Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

கன்னி ராசிக்காரர்களின் திருமண யோகம்

$
0
0

கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பகவான் நான்காம் இடத்துக்கு வந்துள்ளார். கன்னி ராசிக்காரர்களுக்கு தற்போதைய குரு பெயர்ச்சி படி சற்று அலைச்சலுக்கு பிறகு சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறும்.

கன்னி ராசிகன்னி ராசிக்காரர்களுக்கு குரு பகவான் நான்காம் இடத்துக்கு வந்துள்ளார். நான்காம் இடம் என்பது சுக ஸ்தானமாகும். என்றாலும் கன்னி ராசிக்காரர்களுக்கு தற்போதைய குரு பெயர்ச்சி படி சற்று அலைச்சலுக்கு பிறகு சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறும். பயணங்கள் அதிகமாக இருக்கும். அதை கருத்தில் கொள்ளாமல் சென்று வந்தால் குடும்பத்தில் சுப காரியத்தை திட்டமிட்டபடி நடத்தி விடலாம்.

கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பார்வை எட்டாம் இடத்தில் வருகிறது. எட்டாம் இடம் என்பது விரைய ஸ்தானமாகும். ஆனால் சுப காரியங்களுக்கான சுப செலவுகளாக அவை அமையும். அதற்கேற்ப குருவின் உதவியால் வருமானம் அதிகரிக்கும். இந்த கால கட்டத்தில் குரு வின் நல்ல பலன்களை பெற விரும்பும் கன்னி ராசிக்காரர்கள் தானங்கள் செய்ய வேண்டும். முடிந்த அளவுக்கு அன்னதானம் செய்யுங் கள். அமாவாசை தினத்தன்று அன்னதானம் செய்வது மிக மிக நல்லது.

மேலும் கன்னி ராசிக்காரர்கள் நினைத் ததையெல்லாம் பெறுவதற்கு அங்காள பரமேஸ்வரி துணை நிற்பாள். எனவே அங்காள பரமேஸ்வரியை மறக்காமல் வழிபடுங்கள். மேல்மலையனூர் தலத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரிக்கு அபிஷேகங்கள் செய்து ஆராதனைகள் நடத்தினால் உடனே சுப காரியங்கள் கைகூடும்.

திருமண வயதில் உள்ள ஆண்கள்&பெண்கள் குடும்பத்தில் வீண் விவாதத்தை தவிர்ப்பது நல்லது. சில சமயம் வீண் விவாதங்கள் சுப காரியங்களுக்கு எதிராக அமைந்து விடக்கூடும். எனவே தேவையில்லாததை பேசக்கூடாது. சிலருக்கு புதிய நபர்களால் பண வரவு கிடைக்கக் கூடும். குரு பகவான் கன்னி ராசியில் எட்டாம் வீட்டை பார்ப்பதால் கொடுத்த கடன்கள் திரும்ப வசூலாகும். வாரிசுகளின் திருமண பேச்சுகளும் முழுமையான வெற்றியை கொடுக்கும். எட்டாம் வீட்டு பார்வைபடி சுப காரியங்களுக்கு தேவையான ஆபரண சேர்க்கையும் உண்டாகும். 12&ம் இடத்து பார்வையால் சுப செலவுகள் அதிகரிக்கும்.

சில கன்னி ராசிக்காரர்களுக்கு சுப காரிய பேச்சுகளில் தாமதம் ஏற்படலாம். அத்தகைய நிலையில் இருப்பவர்கள் சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்கு சென்று வழிபட வேண்டும். அந்த வழிபாடு அனைத்து தடைகளையும் நீக்கி சுப காரியங்களுக்கு வழிவகுக்கும்.

20.3.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 5&ம் இடமான மகர ராசியில் வக்கிரமாகி அமர்கிறார். இந்த அமைப்பு தடை பட்ட திருமணத்தை கைகூட செய்யும். குரு பகவான் பூராடம் நட்சத்திரத்துக்கு வரும்போது மட்டும் சற்று கவனம் தேவை. அந்த சமயத்தில் அனைவரிடமும் என்ன பிரச்சினையாக இருந்தாலும் வளைந்து கொடுத்து விடுங்கள்.

நிதானமாக செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம். எனவே கன்னி ராசிக்காரர்கள் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் அதிக பொறுமையை கடைபிடிக்க வேண்டும். வாய்ப்பு இருப்பவர்கள் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகில் உள்ள திருப்பாற்கடல் ஸ்ரீகடல்மகள் நாச்சியார் சமேத ஸ்ரீரங்கநாதரை புதன்கிழமை தோறும் வழிபட வேண்டும். இதனால் நல்ல சிந்தனை உண்டாகும்.

