சென்னை: மூட்டுவலிகள்,இன்று எல்லோருடைய வீட்டிலும் பொதுவாக சொல்லக்கூடிய ஒருபிரச்னையாக உள்ளது. ஒரு காலத்தில் வயதான பெரியவர்களுக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சனை இன்று வயது வித்தியாசம் இல்லாமல் இளம் வயதினருக்கும் ஏற்படக்கூடியதாக உள்ளது.இந்த மூட்டு வலிகள் எதனால் ஏற்படுகிறது மற்றும் இந்த மூட்டு வலிகளுக்கான குறிகள் என்ன?எந்த வகையான இயற்கை சிகிட்சையில் இந்த மூட்டுவலிகள் வேகமாக மற்றும் நிரந்தரமாக குணமாகின்றன என்பதை விவரமாக இந்த தொடரில் பார்க்கலாம்.
முதியவர்களை அதிகமாக பாதிக்கும் ஆஸ்டியோ ஆர்த்ரைடீஸ் எனப்படும் சந்திவாதம்.
மூட்டுகளில் உள்ள எண்ணெய் பசை குறைவினால் வரக்கூடியது. முழங்காலில் உள்ள இணைப்பிலும், எலும்புகளுக்கிடையிலும் ஒரு வித ஜவ்வு இருக்கும். இதற்கு கார்டிலேஜ் என்று பெயர். இந்த ஜவ்வு தான் முழங்கால் மூட்டு தேய்ந்து போகாமல் பாதுகாக்கிறது. முழங்கால்மூட்டும், எலும்பும் ஒன்றோடொன்று ஊராய்ந்து போகாமல், எளிதில் அசைவதற்கு ஜவ்வு அவசியம். ஒருவேளை இந்த ஜவ்வு தேய்ந்து போகும் போது தான் வலி உண்டாகிறது.நன்கு உறுதியான மேற்புறமுள்ள இணக்கமானசவ்வு (முழங்கால் மூட்டு இணைப்பின் மீது மிருதுவாக இந்த திசுஇருக்கிறது) கிழிந்து விடுதல் மற்றும் நீங்கி விடுவதன் மூலமாக எலும்புகள் சொரசொரப்புடன் ஒன்றுடன் ஒன்று நேரிடையாக உராய்வதால் வலி மற்றும் வீக்கம் ஆகியவை ஏற்படுகிறது
பொதுவாக 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வரலாம் .எந்த விதமான காரணமும் இல்லாமலும் வயதின் காரணமாகவும் வரலாம். அதிகமாக வாகனம் ஓட்டுவதாலோ, ஹார்மோன்கோளாறுகளாலோ, பெண்களுக்கு கர்ப்பபை எடுத்தால் எஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் குறையும். மாதவிடாய் நின்ற பின்னும் இந்த எஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் குறைந்துவிடும். இது எலும்பில் கால்சியம் சத்தை தக்க வைத்துக் கொள்வதில் பிரச்சினை உண்டு பண்ணி எலும்பை வலுவிக்க வைக்கும் வியாதியான osteoporosis (கடல் காற்றில பக்கத்தில் இருக்கிற இரும்புத் தகரம் தானாக அரிக்கப்பட்டு ஓட்டை விழுகிற மாதிரி பெரிய எலும்புகளில் கண்ணுக்குத் தெரியாத ஓட்டைகளை உண்டு பண்ணும்) உருவாக காரணமாக அமைந்துவிடும்.
அதிக எடை போட்டாலும் (குண்டாக) இது சீக்கிரமாக வரலாம். நடக்கும் போது கூட வலி ஏற்படலாம். இந்த நோய்எந்த மூட்டில் வேண்டுமானாலும் வரலாம். உடல் எடையை தாங்கக் கூடிய மூட்டுகள் அதிகமாக பாதிக்கப்படும். படிக்கட்டில் ஏறும் போது இந்த நோயாளிகள்அதிகமாக சிரமத்தை உணர்வார்கள்.
