ராமாயணம் இயற்றிய வால்மீகி முனிவர் ஒரு முறை திருநீர்மலை திவ்ய தேசத்திற்கு வந்தார்….. மலைமீது ஏறி சயனகோலத்தில் அரங்கனையும்… அமர்ந்த திருக்கோலத்தில் சாந்த நரசிம்மரையும்…. நடந்த திருக்கோலத்தில் திரிவிக்கரமரையும் தரிசித்தார்…. ஆனாலும் அவர் மலை மீதிருந்து கீழே இறங்கி வரும் போது மனத்தில் அமைதி இல்லை…. இனம் புரியாத குறைவாட்டி வதைத்தது….
அதற்குக் காரணம்…. எம் மனம் கவர்ந்த ஸ்ரீ ராமபிரான் இங்கே இல்லை என்பதை அவர் உணர்ந்தார்…. அவருடைய திரு கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது…. மனது ஸ்ரீ ராம தரிசனத்திற்கு ஏங்கியது…. அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்….” ஸ்ரீமன் நாராயணன் அவருடைய பிரார்த்தனைக்குச் செவிசாய்த்தார்….
மலையில் உள்ள அரங்கனே ஸ்ரீராமராகவும்…. ஸ்ரீலட்சுமிதேவியே…. ஸ்ரீ சீதாதேவியாகவும்…. ஆதிசேஷன் லட்சுமணனாகவும்…. சங்கு சக்கரங்கள்…. சத்ருக்கனர்… பரதனாகவும்…..விஷ்வக்சேனர்… சுக்ரீவனாகவும்….. கருடாழ்வாரே…. ஸ்ரீ ஆஞ்சநேயராகவும் சூழரம்மியமான நீர் வண்ண ரூபத்தில் திரு காட்சி கொடுத்தார்….
பெருமாளின் தரிசனம் கண்டு மனம் உருகிய வால்மீகி இதே திருக்கோலத்தில் எப்போதும் இங்கே எழுந்தருளி சேவை சாதிக்க வேண்டும் என்று பகவானிடம் பிரார்த்தனை செய்தார்…. அவரது கோரிக்கையை நிறைவேற்றினார் பகவான் என்பது வரலாறு….
தாமரை மலர் பீடத்தில் முத்திரை பொருந்திய திருக்கரத்துடன்… நீர் வண்ண ரூபத்தில்…. திருமார்பில் சாளக்கிராம மாலை அலங்கரிக்க…சேவை சாதிப்பதை அடியோங்கள் இன்றும் தரிசிக்கலாம்…..
“ஆழ்வாரைத் தடுத்த அகழி….”
இந்த மலைக்கு ஒரு முறை திருமங்கையாழ்வார் வந்தபோது…. தொடர் மழை பெய்து மலையைச் சுற்றி அகழி போல் தண்ணீர் தேங்கி நின்றது…. பெருமாளைச் சேவிக்கும் ஆசையில் தண்ணீர் வடியும் என்று ஆழ்வார் காத்திருந்தார்….
ஒரு நாள்… இரண்டு நாள் அல்ல….. மாதங்கள் ஆகியும் தண்ணீர் வடியவில்லை…. மனம் தளராத ஆழ்வார் மேலும் காத்திருந்தார்…. ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பிறகே தண்ணீர் முழுவதும் வடிந்து…. திருக்கோயிலுக்குச் செல்லும் வழி புலப்பட்டது….
பிறகு ஆழ்வார் தாய்ப்பசுவை நோக்கி ஓடும் கன்றினைப் போல…. நீர் வண்ணப் பெருமாளை நோக்கி தாளாத காதலுடன் ஓடிச் சென்றார்….கண்குளிர தரிசனம் செய்தார்….பாசுரங்களைப் பாடி மங்களாசாசனம் செய்தார்…..
திருமங்கையாழ்வார் வந்தபோது நீர் சூழ்ந்த மலையாக இருந்த காரணத்தினால் இத்தலத்திற்கு…..”திரு நீர்மலை ” என்ற திருநாமம் வழங்கலாயிற்று…. அதற்கு முன்னால் “காண்டவ வனம்” என்ற பெயரே வழங்கி வந்தது…. இதனையே ஆழ்வார் ஒரு பாசுரத்தில்….
“காண்டா வனம் என்பதோர்… காடமராக்
கரையானது கண்டவன் நிற்க….. “
என்று பாடுவதில் இருந்து அறிய முடிகிறது…..
” திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்”
“எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்”
அடியேன்
வகுளாபரணராமாநுஜதாசன்
The post வால்மீகியின் பிரார்த்தனை appeared first on SwasthikTv.