குருபகவான் மகர ராசியில் வக்கிரமாகும் போது திருமண ஏற்பாடுகள் அனைத்தும் வெற்றிபெறும். இந்த நிலையில் உள்ள பெண்கள் திரு மண விசயத்தில் பெற்றோர்க ளின் முடிவை ஏற்பது நல்லது. சென்னையில் இருப்பவர்கள் குன்றத் தூரில் உள்ள திரு ஊரகப்பெருமாளை வழி பட்டால் திருமணத் தடைகள் அனைத்தும் விலகும். அதோடு சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கும்போது மனதில் துணிச்சலும் தைரியமும் உண்டாகும்.
சனி பகவானுடன் கேது இருக்கிற நிலையில் குருபகவானும் சேர இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். இந்த பலனை பெற செவ்வாய்க் கிழமைகளில் அருகில் உள்ள முருகன் ஆலயத்துக்கு சென்று வழிபட வேண்டும்.

கன்னிராசியில் உத்திரம் (2,3,4&ம் பாதம்), ஹஸ்தம், சித்திரை(1-ம் பாதம்) ஆகிய 3 நட்சத்திரங்கள் உள்ளன. உத்திரம் நட்சத் திரத்துக்காரர்கள் திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையார், உண்ணாமலையம்மனை தரிசித்து வர வேண்டும். ஹஸ்தம் நட்சத்திரகாரர்கள் திருச்சி அருகே உள்ள திருவானைக்காவலுக்கு சென்று வழிபட வேண்டும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிங்கிரிகுடியில் உள்ள லட்சுமிநரசிம்மருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட வேண்டும். இதனால் சுபகாரிய விஷயங்களில் நினைத்தது நடக்கும். உக்கிர தோற்றத்தில் நரசிம்மர் காட்சியளிக்கும் இடங்களில் ஒன்றுதான் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் இந்த ஆலயத்தில் உக்கிர தோற்றத்தில் நரசிம்மர் மேற்கு திசை பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார். அவர் வீற்றிருக்கும் கருவறை விமானம், பாவன விமானம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த நரசிம்மர் 16 கரங்களுடன் காட்சி தருகிறார். இரண்டு கரங்கள் இரண்யகசிபுவின் உடலை கிழித்த படியும், மற்ற கரங்களில் பதாககிஸ்தம், ப்ரயோக சக்கரம், ஷீரிகா எனும் குத்துக்கத்தி, காணம், ராட்சசனின் தலையை அறுத்தல், கத்தியால் அசுரன் ஒருவனைக் கொல்லுதல், இரண்யனின் காலை அழுத்தி பிடித்தல், சங்கம், வில், கதை, கேடயம், வெட்டப்பட்ட தலை, இரண்யனின் தலையை அழுத்திப் பிடித்திருப்பது, குடலைக் கிழிப்பது என்று காட்சி தருகிறார்.

மூலவருக்கு கீழே இடது புறம் சுக்ரர், வசிஷ்டர், பிரகலாதன், நீலாவதி ஆகியோர் உள்ளனர். இங்கே இருக்கும் உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார். அவரது பெயராலேயே இத்திருக் கோவில் விளங்குகிறது. நரசிம்ம அனுஷ்டிப்பு மந்திரத்தில் உள்ள எழுத்துகளை கொண்டு இந்தக் கோவில் விளங்குவதால், திருமணம் கைகூடும், வேலைவாய்ப்பு, கடன் நிவர்த்தி உண்டாகும். பில்லி சூனியம் அண்டாது என்று கூறுகிறார்கள். நவக்கிரக பரிகாரம் போன்ற பிரார்த்தனைகள் நல்ல பலனைக் கொடுப்பதாகப் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர் சென்றால் தவளகுப்பம் என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து 2 கி.மீ உள்ளே சென்றால் அபிஷேகபாக்கம் என்ற சிறு கிராமம் உள்ளது. இங்கேதான் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.

கன்னிராசிக்காரர்கள் திருமண யோகம் பெற விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கும் சென்று வழிபட வேண்டும். இவ்வூரில் கோயில் கொண்டிருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் புற்று மண்ணால் சுயம்புவாக உருவானவள். நான்கு திருக்கரங்களுடன், இடக் காலை மடித்து, வலக் காலைத் தொங்கவிட்டபடி, பிரம்ம கபாலத்தை மிதித்தபடி, வடக்கு நோக்கி அருள்காட்சி தருகிறாள்.

அம்மனுக்கு அருகிலேயே மிகப் பெரிய புற்றும் காணப்படுகிறது. புற்று வடிவில் தோன்றியதால், அம்மனுக்கு ‘புற்று தேவி’ என்றும் பெயர். தண்டேஸ்வரி என்ற திருப்பெயரும் உண்டு.கோயிலுக்குத் தெற்கே பெரிய உருவமாக ‘பெரியாயி’ மல்லாந்து படுத்த நிலையில் அருள்கிறாள். பெரியாயியை வழிபடும் பக்தர்களைத் தீய சக்திகள் அண்டாது.