Rhematioid Arhtritis – முடக்குவாதம் என்னும் –ஆமவாதம்
20 வயது முதல் 50 வயது உள்ளவர்களுக்கு வரலாம். பெரும்பாலும் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.தூங்கி எழுந்தவுடன் மூட்டுகளில் இறுக்கமும் – வலியும் கூடுதல் தெரியும். இது வாதநீரில் ஒரு வகையும்ணு கூட சொல்லலாம். குளிர்ந்த நேரங்களில் அதிகவலி தெரியும். பொதுவாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகள் பாதிக்கப்படுகிறது. கை மூட்டுகளை, கால்கள் என்றால் இரண்டு கால் மூட்டும் பாதிக்கப்படுகிறது. (Symmetrical Arthritis) – RA Factor – Positive ஆகரத்தப் பரிசோதனையில் தெரியும்.பரம்பரையாகவும், அடிபடுவதாலுமம், மன உளைச்சலாலும் கூட இது வரலாம். மூட்டுகளை தவிரநுரையீரல், இருதயம், கண்களைக்கூட இது பாதிக்கும். வயிற்றுக்கோளாறுகள் பிற்காலங்களில் ஏற்படலாம். தோள்பட்டைவலியும், கால்மூட்டுவலியும், மூட்டுகளின் அமைப்பும்மாறி விடலாம். விரல்கள்வாத்துகழுத்துப்போலவும், கட்டைவிரல் ‘Z’ போலவும்மாறிவிடலாம்.
குழந்தைகளுக்கும்சிறுவர்களுக்கும்வரக்கூடிய மூட்டுவியாதி
16 வயதுக்கும் குறைவாக இருப்பவர்களைதாக்கும் ஒரு மூட்டோ அல்லது பல மூட்டுகளோ பாதிக்கப்பட்டிருக்கலாம். வலியும், மூட்டுகளின் இயக்கமும் குறையலாம். மூட்டுகள் சூடாகவும் இருக்கும். சுரத்தினாலோ, அடிபட்டதினாலோ, காசநோய், பொன்னுக்குவீங்கி, ஜெர்மன் அம்மை நோய்கள் வந்த குழந்தைகளுக்கும் இது வரலாம். 6 வாரத்திலிருந்து 3 மாதம் வரை இருக்கலாம். மூட்டுவலியும், கல்லீரல்வீக்கமும், விட்டுவிட்டு வரும். இந்நோயை நிர்ணயம் செய்து தகுந்த மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்தாவிட்டால் மூட்டு வலியும், மூட்டு வேலை செய்யாமல் போவதையும் தடுக்க முடியாது. அதனால் 5 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்கள் ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ் பாக்டீரியாவினால் தொண்டை அலர்ஜி ஏற்பட்டுருமாட்டிக் சுரத்தினால் பாதிக்கப்படுகிறார்கள். இதனையும். ஆரம்பத்தில் கண்டுபிடித்து சிகிச்சைஅளிப்பது மிகவும் முக்கியம்.
Gout arthritis –முட்டுகளில் உப்புநீரால் உண்டாகும் மூட்டுவலி – வாதரக்தம்
மூட்டுவலி யூரிக் அமிலபடிவுகள் மூட்டுகளின் உள்ளேயும், வெளியேயும் படிவதினால் ஏற்படுகிறது. 70 சதவிகிதம் யூரிக் அமிலம் சிறுநீர் மூலமும், செரிமான உறுப்புகள் மூலமும் வெளியேற்றப்படுகிறது. அதிகமாக வெளியேற்றப்படாமல் இருக்கும் போது வாதரக்தம் ஏற்பட்டுவிடுகிறது. அடிபடுவதினாலோ, அதிக மது அருந்துவதாலோ நிறைய அசைவ உணவுவகைகள் சாப்பிடுவதாலோ, இனிப்பு ரொட்டிகள் சாப்பிடுவதாலோ, காளாண்களை உண்ணுவதாலோ, காலி பிளவர்களை சாப்பிடுவதால் கூட உண்டாகலாம், எடை அதிகரிப்பு, பரம்பரை, சுற்றுப்புற சூழ்நிலைகள் முதலியவையும் இதனை உண்டாக்கலாம்.
பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் போது 40-50 வயது வரை உள்ளவர்களுக்கும் அதிகம் வாய்ப்புண்டு என்றாலும், எந்த வயதிலும் இது ஏற்படலாம். இது ஆண்களை அதிகமாகபாதிக்கிறது. சிறிய மூட்டுகள் முதற்கொண்டு பெரிய மூட்டுகள் வரை எல்லாமும் இதனால் பாதிக்கப்படலாம். இதற்காக கொடுக்கப்படும் ஆங்கில மருந்துகள் சமயங்களில் சுத்தமாக பலனளிக்காமல் போகின்றது. உணவுகட்டுப்பாடு இல்லாமல் எந்த மருந்தும் உதவாது. மூட்டுகளில்அதிக வீக்கமும் இருக்கும். பாராதைராய்டு சுரப்பிகள் அதிக வேலையும், தைராய்டு சுரப்பிகளின் குறைவான வேலையும் இதற்கு காரணமாக அமையலாம்.
தொற்று கிருமிகளால் வரும் மூட்டுவலி (Infective Arthritis)
பாக்டீரியா, வைரஸ், கொனோரியா ,சிபிலீஸ், எயிட்ஸ் போன்ற பல வியாதிகளும், சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களாலும் இந்த மூட்டுவலி உருவாகலாம். மூட்டு வலியும் வீக்கமும் மூட்டைச் சுற்றி சி வந்து காணப்படும். காய்ச்சல், குளிர், பொதுவான உடல் சோர்வு,வலி தோன்றும்
நிவாரணி பொருட்கள் பயன்படுத்துபவர்கள் , சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்கள், சில வகை புற்றுநோய் உள்ளவர்களும் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.
பொன்னுக்கு வீங்கி, ஜெர்மன் ,மணல்வாரிஅம்மை. Hepatitis – B வைரஸ் போன்றவைகளாலும் பாதிக்கப்படும் போது இந்நோய் மூட்டுகளில் வலிகளை உண்டாக்கி பிறகு மூலகாரணமான தொற்று நோய் குணமாகும் போது இதுவும் தானாகவே குணமாகிறது.
SLE (Systemic Lupus Erythematosus)
நோய் கிருமிகளும் மூட்டு வலிக்கு காரணமாகலாம். பெண்களை இது அதிகம் பாதிக்கும். தோல், மூட்டுகள், சிறுநீரகம், முதலியவை இதனால் பாதிக்கப்படுகிறது. பல மூட்டுகளும் பாதிப்படையலாம். முகத்தில் வண்ணத்துப்பூச்சி போன்ற தழும்பு ஏற்படலாம். வெயில் அலர்ஜி, வாய் புண்ணும் இதில் வரவாய்ப்புண்டு.
Ankylosing Spondylosis –தனுர்வாதம்
HLA-B 27இ என்ற ரத்தப்பரிசோதனை மூலம் கண்டுபிடித்து உறுதி செய்யப்படும் இந்த நோய் முதுகுவலி, கழுத்து வலியில் ஆரம்பிக்கும். இந்த நோய் முதுகெலும்பில் நடுவிலே இருக்கும் மிக மெல்லிய சவ்வு போன்ற Disc எனப்படும் தட்டுப் போன்ற Shock Observer போல வேலை செய்யும் அமைப்பை கெடுத்து தடிமனாகி Disc – சவ்வு கடினமாகி ஒன்றுமேல் ஒட்டிக்கொண்டு திரும்ப இயலாத அளவுக்கு சிரமத்தை கொடுக்கும் பயங்கரமான வியாதி இது.
அடுத்து – பொதுவாக மூட்டு வலி ஏற்பட காரணம் என்ன ? – தொடரும்……
You Can Write to Dr.Gowthaman at drkgowthaman@gmail.com
You can Mail Your Feedback at editor@swasthiktv.com
The post மூட்டு வலிகளுக்கு ஆயுர்வேத மருத்துவம் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.