- ஒரு ஞானி தனக்குள் விளையும் சலனங்களை அடக்கி, சபலங்களை விலக்கி மேலே ழுகிறவன் ஞானி. ஞானி பகுத்தறிவின் துணைக் கொண்டு மன அழுக்குகளை அகற்றி, பரிசுத்தனாகிறான்.
- ஆனால் தற்போது தாங்கள் ஞானிகள், ஆன்மீக குருக்கள் எனக்கூறிக் கொள்பவர்கள் எப்படி இருக்கின்றனர் என்பது யாவரும் அறிந்ததே. சொகுசான ஆடம்பர கார் களில் ஊர்வலம் ஏக்கர் கணக்கில் பரப்பளவுள்ள மடங்கள் அதுவும் பொது இடங்களை ஆக்கிரமித்து, வெளிநாட்டு உள்நாட்டு நிதி கள் ” காசு கொடு கடவுளை காட்டுகிறேன்” என்று கூறி ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஹைடெக் சாமியார்கள், நடனத்துடன் கூடிய தியானம் செய்பவர்கள்தான் தங்களை ஞானி என்றும் ஈசனின் தூதன் என்றும் கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றி கொண்டிருக்கின்றனர். உண்மையில் இவர்கள் அனைவருமே ஒரு சாமானியனை விட உலக இச்சைகளில் திளைத்து கொண்டிருக்கின்ற ஏமாற்று
- பித்தர்கள். இத்தகையவர் களின் பின்னால் போனால் போகிறவர்களுக்கு ஈசனருள் கிட்டுமா? கிட்டவே கிட்டாது. மாறாக பாவம்தான் சேரும்.
- ஞானி என்பவன் முதலில் தன்னை முழுமையாக அறிந்து அந்த அறிந்தலை மற்றவர்களுக்கு புகுத்தி அவர்களும் தங்களை தாங்களே அறியுமாறு செய்பவன். ஞானி என்பவன் பாமரன் இடமிருந்து முற்றி லும் வேறுபடுகிறான்.
பாமரனுக்கும் ஞானிக்கும் என்ன வேறுபாடு?
பாமரன் உலகப் பொருள் களை தீண்டுகிறவன், அப் பொருள்களால் தீண்டப் படுகிறவன். ஆனால் ஞானியோ அதைத் தீண்டு வதுமில்லை; அவற்றால் தீண்டப்படுவதுமில்லை. பாமரனின் பார்வை வெளியே நோக்குகிறது. ஞானியின் பார்வையோ உள்நோக்குகிறது. பாமரன் மரணம் பற்றிய கலக்கம் உடையவன். ஞானியோ மரணம் பற்றியோ வேறு எதைப்பற்றியோ கவலைப் படாதவன். ஞானி பேதங்களற்றவன்.ஞானி ஆர்பரிக்காத கடல்; அசைவற்றிருக்கும் மலை; அசுத்தமில்லாத வானம். ஒன்றில் பலதை காண்பான்;
பலதும் ஒன்றென உணர்வான். இருட்டிலும்
ஒளியை காண்பவன் ஞானி. ஞானி தனது வாழ்வில் எதிலும் பற்றற்று தாமரை இலைத் தண்ணீர்போல உலகியலில் ஒட்டாமல் வாழ்கிறான். உடலும் உள்ள மும் புலன்களும் ஆகியவற் றில் தூய்மையுடையவன். உலக உயிர்களி டத்தில் பேதம் பார்க்காதவன். ஞானி ஈசனைத் தவிர வேறு எதை யும் பாராதவன்.
உலகை இயக்குகிறது பரமாத்மா, உடலை இயக்கு கிறது சீவாத்மா. பரமாத்மாவை பிரம்மம் என்பர் ஞானிகள். பூர்ணம் என்பர் சித்தர்கள். பரமாத்மா
அழிவற்றது. மேலும தன் முழுமை நிலையை பரம்பொருள் இழப்பதில்லை. ஞானி என்பவன் அந்த பரம்பொருளைஅறிகிறான்.மாயையையும் அறிகிறான். அந்த மாயையையில் இருந்து விடுபட்டு பரம் பொருளை அடைகிறான். உண்மையான ஞானி எல்லா வித சுக துக்கங்களுக்கும் அப்பாற்பட்டவன். தான் காண்கின்ற அனைத்திலும் பரம் பொருளான ஈசனைத் தவிர வேறு எதையும் காண்ப தில்லை. உண்மையான ஞானி தான் ஞானி என்பதை வெளிப்படுத்த மாட்டான். ஆனால் தான்தான் ஞானி, கடவுளின் தூதன் எனக் கூறித்திரியும் போலி களை இனங்கண்டு அவர்களை ஒதுக்கிவிட்டு உண்மையான ஞானியை நாம் உணர்ந்து அவனடியை பின்பற்றி எல்லாம்வல்ல ஈசனடியை அடைவோம்.
ஓம்நமச்சிவாய திருச்சிற்றம்பலம்
The post உண்மையான ஞானி யார்? appeared first on SwasthikTv.