சம்பா கோதுமை – 100 கிராம்
சீனி – 200 கிராம்
நெய் – 125 கிராம் / தேவைக்கு
செய்முறை:
1. சம்பா கோதுமையை ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
2. மறுநாள் அந்த தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்க வேண்டும்.
3. பின் வடிகட்டி வைத்து வடித்து பால் பிழிந்து எடுக்க வேண்டும்.
4. தேவைபட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீதம் இருக்கும் பாலையும் பிழிந்து எடுத்துக் கொள்ளலாம்.
5. அந்த கோதுமையை நச்சுப் பார்த்தால், நார் மாதிரி ஒட்டாமல் வரும். அப்படி வந்தால் பால் முழுவதும் பிழிந்தாச்சு என்று அர்த்தம்.
6. கோதுமை பாலை 2 மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விட வேண்டும்.
7. 2 மணி நேரம் கழித்துப் பார்த்தால் கட்டிப் பால் கீழேயும் தண்ணீர் மேலேயும் இருக்கும்.
8. அந்த தண்ணீரை கீழே ஊற்றி விடவும்.
9. கட்டிப் பாலை அளந்துப் பார்த்தால் 1 கிளாஸ் வரும்.
10. பேனை எடுத்து, 1 கிளாஸ் பாலுக்கு 3 கிளாஸ் தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
11. 20 நிமிடங்கள் கழித்து 2tsp சீனியை மட்டும் தனியாக எடுத்து விட்டு, மீதம் உள்ள சீனியை சேர்க்கவும்.
12. சீனி நன்கு கரைந்து திக்காக வரும் பொழுது, மற்றொரு பேனை எடுத்து சூடு செய்து, தனியாக எடுத்து வைத்த 2tsp சீனி சேர்த்து கோல்டன் பிரௌன் கலர் வரும் வரை கேரமலைஸ் செய்து பாலுடன் சேர்க்க வேண்டும்.
13. பின் இதனுடன் நெய் சேர்த்து கிளரவும்.
14. சிறிது சிறிதாக நெய் சேர்த்து, மீடியம் தணலில் கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
15. ஹல்வா ஓரங்களில் ஒட்டாமல் நெய் விட்டு பேனின் நடுவில் வரும். இதுவே சரியான பதம்.
16. நெய் ஹல்வாவின் மீது பளபளப்பாக தெரியும். அந்த சமயத்தில் அடுப்பை அணைத்து பேனை இறக்கி விடவும்.
அட்டகாசமான சுவையில் திருநெல்வேலி ஹல்வா வீட்டிலேயே தயார்.
The post திருநெல்வேலி ஹல்வா appeared first on SwasthikTv.