாவடிபோலஇருக்கும். முருகப்பெருமான்அவனைத்தடுத்துஅந்தமலைகளைத்தனதாக்கிக்கொண்டார்.
காலணிஅணிந்தவர் : முருகப்பெருமான்வேடன்ரூபத்தில்எழுந்தருளியுள்ளார். தலையில்கொண்டையும், வேங்கைமலர்கிரீடமும், கொன்றைமலரும்சூடியுள்ளார். ருத்ராட்சமாலைஅணிந்துள்ளார். காலில்காலணியும், வீரதண்டையும்அணிந்துள்ளார். இடதுகையில்வேலும், இடுப்பில்கத்தியும், வலதுகையில்ஆயுதம்எனப்படும்வஜ்ரவேலும்தாங்கியுள்ளார்.
பிரார்த்தனை :
தோல்மற்றும்எலும்புநோய்கள்குணமாவதற்கும், குழந்தைஇல்லாததம்பதிகளுக்குமகப்பேறுகிடைக்கவும்இங்குள்ளதீர்த்தத்தில்நீராடி, முருகனைவழிபடுகின்றனர். இவர்தன்னைவணங்கும்பக்தர்களின்பிறப்பைவேட்டையாடிமுக்திதருபவராகஉள்ளார்.
The post அருள்மிகு பழனியப்பர் திருக்கோவில், பேளுக்குறிச்சி appeared first on SwasthikTv.