ராம நாம ரஹஸ்யம்.”ரமயதி இதி ராமஹ” என்பதே ராம நாம விளக்கம் ஆகும்.
அதாவது தன்னை நினைப்பவர்களை ரமிக்க செய்பவன் ,ஆனந்தத்தை அளிப்பவன் என பொருள்.
தன்னை நினௌப்பவர்களுக்கு பிரும்மானந்தத்தை அளிப்பவர் என்பதே ராம நாமத்தின் ரஹஸ்யம்.
ஜெபம் செய்வோருக்கு பிருமானந்தம் தருவதே ராம நாமம்.”
ரமனர்”என்றாலும் ஆனந்தம் தருபவர் என்றே பொருள்.பஹவான் ரமனரை தரிசித்த உடனேயே நாம் பிரும்மானந்தத்தை இப்போதும் உணரலாம்.
அந்த அளவுக்கு அவனைத் தன் கட்டுக்குள் வைத்திருந்ததால்தான் ஸ்ரீகிருஷ்ணருக்கு பிரக்ரஹ: என்றும், மிக்ரஹ: என்றும் திருநாமங்கள் அமைந்தன.
மிக்ரஹ: என்றால் மிகுந்த சாமர்த்தியங்கள் கொண்டவன் என்று அர்த்தம்.
ஆயுதம் ஏந்தாமல் சண்டை செய்தவன் அல்லவா ஸ்ரீகிருஷ்ணன்!!!
அத்தனை வியூகங்களையும் தன் சாதுர்யத்தாலும் சாமர்த்தியத்தாலும் அல்லவா தவிடுபொடியாக்கினான்.
ஆனாலும் என்ன… எத்தனை சாமர்த்தியங்கள் இருந்தாலும், கண்ணனிடம் பொறுமை என்பது துளியும் இல்லை.
எந்நேரமும் பரபரப்புடன் செயல்பட்டுக்கொண்டே இருந்தான் ஸ்ரீகண்ணபிரான்.
ஒரு பக்கம் அர்ஜுனனையும் அவனுடைய சகோதரர்களையும் வழிநடத்திக்கொண்டு, திரௌபதிக்குச் சமாதானங்களைச் சொல்லிக்கொண்டு, தேரைச் செலுத்தியபடியே பீஷ்மாச்சார்யர் முதல் சகலரையும் ஒருகண் பார்த்துக்கொண்டு… என மின்னல் வேகத்தில் செயல்பட்டுக்கொண்டே இருந்தான் பகவான்.
அதனால் ‘வியக்ரஹ:’ என்கிற திருநாமம் அவனுக்கு அமைந்தது.
வியக்ரஹ: என்றால் பொறுமை இல்லாதவன் என்று அர்த்தம்.
ஹரே ராமா!! ஹரே கிருஷ்ணா!!
The post நினைப்பவர்களை ரமிக்க செய்பவன் appeared first on SwasthikTv.