ஈசன் தன்னிலிருந்து வேறானவன் என்று ஆன்மீகவாதிகள் அவனை புறத்தில் தேடுகின்றனர். அவ்விறைவனை புறத்தில் கண்டுபிடித்ததாக கருதி அவனுக்கு கற்சிலை செய் கின்றனர். அதுபோக ஐம்பொன்னால் திருமேனி வடிக்க தங்கத்தை வழங்கு கின்றனர். ஆனால் கொடை கொடுத்த தங்கமும் பொருட் களும் ஆலய காப்பாளர் களால் திருடு போகிறது; ஆனாலும் இறைவனான ஈசன் திருடு போவதில்லை. ஏனெனில் திருடு போகும் இடத்தில் ஈசன் இல்லை. அவனை திருட யாராலும் இயலாது. மேலும் அவனை திருட எந்த திருடனும் பிறப்பெடுத்த தில்லை. இறைவனான ஈசன் எங்கே உள்ளார் என்பதை திருமூலர் எவ்வளவு அழகாக தனது திருமந்திரத்தில் கூறுகிறார் பாருங்கள்.
“தான்என்று அவன்என்று
இரண்டாகும் தத்துவம்;
தான்என்று அவன்என்று
இரண்டும் தனில்கண்டு,
தான்என்ற பூவை அவன்அடி
சாத்தினால்
நான்என்று அவன்என்கை
நல்லதொன்று அன்றே “
பக்தர்களே! இறைவனான ஈசன் வெளியே இருப்ப தாக கருதவேண்டாம்.
தன்னிலேயே இறைவன் உள்ளான். ஈசனின் பக்தனின் உள்ளத்திலேயே
ஈசன் இருக்கிறான். பக்தனின் உள்ளத்தில் உள்ள ஈசனை யாரும் திருட இயலாது; அவனுக்கு நாம் போடும் பக்தி எனும் ஐம் பொன்களையும் பொருள் களையும் யாராலும் திருட முடியாது என்கிறார் திருமூலர்.
இதையே மாணிக்கவாசகர் திருவாசகத்தில்
“வான் கெட்டாலும் தான் கெடாத
தலைவனுக்கு என்னையே நான் படைத்துக் கொண்ட போது, ஊன் கெட்டேன்; உணர்வு கெட்டேன்; உணர்வுக்கு ஊற்றான உள்ளம் கெட்டேன்; அனைத்துக்கும் தளமான நான் கெட்டேன்.” என்கிறார்.
வெங்காயத்தை முழுவதும் உரித்தவுடன் வெங்காயம் இருப்பதில்லை;உரித்தவன் மட்டும் இருப்பதைப் போல, தன்னை மறந்து தலைவன் தாளைத் தலைப்பட்டுவிட்ட பிறகு, தான் இல்லை; ஈசனே இருக்கிறான். ஆக ஈசனின் திருமேனியே உருவமாக வும் அருவமாகவும் உள்ளது. அனைத்துலகிலும் இயங்கு கின்ற அனைத்தும் சிவசக்திதான்.
பார்க்கின்ற வெளியெல்லாம் தில்லை அம்பலம்தான். ஆகவே பார்க்கும் இடமெல்லாம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரி
பூரண ஆனந்த சிவபெருமானை உள்ளத்
தூய்மையுடன் மனமுருகி வணங்கி அவனருளைப் பெறுவோம்.
ஓம்நமச்சிவாய! சிவாயநம! திருச்சிற்றம்பலம்!
The post அகத்தில் இருக்கும் ஈசன் appeared first on SwasthikTv.