தினமும் காலையில் இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லி வந்தால் உங்களை பீடித்திருக்கும் எத்தகைய கிரகங்களின் தோஷங்களையும் நீக்கும்.
விநாயகர்பலருக்கும் ஒன்பது கோள்களினால் கிரக தோஷங்கள் ஏற்படுகின்றது. இந்த தோஷங்களால் அவர்கள் வாழ்வில் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். எத்தகைய வினைகளையும் நீக்கும் நாயகனாக விநாயக பெருமான் இருக்கிறார். அவரை வழிபடுவதற்கான “விநாயகர் ஸ்லோகம்” இதோ.
ராசிஸ் தாரா திதிர் யோக வார காரண அம்சக
லக்னோ ஹோரா காலசக்ரோ மேரு சப்தர்ஷயோ த்ருவ
ராஹூர் மந்த கவிர் ஜீவ புதோ பௌம சசீ ரவிஹி
கால ஸ்ருஷ்டி ஸ்திதிர் விஸ்வ ஸ்தாவரோ ஜங்கமோ ஜகத்
விநாயகரின் ஆற்றலை கூறும் மந்திர ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் எழுந்ததும் குளித்து முடித்து விட்டு அருகிலுள்ள வீட்டில் உள்ள விநாயகர் படத்திற்கு முன்போ அல்லது அருகிலுள்ள விநாயகர் கோவிலுக்கோ சென்று, விநாயகருக்கு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி மேற்கண்ட ஸ்லோகத்தை 108 முறை துதித்து வழிபடுவதால் உங்களை பீடித்திருக்கும் எத்தகைய கிரகங்களின் தோஷங்களையும் நீக்கும். நினைத்த காரியங்கள் தடைகள் தாமதங்கள் இன்றி உடனடியாக நிறைவேறும்.
The post நவகிரக தோஷங்கள் நீக்கும் விநாயகர் ஸ்லோகம் appeared first on SwasthikTv.