தேவையானவை
முருங்கைக்கீரை – 1 கப் ராகி மாவு – 2 கப் தோசை மாவு – 1 கரண்டி மிளகு தூள் – ½ டீஸ்பூன் தேங்காய்த் துருவல் – 3 டேபிள் ஸ்பூன் கேரட் துருவல் – 2 டேபிள் ஸ்பூன் உப்பு, எண்ணெய் – சிறிதளவு.
செய்முறை
முருங்கைக்கீரை சுத்தம் செய்து நன்கு அலசவும். லேசாக எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் எண்ணெயை தவிர அனைத்தையும் கொட்டி கெட்டியான மாவு பதத்துக்குத் தயாரிக்கவும். சூடான தவாவில் அடைகளாக தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வேக விடவேண்டும். இதற்கு தேங்காய் சட்னி, வெங்காய சட்னி நன்றாக இருக்கும்.
பலன்கள்
இரும்புச்சத்து உள்ளது. ரத்தசோகை நீங்கும். எலும்பு, பல் வளர்ச்சிக்கு உதவும். சருமத்துக்கு நல்லது. பார்வைத்திறன் மேம்படும். இதையும் படிக்க: குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் விதவிதமான துவையல் ரெசிபி ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
The post ராகி கீரை அடை appeared first on SwasthikTv.