சிலருக்கு ஜாதகத்தில் புத்திர தோஷம் ஏற்பட்டு குழந்தை பிறக்காத நிலை உண்டாகிறது. குருபகவானால் ஏற்படும் இந்த புத்திர தோஷத்தை போக்குவதற்கான எளிய பரிகார முறையை பார்க்கலாம்.
குருபகவான்ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் லக்னத்திற்கு 5 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பாரேயானால் அந்த ஜாதகருக்கு குரு பகவானால் புத்திர தோஷம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஜாதகத்தில் குரு பகவானால் புத்திர தோஷம் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்த பிறகு கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தைச் செய்து குரு பகவானால் ஏற்பட்டிருக்கும் புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் பெறலாம்.
27 வெள்ளை கொண்டை கடலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை ஒன்பது மஞ்சள் துணியில், துணிக்கு 3 கொண்டை கடலைகளை போட்டு ஒன்பது கடலை முடிப்புகளை முடிந்து கொண்டு உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்து விட வேண்டும்.அத்துடன் பிரார்த்தனை நிறைவேறினால் குலதெய்வத்திற்கு செலுத்த வேண்டிய காணிக்கையையும் எடுத்து வைத்து விட வேண்டும்.
பூஜையறையில் இருக்கும் 9 முடிப்புகளில் ஒரு முடிப்பை இரவில் கணவன் – மனைவி இருவரும் தங்கள் படுக்கையில், இருவருக்கும் சேர்த்து ஒரே தலையணைக்கு அடியில் வைத்து கொண்டு உறங்க வேண்டும். மறுநாள் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் மனைவி கை, கால், முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைத்த அந்த துணி முடிப்பை கையில் வைத்துக் கொண்டு, குரு பகவானை மனதில் நினைத்து குரு பகவானே எங்களுக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டும் என ஒன்பது முறை மனதார துதித்து வழிபட வேண்டும்.
இப்படி வழிபட்டு முடிந்ததும் அந்த முடிச்சை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும். இதே போல் மீதமுள்ள முடிச்சுகளை வைத்து ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்ய வேண்டும். பத்தாவது நாள் காலையில் கணவன் – மனைவி ஆகிய இருவரும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, ஒன்பது கொண்டை கடலைகள் முடிந்த துணி பொட்டலங்களையும் எடுத்துக் கொண்டு, ஓடும் ஆற்று நீர் அல்லது கண்மாயில் யாரும் பார்க்காத போது போட்டு விட்டு வர வேண்டும். இப்படி செய்வதால் அவர்களுக்கு குரு கிரகத்தால் ஏற்பட்டிருக்கும் புத்திர தோஷம் நீங்குகிறது. இந்தப் பரிகாரம் செய்த 45 நாட்களுக்கு பிறகு புத்திர தோஷம் நீங்கி மனைவி வயிற்றில் கரு உருவாக குரு பகவான் அருள் புரிவார்.
The post புத்திர தோஷம் நீங்கி குழந்தை பிறக்க பரிகாரம் appeared first on SwasthikTv.