திருவேற்க்காட்டில் கோவில் உருவாவதற்கு முன்பே அங்கு கருமாரியம்மன் நாக வடிவில் பல நூற்றாண்டுகளாக புற்றிற்குள் வாழ்ந்து வந்ததை அவ்வூரின் மூத்த குடிகளின் வாய் வார்த்தைகளின் மூலம் நம்மால் அறியமுடிகிறது. எனினும் நாக வடிவில் இருந்த அம்மன் தன்னைத் தானாக வெளிப்படுதியதை பேராசிரியர் மங்கள முருகேசன் தன்னுடைய நூலில் ஆதாரப்பூர்வமாக பிரசுரமாகியுள்ளார் .
கருமாரி வெளிப்பட்ட கதை :
சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் பூந்தமல்லியை அடுத்த பழந்தண்டலம் என்னும் ஊரில் வயல் வேலைகள் செய்து வாழ்ந்து வந்த அலமேலு அம்மாள் என்னும் ஏழைப்பெண் மூலமாகத்தான் அன்னை கருமாரி முதலில் வெளிப்பட்டாள். அலமேலு அம்மாளை ஒரு கருநாகம் தீண்டி அவர் இறந்துவிட அவரை புதைப்பதற்காக எடுத்து சென்றபோது திடீரென ஒருவர் சாமியாடி அவர் சாகவில்லை கூழை காய்ச்சி அவள் வாயில் ஊற்றுங்கள் என்று சொன்னார். அதன்படியே அம்மக்கள் செய்ய அவர் அடுத்த கணமே உயிர்த்தெழுந்து அருள் வாக்கு சொள்ளதொடன்கினார்.”என் நாதன் இட்டகட்டளைப்படி இன்னும் 21 தலைமுறை நான் இந்த குடும்பத்தாரின் வாரிசுகள் மீதிறங்கி அருள் கூறுவேன் என்றும். தன்னை நாடி வரும் பக்தர்கலுக்கு சாம்பல் அளித்து குறைகளை தீர்த்து வைப்பேன்” என்றுகூறி தன்னை வெளிப்படுத்தினால்.
திருவேற்கட்டில் கோயில் உருவான கதை:
ஒரு சமயம் திருவேற்க்காட்டின் நில உடமையாளர் சித்துக்காடு வையாபுரி முதலியாரின் மனைவி கண்ணம்மாள் நோய்வாய்பட்டு இறக்கும் தருவாயில் இருந்தார். உடனே முதலியார் தன் மனைவியை அலமேலு அம்மாளின் மூன்றாவது தலைமுறையான தம்பு சுவாமியிடம் அழைத்துச்சென்றார் . தம்பு சுவாமி கண்ணம்மாவை பிரம்பால் தொட அவர் குணமடைந்தார்.சாம்பலும் கனியும் பெற்ற அவர் தன் உயிரை காப்பாற்றிய கருமாரிக்கு கோயில் எழுப்ப முன் வந்து தன்னுடைய நிலத்தை தானமாக வழங்கி ஒரு சிறு குடிசை அமைத்தார். பூந்தமல்லி துனைபதிவாளர் அலுவலகத்தில் 1937 ஆம் ஆண்டு இதற்கான பத்திரமும் பதிவு செய்யப்பட்டுள்ளது .
அம்மனுக்கு தை மாதத்தில் 19 நாட்கள் ப்ரமொத்சவமும், தீர்த்தவாரியும் , தெப்ப உற்சவமும் மிகப் பிரசித்தி.
ஆடி மாதத்தில் செவ்வாய் வெள்ளியில் 1008 பால்குட அபிஷேகமும் திருத்தேர் உலாவும், இசை கச்சேரிகளும் சொர்போழிவுமாக ஆனி கடைசி ஞாயிறு முதல் தொடர்ந்து 12 வாரங்கள் அம்மனுக்கு திளைக்க திளைக்க திருவிழா கொண்டாடப்படுகிறது மாசிமகம், நவராத்திரி பௌர்னமி நாட்கலிலும், தமிழ்,ஆங்கில புத்தாண்டு ,பொங்கல், தீபாவளி போன்ற நாட்களில் விசேஷ அபிஷேக ஆராதனைகளும் நடத்தபடுகிறது .மேற்கண்ட நாட்களில் மக்கள் வெள்ளமென திரண்டு வந்து அன்னையின் அருளை பெறுகின்றனர் .
The post கருமாரி உருவான கதை appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.