இந்தக் கோயிலில், பூஜை நடைபெறும்போது புற்று மண்ணைத் தண்ணீரில் கலந்து பக்தர் களுக்குக் கொடுக்கிறார்கள். இந்தத் தீர்த்தத்தை அருந்தினால் புத்திர பாக்கியம் கிடைக்கும், திருமணம் திட்டமிட்டபடி நடைபெறும், நோய்கள் விலகும் என்பது நம்பிக்கை.

தொடர்ந்து மூன்று அமாவாசை தினங்கள் மேல்மலையனூர் கோயிலுக்குச் சென்று, ‘ஊஞ்சல் உற்சவம்’ விழாவைக் கண்டால் குழந்தைப் பேறு, திருமணப் பேறு உள்ளிட்ட அனைத்துவிதமான பேறுகளும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.அமாவாசை தினத்தில் நாள் முழுவதும் கோயில் திறந்தே இருக்கும். தீய சக்திகளை விரட்டுவதற்கு மிகச் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது மேல்மலையனூர். ஆடி வெள்ளிக்கிழமைகள், நவராத்திரி, கார்த்திகை தீபம், தைப் பொங்கல், மாசி தேர்த் திருவிழா ஆகியவை மேல்மலையனூரில் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களாகும். இந்தத் திருவிழா காலங்களில் அம்மனைத் தரிசித்தால் ராகு – கேது தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

அங்காள பரமேஸ்வரிக்கு எலுமிச்சம்பழ மாலை சாத்தி வழிபட்டால், அம்மன் மனம் குளிர்ந்து நம்மை ஆசீர்வதிப்பாள். அம்மனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினால் கணவனைப் பிரிந்திருக்கும் மனைவி, கணவனால் துன்புறுத்தப் படும் பெண்கள் ஆகியோரின் பிரச்சினைகள் நீங்கும்; தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.

ஆஞ்சநேயரை வழிபடுங்கள்…

குரு பகவான் உங்கள் ராசியில் 10&ம் இடத்தை பார்க்கிறார். இது பெண்களுக்கு ஏற்றத்தை தரும். தொழிலில் ஈடுபட்டால் மேன்மை உண்டாகும். நிலம் வாங்கும் யோகம் இருக்கிறது. பத்தை குரு பார்த்தால் பணி யில் நிறைவு உண்டாகும் என்று சொல்வார்கள். எனவே பணி செய்யும் இடங்களில் கவனம் தேவை.
கன்னி ராசிகாரர்களுக்கு சனி மற்றும் கேதுவின் ஆதிக்கத்தை குரு பகவான் கட்டுப்படுத்துகிறார் என்றாலும் ராகுவுக்கும், கேதுவுக்கும் வழி பாடு செய்வது நல்லது. இதனால் திருமண தடைகள் விலகும். மதுரை யில் உள்ள இம்மையில் நன்மை செய்வார் ஆலயத்துக்கு சென்று சிவன், பார்வதியுடன் தட்சிணா மூர்த்தியையும் வழிபட வேண்டும்.

சதுர்த்தி நாட்களில் விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவது மிகவும் நல்லது.

செவ்வாய்க்கிழமைகளில் முருகன் வழிபாடு செய்தால் திருமண பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறும். குருபகவான் சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் செல்வதால் சுபகாரியங்கள் கைகூடும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

The post கன்னி ராசிக்காரர்களின் திருமண யோகம் appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Latest Images

Trending Articles


சாலை விபத்துகளும், அவற்றைத் தடுப்பதற்கான சட்டத் தேவைகளும்..!


Baywatch (2017) Tamil Dubbed Movie HD 720p Watch Online


நீங்கள் வாசித்த கிரைம் நாவல் கதாபாத்திரங்கள் சினிமாவுக்கு வருகிறார்கள்!


சித்தன் அருள் - 1613 - அன்புடன் அகத்தியர் - அம்பாஜி சக்தி பீடம்!


சித்தன் அருள் - 768 - தாமிரபரணி புஷ்கரம், அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர்!


வட மாநிலங்களும் தவிப்பு டெல்லியில் 120 டிகிரி வெயில்: ராஜஸ்தானில்...


சென்ற வார பாக்யா ஜனவரி 20-26 இதழில் என் ஜோக்ஸ்!


புதுக்கோட்டையில் வலைப்பதிவு பயிற்சி


வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்


சித்தன் அருள் - 1167 - பொதிகை மலையும், திரிகூட மலையும்!



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>